டுகாட்டி 959 பனிகளே-விற்கு போட்டியாக எஃப்3 800 பைக்கை மேம்படுத்தும் பணியில் எம்வி அகுஸ்டா...

எம்வி அகுஸ்டா நிறுவனம் சில அப்டேட்களுடன் எஃப்3 800 பைக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுப்பட்டு வருவதாக கூறியுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த மேம்படுத்தப்பட்ட எம்வி அகுஸ்டா பைக்கை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

டுகாட்டி 959 பனிகளே-விற்கு போட்டியாக எஃப்3 800 பைக்கை மேம்படுத்தும் பணியில் எம்வி அகுஸ்டா...

2021 எஃப்3 800 பைக்கின் இந்திய அறிமுகத்தை உறுதிப்படுத்தும் வகையில் எம்வி அகுஸ்டா நிறுவனத்தின் சிஇஒ டிமுர் சர்தரோவ் வீடியோ பதிவு ஒன்றை ப்ராண்டின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

டுகாட்டி 959 பனிகளே-விற்கு போட்டியாக எஃப்3 800 பைக்கை மேம்படுத்தும் பணியில் எம்வி அகுஸ்டா...

இதன் மூலம் பைக்கின் அறிமுகம் 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருக்கலாம் என்பது மட்டுமில்லாமல், புதிய எஃப்3 800 பைக்கை பற்றிய சில விபரங்களையும் கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதன்படி பார்த்தோமேயானால் பைக்கின் சில பகுதிகளில் மட்டும் தான் அப்டேட் பணிகள் நடைபெற்று வருகின்றன.

டுகாட்டி 959 பனிகளே-விற்கு போட்டியாக எஃப்3 800 பைக்கை மேம்படுத்தும் பணியில் எம்வி அகுஸ்டா...

இதனால் புதிய எஃப்3 800 பைக்கின் தோற்றத்தில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இருக்காது. இருப்பினும் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில்லைட்கள், எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள், ஸ்மார்ட்போன் இணைப்புடன் வண்ண நிறத்தில் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற நிலையான வசதிகளை இந்த 2021 எம்வி அகுஸ்டா பைக்கில் எதிர்பார்க்கலாம்.

டுகாட்டி 959 பனிகளே-விற்கு போட்டியாக எஃப்3 800 பைக்கை மேம்படுத்தும் பணியில் எம்வி அகுஸ்டா...

இவை மட்டுமின்றி அப்டேட் செய்யப்பட்டு வரும் எஃப்3 800 மாடலில் ஐஎம்யு, ஸ்விட்ச் செய்யக்கூடிய ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ், பல எண்ணிக்கைகளில் ரைடிங் மோட்கள் மற்றும் இரு-வழி குயிக்‌ஷிஃப்டர் போன்ற எலக்ட்ரானிக் தொழிற்நுட்பங்களும் வழங்கப்படும் என தெரிகிறது.

டுகாட்டி 959 பனிகளே-விற்கு போட்டியாக எஃப்3 800 பைக்கை மேம்படுத்தும் பணியில் எம்வி அகுஸ்டா...

எம்வி அகுஸ்டா எஃப்3 800 பைக் மாடல் தற்போதும் இந்திய சந்தையில் விற்பனையில் உள்ளது. தற்சமயம் இந்த பைக்கில் 798சிசி 3-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 13,000 ஆர்பிஎம்-ல் 150 பிஎச்பி பவரையும், 10,500 ஆர்பிஎம்-ல் 88 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

டுகாட்டி 959 பனிகளே-விற்கு போட்டியாக எஃப்3 800 பைக்கை மேம்படுத்தும் பணியில் எம்வி அகுஸ்டா...

புதிய 2021 எஃப்3 800 பைக்கிலும் இதே என்ஜின் அமைப்பு தான் வழங்கப்பட்டாலும், நிச்சயம் இந்திய போக்குவரத்தில் புதியதாக அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமானதாக திருத்தியமைக்கப்பட்டு இருக்கும்.

டுகாட்டி 959 பனிகளே-விற்கு போட்டியாக எஃப்3 800 பைக்கை மேம்படுத்தும் பணியில் எம்வி அகுஸ்டா...

இந்த 2021 பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்கள் குறித்த தகவல்கள் அறிமுக நெருக்கத்தில் வெளியாகவுள்ளன. இத்தகைய அப்டேட்களால் பைக்கின் விலையும் கண்டிப்பாக உயர்த்தப்படும். தற்போதைய எஃப்3 800 மாடல் ரூ.18 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூமில் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Most Read Articles
English summary
2021 MV Agusta F3 800 India Launch Timeline Confirmed: Rivals The Ducati 959 Panigale
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X