2021 டுகாட்டி மான்ஸ்டரின் டீசர் படங்கள் வெளியீடு!! விரைவில் அறிமுகம்..
அடுத்த 2021ஆம் ஆண்டில் சர்வதேச சந்தைகளில் விற்பனைக்கு வரவுள்ள டுகாட்டி மான்ஸ்டர் பைக்கின் டீசர் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் தெரியவந்துள்ள விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சமீபத்தில் 2021 டுகாட்டி மான்ஸ்டர் பைக்கின் டீசர் முதன்முறையாக வெளியிடப்பட்டதை தொடர்ந்து தற்போது மேலும் சில டீசர் படங்களை டுகாட்டி நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த டீசரில் பைக் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவுள்ள தேதியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த டீசரில் 2021 மான்ஸ்டரின் நிழல் போன்ற உருவம் மட்டும் தான் காட்டப்பட்டுள்ளது. இதன்படி பார்க்கும்போது, புதிய மான்ஸ்டர் லோ-ஸ்லங்க் ஹெட்லேம்ப் உடன் முன்பக்கத்தை பெரியளவில் பெற்றுள்ளதை பார்க்க முடிகிறது.

எரிபொருள் டேங்க் பைக்கிற்கு ஸ்போர்டியர் தோற்றத்தை வழங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் நறுக்கப்பட்ட மோட்டார்சைக்கிளாக வெளிவரும் மான்ஸ்டரின் டீசர் படத்தில் பைக்கின் பின்பக்கத்தில் கௌல்-ஐ பார்க்க முடிகிறது. இதனால் இது கூடுதல் ஆக்ஸஸரீயாகவே இருக்கும்.

முதல் டீசர் படத்தில் புதிய டுகாட்டி மான்ஸ்டர் பைக் டார்க் மேட் க்ரே நிறத்தில் கம்பீரமான டிகால்களை எரிபொருள் டேங்கில் கொண்டிருந்தது. மற்றப்படி பைக்கில் வழங்கப்படவுள்ள என்ஜின் தேர்வுகள் குறித்த எந்த அதிகாரப்பூர்வ விபரமும் தற்போதைக்கு இல்லை.

நமக்கு தெரிந்தவரை 2021 டுகாட்டி மான்ஸ்டரில் லிக்யூடு-கூல்டு என்ஜின் யூரோ 5 உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமானதாக பொருத்தப்படும். அதேபோல் புதிய டிசைனில் இரட்டை-பேர்ல் எக்ஸாஸ்ட் சிஸ்டம் மற்றும் ட்ரெல்லிஸ் ஃப்ரேமிற்கு மாற்றாக புதிய காஸ்ட் அலாய் ஃப்ரேமும் இந்த மோட்டார்சைக்கிளில் வழங்கப்படுவதற்கு வாய்ப்புண்டு.

நாளை(டிசம்பர் 2) டுகாட்டி நிறுவனம் புதிய மான்ஸ்டரை உலகளவில் வெளிக்காட்டவுள்ளது. கொரோனா முன்னச்சரிக்கையால் டிஜிட்டல் மூலமாக நடைபெறும் இது தொடர்பான நிகழ்ச்சிக்கு பிறகு தான் பைக்கை பற்றிய முழு விபரமும் கிடைக்க பெறும்.


Click it and Unblock the Notifications








