ஹீரோவின் முதல் 160சிசி பைக்... இந்திய அறிமுகம் எப்போது தெரியுமா..?

புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கை இன்று ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சந்தையில் காட்சிப்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தில் இருந்து அறிமுகமாகும் முதல் 160சிசி மோட்டார்சைக்கிளாக விளங்கவுள்ள இந்த புதிய மோட்டார்சைக்கிளை பற்றி விரிவாக இந்த செய்தியில் காண்போம்.

ஹீரோவின் முதல் 160சிசி பைக்... இந்திய அறிமுகம் எப்போது தெரியுமா..?

எக்ஸ்ட்ரீம் 200ஆர் மற்றும் எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடல் பைக்குகளுக்கு பிறகு எக்ஸ்ட்ரீம் வரிசையில் வெளியாகும் மூன்றாவது மாடல் இந்த எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஆகும். ஹீரோ நிறுவனத்தின் 1.ஆர் கான்செப்ட்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய 160சிசி பைக்கை ஏற்கனவே கடந்த ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்ற மோட்டார் கண்காட்சியில் இந்நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது.

ஹீரோவின் முதல் 160சிசி பைக்... இந்திய அறிமுகம் எப்போது தெரியுமா..?

பஜாஜ் டோமினார் மற்றும் அப்பாச்சி 160 4வி மாடல்களில் உள்ளதை போன்ற முழுவதும் எல்இடி தரத்திலான ஹெட்லைட்ஸை கொண்டுள்ள இந்த புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஏபிஎஸ் உடன் உள்ள பெடல் டிஸ்க் ப்ரேக்குகள் மற்றும் ஸ்கஃப்பி மஃப்லர் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது.

ஹீரோவின் முதல் 160சிசி பைக்... இந்திய அறிமுகம் எப்போது தெரியுமா..?

1.ஆர் கான்செப்ட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதால் ட்யூல்-டோனில் கருப்பு மற்றும் வெள்ளை நிற தேர்வை இந்த புதிய ஹீரோ பைக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் மாடல் பைக்குகளுக்கான லோகோ இந்த புதிய பைக்கில் பெட்ரோல் டேங்கின் மீது பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பெட்ரோல் டேங்க் இருக்கை அடியிலும் நீட்டிக்கப்பட்டதாக உள்ளது. முரட்டுத்தனமான வடிவில் எக்ஸாஸ்ட் அமைப்பு என மொத்த பைக்கும் மிகவும் காஸ்ட்லீயான தோறத்த்தில் காட்சியளிக்கிறது.

ஹீரோவின் முதல் 160சிசி பைக்... இந்திய அறிமுகம் எப்போது தெரியுமா..?

அலாய் சக்கரங்களுக்கு பக்கவாட்டில் வலிமையான தூண் போன்ற ஸ்ட்ரிப்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இருக்கை பிளவுப்படாமல் ஸ்போர்ட்டியான தோற்றத்தில் உள்ளது. இதனால் பைக்கின் பின்பகுதியின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கில் 160சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜினை ஹீரோ நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-ல் 15 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்-ல் 14 என்எம் டார்க் திறனையும் பைக்கிற்கு வழங்கும் ஆற்றல் கொண்டது.

ஹீரோவின் முதல் 160சிசி பைக்... இந்திய அறிமுகம் எப்போது தெரியுமா..?

ஹீரோவின் இந்த புதிய பைக் 0-லிருந்து 60 kmph என்ற வேகத்தை வெறும் 4.7 வினாடிகளில் அடைந்துவிடும். இதனால் இதன் பிரிவில் மிக வேகமான பைக் மாடலாக இது விளங்கவுள்ளது.

தொழிற்நுட்பங்களை பொறுத்துவரையில், 37மிமீ ஷோவா ஃபோர்க்ஸை முன்புறத்திலும், மோனோஷாக்கை பின்புறத்திலும் சஸ்பென்ஷன் அமைப்பாக கொண்டுள்ளது.

ஹீரோவின் முதல் 160சிசி பைக்... இந்திய அறிமுகம் எப்போது தெரியுமா..?

இதன் 17 இன்ச் அலாய் சக்கரங்களில் முன்புறத்திற்கு 110மிமீ ரப்பர் டயரும், பின்புறத்தில் 130மிமீ அகலமான ரேடியல் டயரும் வழங்கப்பட்டுள்ளது. புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் மாடல் பைக்கின் மொத்த கெர்ப் எடை 138.5 கிலோ ஆகும்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மற்றும் பஜாஜ் பல்சர் என்எஸ்160 பைக்குகளுடன் நேரடியாக போட்டியிடவுள்ள இந்த புதிய 160சிசி ஹீரோ பைக் அடுத்த மார்ச் மாதத்தில் சந்தையில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 18, 2020, 15:26 [IST]
English summary
2020 Hero Xtreme 160r unveiled details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+