தமிழகத்தை பின்னுக்கு தள்ளிய பிஹார், உபி... இந்த சூழ்நிலையை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டீங்க!

தொழில் தொடங்க உகந்த மாநிலங்களின் பட்டியலைத் தொடர்ந்து தமிழகம் மற்றுமொரு பட்டியலிலும் கடும் பின்னுக்கு சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரொம்ப கஷ்டம்! தமிழகத்தை பின்னுக்கு தள்ளிய பிஹார், உபி... இந்த நிலையை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டீங்க!

இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான சிறந்த மாநிலங்களின் பட்டியல் மிக சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டது. இந்த பட்டியலில் ஆந்திர மாநிலம் முதல் இடத்தைப் பிடித்திருந்தது. இது 2019ம் ஆண்டிற்கான பட்டியல் ஆகும். 2018ம் ஆண்டிற்கான பட்டியலிலும் ஆந்திர மாநிலமே முதல் இடத்தைப் பிடித்திருந்தது. இதில் தமிழகம் 14 இடத்தைப் பிடித்தது.

ரொம்ப கஷ்டம்! தமிழகத்தை பின்னுக்கு தள்ளிய பிஹார், உபி... இந்த நிலையை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டீங்க!

இந்த பட்டியலில் நிகழ்ந்த ஆச்சரியம் என்னவென்றால் பாஜக ஆளும் மாநிலமான உபி தொழில் தொடங்க உகந்த மாநிலங்களின் வரிசையில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தது. கடந்த 2018ம் ஆண்டு வெளியான பட்டியலில் இந்த மாநிலம் 12வது இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. எனவேதான் ஒட்டுமொத்த நாட்டிற்குமே இந்த பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ரொம்ப கஷ்டம்! தமிழகத்தை பின்னுக்கு தள்ளிய பிஹார், உபி... இந்த நிலையை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டீங்க!

இந்த நிலையில், நாட்டில் அதிகம் மூன்று சக்கர வாகனங்கள் விற்பனையாகும் பட்டியல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதிலும், உபி மாநிலம் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கின்றது. இதைத்தொடர்ந்து, முதல் இடத்தை பிஹார் மாநிலமும், மூன்றாம் இடத்தை மஹாராஷ்டிரா மாநிலமும் பிடித்துள்ளது.

ரொம்ப கஷ்டம்! தமிழகத்தை பின்னுக்கு தள்ளிய பிஹார், உபி... இந்த நிலையை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டீங்க!

அண்மைக் காலங்களாக ஒட்டுமொத்த இந்திய வாகனச் சந்தையுமே கடுமையான விற்பனைச் சரிவில் சிக்கி தவித்து வருகின்றது. குறிப்பாக, கொரோனா வைரசால் நிலவிய முழு பொதுமுடக்க காலத்தில் ஒரு யூனிட் வாகனம்கூட விற்பனையாகவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையில் இருந்து தற்போதே வாகன நிறுவனங்கள் மீள ஆரம்பித்துள்ளன.

ரொம்ப கஷ்டம்! தமிழகத்தை பின்னுக்கு தள்ளிய பிஹார், உபி... இந்த நிலையை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டீங்க!

இம்மாதிரியான சூழ்நிலையிலேயே மாநிலம் வாரியான ஆட்டோ ரிக்ஷா விற்பனை பற்றிய தகவல் வெளியிடப்பட்டிருக்கின்றது. இது ஆகஸ்டு மாத விற்பனைப் பற்றிய தகவலாகும். ஃபடா வெளியிட்டுள்ள தகவலின்படி, முச்சக்கர வாகனங்களின் விற்பனை 69.5 சரிவைச் சந்திருப்பது தெரியவந்துள்ளது. ஆட்டோ விற்பனையைப் போலவே கார் விற்பனை 7.12 சதவீதமும், பைக் விற்பனை 28.7 சதவீதமும் விற்பனைச் சரிவைச் சந்தித்திருக்கின்றது.

ரொம்ப கஷ்டம்! தமிழகத்தை பின்னுக்கு தள்ளிய பிஹார், உபி... இந்த நிலையை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டீங்க!

மாநில வாரியான ஆட்டோ விற்பனை விபரம்:

மாநில வாரியான விற்பனையில் திரிபுரா, மிசோரம், ஹிமாச்சல் ஆகிய மாநிலங்கள் நல்ல முன்னேற்றத்தைச் சந்தித்திருக்கின்றன. இதில், மிசோரம் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தைக் காட்டிலும் 223.8 சதவீதம் விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. 2019 ஆகஸ்டில் வெறும் 26 யூனிட்டுகள் ஆட்டோ மட்டுமே விற்பனையாகியிருந்தன. ஆனால், கடந்த ஆகஸ்டு மாதத்தில் 84 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.

ரொம்ப கஷ்டம்! தமிழகத்தை பின்னுக்கு தள்ளிய பிஹார், உபி... இந்த நிலையை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டீங்க!

இதேபோன்று, ஹிமாச்சல் பிரதேசம் 65.22 சதவீத வளர்ச்சியையும், திரிபுரா மாநிலம் 16.25 சதவீத வளர்ச்சியையும் பெற்றிருக்கின்றது. இதில், மணிப்பூர் மாநிலத்தில்தான் மிகப்பெரிய விற்பனை வீழ்ச்சி அரங்கேறியிருக்கின்றது. இந்த மாநிலம் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தைக் காட்டிலும் 100 சதவீத விற்பனை வீழ்ச்சியைப் பெற்றிருக்கின்றது.

ரொம்ப கஷ்டம்! தமிழகத்தை பின்னுக்கு தள்ளிய பிஹார், உபி... இந்த நிலையை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டீங்க!

அதாவது, 2019 ஜூலையில் 120 என்ற விற்பனை எண்ணிக்கையைப் பெற்றிருந்தது. இது நடப்பாண்டு ஆகஸ்டில் முழுவதுமாக சரிந்து பூஜ்ஜியம் எண்ணிக்கையைப் பெற்றிருக்கின்றது. மணிப்பூரைப் போலவே லடாக், சிக்கிம் ஆகிய மாநிலங்களும் பூஜ்ஜிய விற்பனையைப் பெற்றிருக்கின்றன்.

ரொம்ப கஷ்டம்! தமிழகத்தை பின்னுக்கு தள்ளிய பிஹார், உபி... இந்த நிலையை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டீங்க!

இந்த மாநிலங்களின் கடந்தாண்டு ஆகஸ்டு மாத விற்பனையும் பூஜ்ஜியம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த ஏற்ற இறக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் விற்பனையான ஆட்டோக்களின் எண்ணிக்கை 16,857 யூனிட்டுகளாக உள்ளன. இதுவே கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் 38,436 யூனிட்டுகள் குறைவாகும்.

ரொம்ப கஷ்டம்! தமிழகத்தை பின்னுக்கு தள்ளிய பிஹார், உபி... இந்த நிலையை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டீங்க!

விற்பனை விபரம் பற்றிய தகவலை பட்டியலாக கீழே காணலாம்.

வரிசை மாநிலம் ஆகஸ்டு-20 ஆகஸ்டு-19 வளர்ச்சி (%)
1 பிஹார் 3,312 5,222 -36.58
2 உபி 2,954 8,981 -67.11
3 மஹாராஷ்டிரா 1,513 7,680 -80.30
4 அசாம் 1,125 2,383 -52.79
5 டெல்லி 1,042 2,641 -60.55
6 கர்நாடகா 934 4,331 -78.43
7 மேற்கு வங்கம் 913 1,559 -41.44
8 கேரளா 777 2,272 -65.80
9 தமிழ்நாடு 609 3,380 -81.98
10 ஜார்கண்ட் 603 1,784 -66.20
11 ஒடிசா 585 1,888 -69.01
12 குஜராத் 552 6,077 -90.92
13 திரிபுரா 465 400 16.25
14 ஹரியானா 418 2,200 -81.00
15 ராஜஸ்தான் 408 1,808 -77.43
16 உத்தர்காண்ட் 165 700 -76.43
17 ஜம்மு மற்றும் காஷ்மீர் 101 105 -3.81
18 மிசோரம் 84 26 223.08
19 சத்திஸ்கர் 81 535 -84.86
20 பஞ்சாப் 75 762 -90.16
21 சண்டிகர் 61 134 -54.48
22 ஹிமாச்சல் பிரதேசம் 38 23 65.22
23 மேகலயா 26 69 -62.32
24 அருணாச்சல பிரதேசம் 4 93 -95.70
25 கோவா 4 5 -20.00
26 புதுச்சேரி 4 8 -50.00
27 நாகலாந்து 3 102 -97.06
28 டி அண்ட் டி 1 5 -80.00
29 மணிப்பூர் 0 120 -100.00
30 லடாக் 0 0 0
31 சிக்கிம் 0 0 0
ரொம்ப கஷ்டம்! தமிழகத்தை பின்னுக்கு தள்ளிய பிஹார், உபி... இந்த நிலையை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டீங்க!

பட்டியலின்படி, தமிழகத்திலும் கடுமையான விற்பனைச் சரிவு ஏற்பட்டிருப்பது தெரிகின்றது. தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 3,380 யூனிட் ஆட்டோக்கள் விற்பனையாகியிருந்தன. ஆனால், நடப்பாண்டு ஆகஸ்டு மாதத்திலோ வெறும் 609 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருக்கின்றன. இது 81.98 சதவீத விற்பனை வீழ்ச்சியாகும். இதனாலயே இந்த பட்டியலில் தமிழகம் 9ம் இடத்தைப் பிடித்திருக்கின்றது.

ரொம்ப கஷ்டம்! தமிழகத்தை பின்னுக்கு தள்ளிய பிஹார், உபி... இந்த நிலையை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டீங்க!

இதேபோன்று, தமிழகத்திற்கு முன்னால் 8ம் இடத்தைப் பிடித்திருக்கும் கேரள மாநிலமும் கடும் விற்பனை வீழ்ச்சியைப் பெற்றிருக்கின்றது. அங்கு 65.80 சதவீத விற்பனை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்றே பிற தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகியவையும் விற்பனை வீழ்ச்சியையே பதிவு செய்திருக்கின்றன.

Most Read Articles

English summary
2020 Aug Statewise Three Wheeler Sale Report. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X