ஜூலையில் வருகிறது 2020 ஹோண்டா சிபிஆர்250ஆர்ஆர்... எக்ஸ்ஷோரூம் விலையை மட்டும் கேக்காதீங்க...
ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் 2020 சிபிஆர்250ஆர்ஆர் மாடலை வருகிற ஜூலை மாதம் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜப்பானை சேர்ந்த யங் மெஷின் என்ற பத்திரிக்கை நிறுவனம் புதிய செய்தியினை வெளியிட்டுள்ளது. இந்த புதிய பைக் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

ஹோண்டாவின் இந்த புதிய குவார்டர்-லிட்டர் மோட்டார்சைக்கிள் சிறிது அதிகமான என்ஜின் ஆற்றலையும், புதிய தொழிற்நுட்ப வசதிகளையும் பெற்றுள்ளது. இந்த பைக் மாடலின் தற்போதைய வெர்சனில் 249சிசி இணையான-இரட்டை, 8-வால்வு டிஒஎச்சி, லிக்யூடு-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது.

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 12,500 ஆர்பிஎம்-ல் 38 பிஎச்பி பவரையும், 11,000 ஆர்பிஎம்-ல் 23 என்எம் டார்க் திறனையும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வெளிப்படுத்துகிறது. 249சிசி என்ஜின்களை அதிகளவில் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றுவதற்காக 2020 சிபிஆர்250ஆர்ஆர் மாடலில் புதிய டிசைனிலான பிஸ்டன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் அளவு 38 பிஎச்பி பவரில் இருந்து 41 பிஎச்பி வரையில் அதிகரித்துள்ளதாக இந்த பைக் குறித்து வெளியாகி வரும் தகவல்கள் கூறுகின்றன. இதன் என்ஜின் 41 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தினால் விரைவில் சந்தைக்கு வரவுள்ள கவாஸாகியின் இசட்எக்ஸ்-25ஆர் பைக்கிற்கு ஹோண்டாவின் இந்த புதிய 2020 மாடல் பைக் சரியான போட்டி மாடலாக அமையும்.

கவாஸாகி நிறுவனத்தின் இந்த 250சிசி பைக்கில் அதிகப்பட்சமாக 45 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய தரமான இன்-லைன் 4-சிலிண்டர் ஹை-ரெவிங் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய கவாஸாகி பைக் இந்தோனிஷியாவில் அடுத்த மாதம் அறிமுகமாகவுள்ளது.

கூடுதலாக 3 பிஎச்பி பவருடன் ஸ்லிப்பர் க்ளட்ச் மற்றும் பை-டைரக்ஷனல் விரைவான ஷிஃப்டர் (தேர்வாக) உள்ளிட்டவையும் ஹோண்டா சிபிஆர்250ஆர்ஆர் பைக்கில் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை மட்டுமின்றி கீலெஸ் இக்னிஷனை அனுமதிக்கக்கூடிய ஸ்மார்ட் கீ சிஸ்டமும் ஹோண்டாவின் இந்த புதிய குவார்ட்டர்-லிட்டர் மோட்டார்சைக்கிளில் வழங்கப்பட்டுள்ளது.

கீ ஃபாப்-ல் உள்ள 'லாக் பொத்தான்' மூலமாக பைக்கின் உரிமையாளர் ஹேண்டில்பார்களை லாக் மற்றும் அன்லாக் செய்ய முடியும். இந்த ப்ரீமியம் ரக வசதியை டுகாட்டி மல்டிஸ்ட்ராடா மற்றும் பிஎம்டபிள்யூ ஜிஎஸ் சீரிஸ் பைக்குகளில் பார்த்திருப்போம்.
இதன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ப்ளூடூத் இணைப்புடன் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. முத்தின் பளிச்சிடும் வெள்ளை, மேட் ப்ளாக் மற்றும் ப்ரிக்ஸ் ரெட் என்ற மூன்று விதமான நிறத்தேர்வுகளில் புதிய சிபிஆர்250ஆர்ஆர் பைக் விற்பனை செய்யப்படவுள்ளது.

இதில் மேற்கூறப்பட்ட முதல் இரு நிறத்தேர்வுகளின் விலை ரூ.5.84 லட்சமாகவும், மூன்றாவது நிறத்தேர்வில் இந்த 2020 மாடல் பைக் சிறிது காஸ்ட்லீயாக ரூ.6.12 லட்சத்திலும் எக்ஸ்ஷோரூமில் விலையை பெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக்கின் விற்பனை இந்தியாவில் இந்த மார்ச் மாதத்தில் நிறுத்தப்பட்டுவிட்டது. மிக அதிகப்படியான விலையை பெற்றுள்ள இந்த புதிய 250சிசி பைக்கை தொடர்ந்து 500சிசி பைக்குகளை இந்தியாவில் களமிறக்க ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Source: Young Machine


Click it and Unblock the Notifications








