2020-க்கான அப்கிரேட்களை பெற்றுவரும் மலிவான பிஎம்டபிள்யூ பைக்குகள்... அக்டோபரில் டெலிவிரி ஆரம்பம்...

2020 பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் அட்வென்ஜெர் ரக மாடலான ஜி310ஜிஎஸ் என்ற இரு பைக்கும் அடுத்த மாதத்தில் ஷோரூம்களை வந்தடைய தயாராகவுள்ளன. இந்த நிலையில் இவற்றின் அறிமுகம் குறித்த நம்பும்படியான தகவல் டீலர்களிடம் இருந்து வெளிவந்துள்ளது.

2020-க்கான அப்கிரேட்களை பெற்றுவரும் மலிவான பிஎம்டபிள்யூ பைக்குகள்... அக்டோபரில் டெலிவிரி ஆரம்பம்...

இந்த தகவலின்படி பார்க்கும்போது இந்த இரு பிஎம்டபிள்யூ பைக்குகளும் அடுத்த அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அறிமுகமாகலாம். மேலும் இந்த அறிமுகத்தை தொடர்ந்து இவற்றின் டெலிவிரி பணிகளும் உடனடியாக துவங்கப்படவுள்ளன.

2020-க்கான அப்கிரேட்களை பெற்றுவரும் மலிவான பிஎம்டபிள்யூ பைக்குகள்... அக்டோபரில் டெலிவிரி ஆரம்பம்...

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் இவற்றின் டெலிவிரிகள் அக்டோபர் 10ஆம் தேதியில் இருந்து துவங்க வாய்ப்புள்ளது. மேலும் புதிய ஜி310ஆர் மற்றும் ஜி310ஜிஎஸ் பைக்குகளுக்கான முன்பதிவுகளையும் டீலர்கள் ரூ.50,000 என்ற முன்தொகையுடன் ஏற்று கொண்டுவருகின்றனர்.

2020-க்கான அப்கிரேட்களை பெற்றுவரும் மலிவான பிஎம்டபிள்யூ பைக்குகள்... அக்டோபரில் டெலிவிரி ஆரம்பம்...

டிசைன் மற்றும் என்ஜின் அப்கிரேட்களுடன் இந்த இரு பைக்குகளின் எக்ஸ்ஷோரூம் விலைகளும் அவற்றின் விற்பனைக்கு மிக பெரிய உந்துதலாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிஎம்டபிள்யூவின் இந்த ஜி310ஆர் மற்றும் ஜி310ஜிஎஸ் பைக்குகள் முதன்முதலாக 2015ல் உலகளவில் அறிமுகமாகின.

2020-க்கான அப்கிரேட்களை பெற்றுவரும் மலிவான பிஎம்டபிள்யூ பைக்குகள்... அக்டோபரில் டெலிவிரி ஆரம்பம்...

அதற்கு பிறகு தற்போது இரண்டும் முக்கியமான அப்கிரேட்களை பெற்றுள்ளன. இதற்கிடையில் வெளியிடப்பட்டுள்ள டீசர் வீடியோவில் பைக் எல்இடி டிஆர்எல்களுடன் ரீடிசைனில் ஹெட்லேம்ப் மற்றும் மறுவேலை செய்யப்பட்ட டெயில்லைட் யூனிட் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளதை காட்டப்பட்டுள்ளது.

2020-க்கான அப்கிரேட்களை பெற்றுவரும் மலிவான பிஎம்டபிள்யூ பைக்குகள்... அக்டோபரில் டெலிவிரி ஆரம்பம்...

அதேபோல் எக்ஸாஸ்ட் அமைப்பும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. அசத்தலான கிராஃபிக்ஸ் உடன் பைக்கிற்கு புதிய நிற தேர்வுகள் வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் பிரிவில் நிலவும் விற்பனை போட்டியினை சமாளிக்க எல்சிடி யூனிட்டிற்கு மாற்றாக ப்ளூடூத் சார்ந்த ஸ்மார்ட்போன் இணைப்பு வசதியுடன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு டிஎஃப்டி திரை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2020-க்கான அப்கிரேட்களை பெற்றுவரும் மலிவான பிஎம்டபிள்யூ பைக்குகள்... அக்டோபரில் டெலிவிரி ஆரம்பம்...

இந்த திரையின் மூலம் நாவிகேஷன், வாகன பயணத்தூரம் உள்ளிட்டவற்றையும் பெற முடியும். பிஎம்டபிள்யூ ஜி310 இரட்டை பைக்குகளில் ஒரே 313சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் பிஎஸ்4 தரத்தில் 34 பிஎச்பி மற்றும் 28 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக பைக்கிற்கு வழங்கியது.

2020-க்கான அப்கிரேட்களை பெற்றுவரும் மலிவான பிஎம்டபிள்யூ பைக்குகள்... அக்டோபரில் டெலிவிரி ஆரம்பம்...

இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த ட்ரான்ஸ்மிஷன் ஆற்றலை ஸ்லிப்பர்-க்ளட்ச் மற்றும் ரைட்-பை-வயர் வசதிகளையும் கொண்டுள்ளது. 2020 பிஎம்டபிள்யூ ஜி310 ட்வின் பைக்குகளின் விலைகள் அதிகப்படியாக நிர்ணயிக்கப்படும் என்று ஏற்கனவே கூறியிருந்தோம்.

2020-க்கான அப்கிரேட்களை பெற்றுவரும் மலிவான பிஎம்டபிள்யூ பைக்குகள்... அக்டோபரில் டெலிவிரி ஆரம்பம்...

எந்த அளவிற்கு என்றால், ஜி310ஆர் மற்றும் ஜி310ஜிஎஸ் பைக்குகளின் பிஎஸ்4 வெர்சன்களின் விலைகள் ரூ.2.99 லட்சம் மற்றும் ரூ.3.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த விலைகள் 2020ஆம் ஆண்டிற்கான அப்கிரேட்களினால் ரூ.20,000- ரூ.25,000 வரையில் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.

Most Read Articles

English summary
2020 BMW G310R and G310GS BS6 launch and deliveries details. Read in Telugu.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X