ஜப்பானில் அறிமுகமானது 2020 சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000ஆர்... இந்தியாவிற்கு எப்போது வரும்...?

ஜப்பானிய மோட்டார்சைக்கிள் ப்ராண்டான சுசுகி, 2020 ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000ஆர் பைக்கை ஜப்பானில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 1000சிசி சுசுகி பைக்கின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜப்பானில் அறிமுகமானது 2020 சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000ஆர்... இந்தியாவிற்கு எப்போது வரும்...?

சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் மிகவும் கவர்ச்சிக்கரமான 2020 மோட்டோஜிபி லிவரியை கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது. அதனை தொடர்ந்து மார்ச் 15ல் இந்நிறுவனத்தின் 100வது ஆண்டு நிறைவு விழா வந்தது.

ஜப்பானில் அறிமுகமானது 2020 சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000ஆர்... இந்தியாவிற்கு எப்போது வரும்...?

அப்போது இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட புதிய லிவரியில் 2020 ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000ஆர் பைக்கை காட்சிப்படுத்தியது. இந்த மோட்டோஜிபி ஸ்டைல் பைக்கிற்கு ‘100வது ஆண்டு நிறைவு கலர்' எடிசன் என்ற பெயரை சுசுகி நிறுவனம் சூட்டியது.

ஜப்பானில் அறிமுகமானது 2020 சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000ஆர்... இந்தியாவிற்கு எப்போது வரும்...?

இந்த 1000சிசி பைக்கிற்கு வழக்கமாக வழங்கப்படும் ட்ரிட்டோன் ப்ளூ மெட்டாலிக் மற்றும் மேட் ப்ளாக் மெட்டாலிக் என்ற இரு நிற வேரியண்ட்களின் நிற அமைப்பு புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு சற்று திருத்தியமைக்கப்பட்டு இந்த 2020 பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் அறிமுகமானது 2020 சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000ஆர்... இந்தியாவிற்கு எப்போது வரும்...?

2020 சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000ஆர் பைக்கின் இரு வேரியண்ட்களும் ஜப்பானில் 1,960,000 யென்-ஐ விலையாக பெற்றுள்ளன. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 13.70 லட்சமாகும். இந்த பைக்கில் 999சிசி இன்லைன்-4 சிலிண்டர் லிக்யூடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

ஜப்பானில் அறிமுகமானது 2020 சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000ஆர்... இந்தியாவிற்கு எப்போது வரும்...?

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 13,200 ஆர்பிஎம்-ல் 197 பிஎச்பி பவரையும், 10,800 ஆர்பிஎம்-ல் 117 என்எம் டார்க் திறனையும் பைக்கிற்கு வழங்கும் ஆற்றல் கொண்டது. அதேநேரம் இந்த பைக்கின் ஐரோப்பிய வெர்சனில் இந்த என்ஜின் 202 பிஎச்பி மற்றும் 117.6 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படுகிறது.

ஜப்பானில் அறிமுகமானது 2020 சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000ஆர்... இந்தியாவிற்கு எப்போது வரும்...?

இந்த என்ஜின் சுசுகி ரேஸிங் நிலையற்ற வால்வு நேரம் (SR-VVT)-ஆல் மேம்படுத்தப்படுகிறது. இது கிட்டத்தட்ட யமஹா ஆர்15-ஆர்3 பைக்கில் வழங்கப்படும் VVA சிஸ்டத்துடன் ஒத்தது. இந்த சிஸ்டம் லோ-எண்ட் கிரண்ட் மற்றும் டாப்-எண்ட் டிரைவ்கின்போது பைக்கின் பேலன்ஸை பராமரிக்கும்.

ஜப்பானில் அறிமுகமானது 2020 சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000ஆர்... இந்தியாவிற்கு எப்போது வரும்...?

2020 சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000ஆர் பைக்கில் எலக்ட்ரானிக் உதவி பாகங்களாக மூன்று ரைடிங் மோட்களுடன் 6-அச்சு ஐஎம்யு, 10-நிலை ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், பை-டைரக்‌ஷ்னல் குயிக்‌ஷிஃப்டர், லாஞ்ச் கண்ட்ரோல் மற்றும் குறைவான-ஆர்பிஎம் அசிஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

ஜப்பானில் அறிமுகமானது 2020 சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000ஆர்... இந்தியாவிற்கு எப்போது வரும்...?

பைக்கின் மைலேஜ் 16.6 kmpl ஆக உள்ளது. ஜப்பானில் வருகிற ஜூலை 30ஆம் தேதி முதல் விற்பனையை துவங்கவுள்ள இந்த 1000சிசி பைக் இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. இந்திய சந்தையில் இந்த பைக்கிற்கு முக்கிய போட்டி பைக் மாடலாக பிஎம்டபிள்யூவின் எஸ் 1000 ஆர்ஆர் விளங்கும்.

Most Read Articles

English summary
2020 Suzuki GSX-R1000R Looks Gorgeous In Its New MotoGP Livery
Story first published: Thursday, July 23, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X