சொந்த காசில் சூனியம் வைத்து கொள்ளும் ராயல் என்பீல்டு காதலர்கள்... இந்த மேட்டர யாரும் சொல்ல மாட்டாங்க

ராயல் என்பீல்டு உரிமையாளர்கள் பலர் சொந்த காசில் சூனியம் வைத்து கொண்டுள்ளனர்.

சொந்த காசில் சூனியம் வைத்து கொள்ளும் ராயல் என்பீல்டு காதலர்கள்... இந்த மேட்டர யாரும் சொல்ல மாட்டாங்க

ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுக்க பல நாடுகளில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். உலகின் மிகவும் பழமையான மோட்டார்சைக்கிள் பிராண்டுகளில், ராயல் என்பீல்டு முக்கியமானது. இடைப்பட்ட ஆண்டுகளில் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்து, ராயல் என்பீல்டு நிறுவனம் இன்னமும் வெற்றிநடை போட்டு வருகிறது.

சொந்த காசில் சூனியம் வைத்து கொள்ளும் ராயல் என்பீல்டு காதலர்கள்... இந்த மேட்டர யாரும் சொல்ல மாட்டாங்க

ராயல் என்பீல்டு பைக்கை சொந்தமாக வாங்க வேண்டும் என்ற ஆசையை சிறு வயதில் இருந்தே மனதில் சுமந்து கொண்டு வளர்ந்தவர்கள் இங்கு ஏராளம். அப்படி ஆசை ஆசையாக ராயல் என்பீல்டு பைக்கை வாங்கியதும், அவர்கள் அவசரப்பட்டு சில தவறுகளை செய்து விடுகின்றனர். அப்படி ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் ஓனர்கள் செய்யும் தவறுகளைதான் இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

சொந்த காசில் சூனியம் வைத்து கொள்ளும் ராயல் என்பீல்டு காதலர்கள்... இந்த மேட்டர யாரும் சொல்ல மாட்டாங்க

நீங்கள் புதியதாக ராயல் என்பீல்டு பைக்கை வாங்கியிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு நிச்சயமாக பலன் உள்ளதாக அமையும். அதேபோன்று புதிதாக ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளை வாங்குவதற்கு முடிவு செய்திருப்பவர்களும், இந்த விஷயங்களை எல்லாம் மனதில் வைத்து கொள்ளுங்கள். வாருங்கள் இனி செய்திக்குள் செல்லலாம்.

சொந்த காசில் சூனியம் வைத்து கொள்ளும் ராயல் என்பீல்டு காதலர்கள்... இந்த மேட்டர யாரும் சொல்ல மாட்டாங்க

மலிவு விலை ஆஃப்டர் மார்க்கெட் எக்ஸாஸ்ட்

ராயல் என்பீல்டு பைக்குகளின் சப்தத்திற்கு என்றே தனியாக மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. ஆனால் பழைய ராயல் என்பீல்டு பைக்குகள் கொடுத்த சப்தத்தை, புதிய தலைமுறை மாடல்கள் வழங்குவதில்லை. மாசு உமிழ்வு விதிமுறைகளே இதற்கு காரணமாக உள்ளன. நிலைமை இப்படி இருக்க ராயல் என்பீல்டு பைக்குகளின் சப்தத்தை கேட்டே வளர்ந்தவர்கள், இந்த ஏமாற்றத்தை தாங்கி கொள்வதில்லை.

சொந்த காசில் சூனியம் வைத்து கொள்ளும் ராயல் என்பீல்டு காதலர்கள்... இந்த மேட்டர யாரும் சொல்ல மாட்டாங்க

எனவே மலிவான விலையில் கிடைக்கும் ஆஃப்டர் மார்க்கெட் எக்ஸாஸ்ட்டை அவர்கள் தேர்வு செய்கின்றனர். இருப்பதிலேயே ராயல் என்பீல்டு பைக்குகளில்தான் ஆஃப்டர் மார்க்கெட் எக்ஸாஸ்ட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இது மிகவும் ஆபத்தானது. எந்தவொரு பைக் என்றாலும், எக்ஸாஸ்ட் மிகவும் முக்கியமான பாகங்களில் ஒன்றாக உள்ளது.

சொந்த காசில் சூனியம் வைத்து கொள்ளும் ராயல் என்பீல்டு காதலர்கள்... இந்த மேட்டர யாரும் சொல்ல மாட்டாங்க

இதனால் எக்ஸாஸ்ட்டை பர்ஃபெக்ட்டாக டிசைன் செய்ய, உற்பத்தியாளர்கள் அதிகம் மெனக்கெடுகின்றனர். ஆனால் ஏராளமான ராயல் என்பீல்டு பைக் உரிமையாளர்கள், அதற்கு பதிலாக மார்க்கெட்டில் மலிவான விலையில் கிடைக்கும் ஆஃப்டர் மார்க்கெட் எக்ஸாஸ்ட்டை வாங்கி பொருத்தி கொள்கின்றனர். இவை மோசமான வகையில் டிசைன் செய்யப்பட்டிருக்கும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

சொந்த காசில் சூனியம் வைத்து கொள்ளும் ராயல் என்பீல்டு காதலர்கள்... இந்த மேட்டர யாரும் சொல்ல மாட்டாங்க

இன்ஜின் சக்தியை இது குறைத்து விடும். அத்துடன் மைலேஜ் குறைவதற்கும் இது ஒரு காரணமாக இருக்கும். மேலும் எக்ஸாஸ்ட் வால்வு வேலை செய்வதிலும் இது தடையை உண்டாக்கும். இது மட்டுமின்றி ஆஃப்டர் மார்க்கெட் எக்ஸாஸ்ட்களை பொருத்துவது சட்ட விரோதம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே இப்படிப்பட்ட எக்ஸாஸட்களை பொருத்தினால், போலீசாரின் நடவடிக்கையில் நீங்கள் சிக்க கூடும்.

சொந்த காசில் சூனியம் வைத்து கொள்ளும் ராயல் என்பீல்டு காதலர்கள்... இந்த மேட்டர யாரும் சொல்ல மாட்டாங்க

ஆஃப்டர் மார்க்கெட் அலாய் வீல்

புதிய ராயல் என்பீல்டு பைக்கை வாங்கும் பலரும், உடனடியாக விலை மலிவான அதே சமயம் தரம் இல்லாத ஆஃப்டர் மார்க்கெட் வீல்களை வாங்கி பொருத்தி கொள்கின்றனர். இந்திய மார்க்கெட்டில் ஆஃப்டர் மார்க்கெட் அலாய் வீல்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. இதில், பெரும்பாலான அலாய் வீல்களின் விலை மிகவும் மலிவாக உள்ளது.

சொந்த காசில் சூனியம் வைத்து கொள்ளும் ராயல் என்பீல்டு காதலர்கள்... இந்த மேட்டர யாரும் சொல்ல மாட்டாங்க

எனவே மலிவான, தரம் இல்லாத ஆஃப்டர் மார்க்கெட் அலாய் வீலை உங்கள் புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக்கில் பொருத்துவதாக இருந்தால், எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் இது சாலை விபத்துக்களுக்கு வழிவகுத்து விடும். மேலும் நீங்கள் ஆசை ஆசையாய் வாங்கிய புத்தம் புதிய மோட்டார்சைக்கிள் சேதம் அடைவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

சொந்த காசில் சூனியம் வைத்து கொள்ளும் ராயல் என்பீல்டு காதலர்கள்... இந்த மேட்டர யாரும் சொல்ல மாட்டாங்க

இப்படிப்பட்ட ஆஃப்டர் மார்க்கெட் அலாய் வீல்களை பொருத்தி கொண்டு நீங்கள் சாலையில் சென்றால், பலர் உங்கள் பைக்கைதான் பார்ப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. சாலையில் பலரின் புருவங்களை இது உயர்த்தினாலும், விபத்து அபாயம் இருப்பதை மனதில் கொள்ள வேண்டியுள்ளது. அத்துடன் இன்சூரன்ஸ் க்ளைம் செய்வதிலும் இது பிரச்னைகளை உண்டாக்கலாம்.

சொந்த காசில் சூனியம் வைத்து கொள்ளும் ராயல் என்பீல்டு காதலர்கள்... இந்த மேட்டர யாரும் சொல்ல மாட்டாங்க

பிரஷர் ஹாரன், ஆஃப்டர் மார்க்கெட் லைட்

ராயல் என்பீல்டு பைக் உரிமையாளர்களிடம் காணப்படும் மற்றொரு பொதுவான கெட்ட பழக்கம், பிரஷர் ஹாரன்கள் மற்றும் ஆஃப்டர் மார்க்கெட் லைட்களை பொருத்துவதுதான். இப்படிப்பட்ட ஆக்ஸஸெரீகளை உங்கள் மோட்டார்சைக்கிளில் பார்த்தால், காவல் துறையினர் உங்களுக்கு அபராதம் விதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

சொந்த காசில் சூனியம் வைத்து கொள்ளும் ராயல் என்பீல்டு காதலர்கள்... இந்த மேட்டர யாரும் சொல்ல மாட்டாங்க

மேலும் இந்த ஆஃப்டர் மார்க்கெட் ஆக்ஸஸெரிகள், உங்கள் பைக்கின் எலெக்ட்ரிக்கல் அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே வயரிங் சிஸ்டமை மாற்றுவதற்காக நீங்கள் சில ஆயிரங்களை செலவிட வேண்டிய சூழல் உண்டாகலாம். ஆனால் இதை எல்லாம் எதையும் பொருட்படுத்தாமல், ராயல் என்பீல்டு பைக் உரிமையாளர்கள் சிலர் தொடர்ச்சியாக இத்தகைய செயல்களை செய்து வருகின்றனர்.

சொந்த காசில் சூனியம் வைத்து கொள்ளும் ராயல் என்பீல்டு காதலர்கள்... இந்த மேட்டர யாரும் சொல்ல மாட்டாங்க

இதுபோன்ற தவறுகள் ராயல் என்பீல்டு பைக் உரிமையாளர்களால்தான் அதிகம் செய்யப்படுகிறது. எனவே நீங்கள் புதிய பைக் வாங்கினால், எக்காரணத்தை கொண்டும் இந்த தவறுகளை செய்து விடாதீர்கள். இது தேவையில்லாத வீண் செலவுகளையும், மன உளைச்சலையும் குறைப்பது மட்டுமின்றி, விபத்து வாய்ப்புகளையும் தவிர்க்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 5, 2020, 21:30 [IST]
English summary
3 Common Mistakes Newbie Royal Enfield Bike Owners Make. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+