2021 ஆண்டிற்கான இந்தியன் மோட்டார்சைக்கிள்கள் இவைதான்!! ஆரம்ப விலையே ரூ.15.67 லட்சமா.. அம்மாடியோவ்

அமெரிக்காவின் முதல் மோட்டார்சைக்கிள் நிறுவனமான இந்தியன் மோட்டார்சைக்கிள் அடுத்த 2021ஆம் ஆண்டில் இந்திய சந்தைக்கு கொண்டுவரவுள்ள மோட்டார்சைக்கிள்கள் பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 ஆண்டிற்கான இந்தியன் மோட்டார்சைக்கிள்கள் இவைதான்!! ஆரம்ப விலையே ரூ.15.67 லட்சமா.. அம்மாடியோவ்

2021 இந்தியன் மோட்டார்சைக்கிளின் லைன்-அப்பை ஸ்காட் மாடலில் இருந்து ஆரம்பிப்போம். 2021ஆம் ஆண்டிற்காக முற்றிலும் புதிய நிறங்களில் கொண்டுவரப்படும் ஸ்காட் பைக் மாடல் பாப்பர், ஸ்டாண்டர்ட் மற்றும் பாப்பர் டுவெண்டி என்ற மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

2021 ஆண்டிற்கான இந்தியன் மோட்டார்சைக்கிள்கள் இவைதான்!! ஆரம்ப விலையே ரூ.15.67 லட்சமா.. அம்மாடியோவ்

இவற்றின் எக்ஸ்ஷோரூம் விலைகள் தற்சமயம் முறையே ரூ.15.67 லட்சம், 16.04 லட்சம் மற்றும் ரூ.16.20 லட்சம் என்ற அளவில் உள்ளன. இவற்றில் பொருத்தப்படும் 1133சிசி, லிக்யூடு-கூல்டு வி-ட்வின் என்ஜின் அதிகப்பட்சமாக 5600 ஆர்பிஎம்-ல் 97 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

2021 ஆண்டிற்கான இந்தியன் மோட்டார்சைக்கிள்கள் இவைதான்!! ஆரம்ப விலையே ரூ.15.67 லட்சமா.. அம்மாடியோவ்

இதனுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ஏற்கனவே கூறியதுதான், இதன் மூன்று வேரியண்ட்களிலும் 2021ஆம் ஆண்டிற்கான முக்கிய அப்கிரேட் ஆக புதிய நிறத்தேர்வுகள் தான் கொண்டுவரப்படவுள்ளன. 2021 ஆம் ஆண்டிற்கான அடுத்த இந்தியன் மோட்டார்சைக்கிள்கள் விண்டேஜ் மற்றும் விண்டேஜ் டார்க் ஹார்ஸ் ஆகும்.

2021 ஆண்டிற்கான இந்தியன் மோட்டார்சைக்கிள்கள் இவைதான்!! ஆரம்ப விலையே ரூ.15.67 லட்சமா.. அம்மாடியோவ்

இவை முறையே ரூ.25.81 லட்சம் மற்றும் ரூ.26.63 லட்சம் என்ற விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விண்டேஜ் வரிசை பைக்குகளில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படும் 1890சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 2800 ஆர்பிஎம்-ல் 168 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

2021 ஆண்டிற்கான இந்தியன் மோட்டார்சைக்கிள்கள் இவைதான்!! ஆரம்ப விலையே ரூ.15.67 லட்சமா.. அம்மாடியோவ்

அப்படியே இந்தியன் ஸ்ப்ரிங்ஃபீல்டு மோட்டார்சைக்கிளுக்கு சென்றால், ஸ்டாண்டர்ட் & டார்க் ஹார்ஸ் என்ற இதன் இரு வேரியண்ட்களின் விலைகள் ரூ.33.06 லட்சம் மற்றும் ரூ.29.23 லட்சம் என்ற அளவில் உள்ளன. கிட்டத்தட்ட ஐந்து விதமான நிறங்களில் விற்பனை செய்யப்படும் ஸ்ப்ரீங்ஃபீல்டு மோட்டார்சைக்கிளுடன் சீஃப்டயின் பைக்கையும் 2021ஆம் ஆண்டிற்கான லைன்-அப்பில் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் புகுத்தியுள்ளது.

2021 ஆண்டிற்கான இந்தியன் மோட்டார்சைக்கிள்கள் இவைதான்!! ஆரம்ப விலையே ரூ.15.67 லட்சமா.. அம்மாடியோவ்

ஸ்டாண்டர்ட், டார்க் ஹார்ஸ் மற்றும் லிமிடேட் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த மோட்டார்சைக்கிள் ரூ.31.67 லட்சம், ரூ.33.29 லட்சம் மற்றும் ரூ.33.54 லட்சம் என்ற விலைகளில் சில்லறையாக இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

2021 ஆண்டிற்கான இந்தியன் மோட்டார்சைக்கிள்கள் இவைதான்!! ஆரம்ப விலையே ரூ.15.67 லட்சமா.. அம்மாடியோவ்

கடைசி இந்தியன் மோட்டார்சைக்கிளான ரோட்மாஸ்டர் ஆனது ஸ்டாண்டர்ட், டார்க் ஹார்ஸ் மற்றும் லிமிடேட் என்ற 3 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் சில்லறை விற்பனை விலைகள் ரூ.43.13 லட்சம், ரூ.43.21 லட்சம் மற்றும் ரூ.43.96 லட்சமாக உள்ளன.

2021 ஆண்டிற்கான இந்தியன் மோட்டார்சைக்கிள்கள் இவைதான்!! ஆரம்ப விலையே ரூ.15.67 லட்சமா.. அம்மாடியோவ்

இந்தியன் விண்டேஜ் மோட்டார்சைக்கிளில் வழங்கப்படும் அதே என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகள் தான் மற்ற ஸ்ப்ரீங்ஃபீல்டு, சீஃப்டயின் மற்றும் ரோட்மாஸ்டர் மோட்டார்சைக்கிள்களிலும் வழங்கப்படுகின்றன.

2021 ஆண்டிற்கான இந்தியன் மோட்டார்சைக்கிள்கள் இவைதான்!! ஆரம்ப விலையே ரூ.15.67 லட்சமா.. அம்மாடியோவ்

ஹார்லி டேவிட்சன் இந்திய சந்தையில் தனது தொழிற்சாலையை மூடியுள்ள தற்போதைய சூழலை சரியாக பயன்படுத்தி கொள்ளும் விதமாக தற்போது 2021ஆம் ஆண்டிற்கான தனது பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் லைன்-அப்பை இந்தியன் பிராண்ட் வெளியிட்டுள்ளது. மேலும் லக்சரி க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களுக்கான வாடிக்கையாளர்களை விரைவில் இந்தியாவில் பெற்று விட வேண்டும் எனவும் இந்நிறுவனம் முனைப்புடன் உள்ளது.

Most Read Articles

English summary
2021 Indian Motorcycle Line-up Launched In India: Prices Start At Rs 15.67 Lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X