புல்லட் ரயிலை மிஞ்சும் வேகத்தில் பறந்த பைக்.. வைரலாகும் இந்த வீடியோவை பார்த்தால் அதிர்ச்சியடைவீர்கள்

புல்லட் ரயிலை மிஞ்சும் வேகத்தில் பைக் ஒன்று சாலையில் பறந்தது. சமூக வலை தளங்களில் தற்போது வைரலாகி கொண்டிருக்கும் இந்த வீடியோவை பார்த்தால் நீங்கள் அதிர்ச்சியடைய கூடும்.

புல்லட் ரயிலை மிஞ்சும் வேகத்தில் பறந்த பைக்.. வைரலாகும் இந்த வீடியோவை பார்த்தால் அதிர்ச்சியடைவீர்கள்

இரு சக்கர வாகனங்களில், உயிரை பணயம் வைத்து அதிவேகத்தில் பயணம் செய்யும் கலாச்சாரம் இந்திய இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்திய இளைஞர்கள் மத்தியில், ஸ்போர்ட்ஸ் மற்றும் சூப்பர் பைக்குகள் வெகு வேகமாக பிரபலம் அடைந்து வருகின்றன.

புல்லட் ரயிலை மிஞ்சும் வேகத்தில் பறந்த பைக்.. வைரலாகும் இந்த வீடியோவை பார்த்தால் அதிர்ச்சியடைவீர்கள்

ஸ்போர்ட்ஸ் மற்றும் சூப்பர் பைக்குகள் மிகவும் விலை உயர்ந்தவை. ஆனால் இத்தகைய பைக்குகளில்தான் மின்னல் வேகத்தில் பறக்க முடியும். இதன் காரணமாகதான் விலையை சற்றும் பொருட்படுத்தாமல், ஸ்போர்ட்ஸ், சூப்பர் பைக்குகளை இந்திய இளைஞர்கள் அதிக அளவில் வாங்கி கொண்டுள்ளனர்.

புல்லட் ரயிலை மிஞ்சும் வேகத்தில் பறந்த பைக்.. வைரலாகும் இந்த வீடியோவை பார்த்தால் அதிர்ச்சியடைவீர்கள்

இந்த வரிசையில், இந்திய இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி கொண்டிருக்கும் பைக்குகளில் ஒன்று சுஸுகி ஹயபுசா (Suzuki Hayabusa). இந்திய மார்க்கெட்டில் மிகவும் புகழ்பெற்ற பைக்குகளில் ஒன்றாக சுஸுகி நிறுவனத்தின் ஹயபுசா திகழ்கிறது.

புல்லட் ரயிலை மிஞ்சும் வேகத்தில் பறந்த பைக்.. வைரலாகும் இந்த வீடியோவை பார்த்தால் அதிர்ச்சியடைவீர்கள்

ஸ்போர்ட்ஸ்-டூரிங் (Sports-touring) பைக்கான சுஸுகி ஹயபுசா மிகவும் சக்தி வாய்ந்தது. உலகின் மிக வேகமான பைக்குகளில் ஒன்றாக சுஸுகி ஹயபுசா கருதப்படுகிறது. இதில், மிக நீண்ட தூர பயணங்களை கூட மிகவும் சௌகரியமாக மேற்கொள்ளலாம்.

MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!

புல்லட் ரயிலை மிஞ்சும் வேகத்தில் பறந்த பைக்.. வைரலாகும் இந்த வீடியோவை பார்த்தால் அதிர்ச்சியடைவீர்கள்

சுஸுகி ஹயபுசா பைக்கில், 1340 சிசி, இன் லைன், 4 சிலிண்டர், லிக்யூட் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 197 பிஎச்பி பவர் மற்றும் 155 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தி சாலைகளில் சீறிப்பாயும் வல்லமை வாய்ந்தது.

புல்லட் ரயிலை மிஞ்சும் வேகத்தில் பறந்த பைக்.. வைரலாகும் இந்த வீடியோவை பார்த்தால் அதிர்ச்சியடைவீர்கள்

இளைஞர்களின் வேக தாகத்தை தணிக்கும் பைக்குகளில் ஒன்றாக சுஸுகி ஹயபுசா திகழ இதுவே காரணம். என்றாலும் சிலர், சுஸுகி ஹயபுசா பைக்கை கண் மூடித்தனமான வேகத்தில் ஓட்டுகின்றனர். அப்படி ஒரு இளைஞர் சுஸுகி ஹயபுசா பைக்கை அதிவேகத்தில் ஓட்டிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

புல்லட் ரயிலை மிஞ்சும் வேகத்தில் பறந்த பைக்.. வைரலாகும் இந்த வீடியோவை பார்த்தால் அதிர்ச்சியடைவீர்கள்

பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வெகு வேகமாக பரவி வரும் இந்த வீடியோ, காண்பவரை நிச்சயமாக அதிர்ச்சியடைய வைக்கும். ஏனெனில் சுஸுகி ஹயபுசா பைக்கை, அந்த இளைஞர் ஓட்டிய வேகம் அப்படி.

புல்லட் ரயிலை மிஞ்சும் வேகத்தில் பறந்த பைக்.. வைரலாகும் இந்த வீடியோவை பார்த்தால் அதிர்ச்சியடைவீர்கள்

கர்நாடக மாநிலம் ஹாசன் (Hassan) பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எண்-48ல் (NH-48) இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சுஸுகி ஹயபுசா பைக்கை ஓட்டிய இளைஞரின் ஹெல்மெட்டில் இருந்த கேமராவில், அவர் வேகமாக ஓட்டிய காட்சி பதிவாகியுள்ளது.

புல்லட் ரயிலை மிஞ்சும் வேகத்தில் பறந்த பைக்.. வைரலாகும் இந்த வீடியோவை பார்த்தால் அதிர்ச்சியடைவீர்கள்

சுஸுகி ஹயபுசா பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 312 கிலோ மீட்டர்கள். அதனை எட்ட அந்த இளைஞர் முயற்சி செய்கிறார். ஆனால் முடியவில்லை. என்றாலும் கூட மணிக்கு 300 கிலோ மீட்டர்கள் என்ற படுபயங்கரமான வேகத்தை ஒரு வழியாக அவர் எட்டி விட்டார்.

புல்லட் ரயிலை மிஞ்சும் வேகத்தில் பறந்த பைக்.. வைரலாகும் இந்த வீடியோவை பார்த்தால் அதிர்ச்சியடைவீர்கள்

இரு சக்கர வாகனம் ஒன்றில், மணிக்கு 300 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. ஏனெனில் இது கிட்டத்தட்ட ஒரு புல்லட் ரயிலுக்கு இணையான வேகம் என்பது குறிப்பிடத்தக்கது. விபின் மான்பென் வெளியிட்டுள்ள அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் மிகவும் ஆபத்தானவை. ஏனெனில் இங்கு பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பது கிடையாது. எவ்வித முன்னறிவிப்பும் செய்யாமல் திடீரென லேன்களை (Lanes) மாற்றம் செய்வது இங்கு சர்வ சாதாரணம்.

புல்லட் ரயிலை மிஞ்சும் வேகத்தில் பறந்த பைக்.. வைரலாகும் இந்த வீடியோவை பார்த்தால் அதிர்ச்சியடைவீர்கள்

அதேபோல் தவறான திசைகளில் இருந்து ஓவர் டேக் எடுப்பதையும் இங்கு பெரும்பாலான வாகன ஓட்டிகள் வழக்கமாக வைத்துள்ளனர். இதுதவிர கால்நடைகள் வேறு திடீர் திடீரென குறுக்கே வரும். இத்தனை அபாயங்கள் உள்ள சூழலில் இவ்வளவு வேகத்தில் பைக் ஓட்டுவது என்பது மிகவும் ஆபத்தானது.

புல்லட் ரயிலை மிஞ்சும் வேகத்தில் பறந்த பைக்.. வைரலாகும் இந்த வீடியோவை பார்த்தால் அதிர்ச்சியடைவீர்கள்

அப்போது என்ன செய்யலாம்?

இந்தியாவில் தற்போது ஆட்டோமொபைல் கலாச்சாரம் மெல்ல மெல்ல வேரூன்றி கொண்டுள்ளது. நாட்டில் ஆங்காங்கே ஸ்பீடு ஃபெஸ்டிவல்ஸ் (Speed Festivals) எனப்படும் நிகழ்ச்சிகள் பரவலாக நடைபெற தொடங்கியுள்ளன.

புல்லட் ரயிலை மிஞ்சும் வேகத்தில் பறந்த பைக்.. வைரலாகும் இந்த வீடியோவை பார்த்தால் அதிர்ச்சியடைவீர்கள்

அதிவேகத்தில் பைக் ஓட்ட வேண்டும் என்ற ஆர்வமுள்ளவர்கள், இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். அங்கு மிகவும் பாதுகாப்பான சூழ்நிலைகளில் பைக்கை அதிவேகத்தில் ஓட்டலாம். அதை விடுத்து விட்டு, தேசிய நெடுஞ்சாலைகளை தேர்வு செய்வது மிகவும் ஆபத்தானது.

More from DriveSpark

Article Published On: Sunday, January 20, 2019, 14:14 [IST]
English summary
Youngster Drove Suzuki Hayabusa At 300 KMPH Speed On An Indian Highway: Video Goes Viral. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+