வயது என்றுமே தடையில்லை.. இளைஞர்கள் தயங்கும் சாகசத்தை அசால்டாக செய்யும் 86 வயது இளைஞர்.. வீடியோ!

இளைஞர்கள் செய்ய தயங்கும் சாகசத்தை 86 வயதுடைய முதியவர் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

வயது என்றுமே தடையில்லை.. இளைஞர்கள் தயங்கும் சாகசத்தை அசால்டாக செய்யும் 86 வயது இளைஞர்.. வீடியோ!

தலைப்பைப் பார்த்த உடன் உங்களில் பலருக்கு சந்தேகமும், குழப்பமும் ஏற்பட்டிருக்கலாம். 86 வயது என்றால் முதியவர் என்றுதானே குறிப்பிட வேண்டும். இவர்கள் என்ன இளைஞர் என குறிப்பிட்டுள்ளனர் என்று கேட்க தோன்றலாம்.

வயது என்றுமே தடையில்லை.. இளைஞர்கள் தயங்கும் சாகசத்தை அசால்டாக செய்யும் 86 வயது இளைஞர்.. வீடியோ!

ஏனென்றால், 18 வயது நிரம்பிய இளைஞர்களே செய்ய அஞ்சும் சில வீர தீர சாகசங்களை இந்த 86 வயதான முதியவர் செய்து வருகின்றார். இதன்காரணத்தினாலயே அவரை நாங்கள் இளைஞர் என இங்கு குறிப்பிட்டுள்ளோம்.

வயது என்றுமே தடையில்லை.. இளைஞர்கள் தயங்கும் சாகசத்தை அசால்டாக செய்யும் 86 வயது இளைஞர்.. வீடியோ!

இந்த தரமான சாகசத்தை செய்தவர் வேறு யாருமில்லை, உலகப் புகழ்பெற்ற சேமி மில்லர் என்றழைக்கப்படும் சேமுவேல் ஹமில்டன்தான் அவர். வட அயர்லாந்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர், பல்வேறு மோட்டார்சைக்கிள் பந்தயங்களில் கலந்துக்கொண்டு வெற்றி வாகைச் சூடியுள்ளார். குறிப்பாக, 1955ம் ஆண்டு முதல் 1958ம் ஆண்டு வரை இவரின் புகழ் உச்சம் தொட்டதாக இருந்தது குறிப்பிடத்தகுந்தது.

வயது என்றுமே தடையில்லை.. இளைஞர்கள் தயங்கும் சாகசத்தை அசால்டாக செய்யும் 86 வயது இளைஞர்.. வீடியோ!

சிறு வயதிலிருந்தே வாகனங்கள் மீதிருந்த அதீத ஆர்வம்தான் தற்போது வரை, இந்த வயதிலும் அவரை துடிப்பாக இருசக்கர வாகனங்களை இயக்க வைத்து வருகின்றது. இவரின் இந்த வீர தீர சாகசம் குறித்த வீடியோவை சேமி மில்லர் அருங்காட்சியகம் வெளியிட்டுள்ளது. இது சேமுவேல் ஹமில்டனுக்கு சொந்தமானது என கூறப்படுகின்றது.

வயது என்றுமே தடையில்லை.. இளைஞர்கள் தயங்கும் சாகசத்தை அசால்டாக செய்யும் 86 வயது இளைஞர்.. வீடியோ!

அதில், 86 வயதான சேமி மில்லர் அதிக எஞ்ஜின் திறன் கொண்ட பிஎஸ்ஏ சி15 மோட்டார்சைக்கிள்மீது ஏறி பாறைகள், மேடுகள் என பல தடுப்புகள் இருக்கும் பாதையில் ஜாலியாக அவர் வலம் வரும் காட்சிகள் அடங்கியிருக்கின்றன.

வயது என்றுமே தடையில்லை.. இளைஞர்கள் தயங்கும் சாகசத்தை அசால்டாக செய்யும் 86 வயது இளைஞர்.. வீடியோ!

இந்த வீடியோ வெறும் சேம்பிள்தான் என கூறுகின்றனர். சேமுவேல் ஹமில்டனின் நண்பர்கள். சில நேரங்களில் அவர் மட்டுமே தனியாக அதிக உயர் திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களைக் கொண்டு ஜாலியாக நகரத்தை வலம் வருவதாக அவர்கள் கூறுகின்றனர். அந்த நேரத்தில் 18 வயது இளஞர்களுக்கே டஃப் கொடுப்பதைப் போல் அவர் சீறிப்பாய்ந்து செல்வர் என்றும் குறிப்பிடுகின்றனர். இதனை வெளிப்படுத்தும் வகையிலேயே சமீபத்திய வீடியோக் காட்சிகள் இருக்கின்றது.

வயது என்றுமே தடையில்லை.. இளைஞர்கள் தயங்கும் சாகசத்தை அசால்டாக செய்யும் 86 வயது இளைஞர்.. வீடியோ!

குறிப்பாக, சேமுவேல் ஹமில்டன் அவரது இளம் வயதில் டிரெயில்ஸ் ரைடங்கில் புகழ்பெற்றவராக இருந்துள்ளார். இதுமட்டுமின்றி 1,300 க்கும் மேற்பட்ட சோதனை போட்டிகளில் அவர் வென்றுள்ளார். தொடர்ந்து, திறமையான சாலை பந்தய வீரர்களில் ஒருவராகவும் அவர் அறியப்படுகிறார்.

வயது என்றுமே தடையில்லை.. இளைஞர்கள் தயங்கும் சாகசத்தை அசால்டாக செய்யும் 86 வயது இளைஞர்.. வீடியோ!

அதிலும் முக்கியமாக நார்த் வெஸ்ட் 200 மற்றும் ஐரியல் ஆஃப் மேன் டிடி ஏரியல் ஆகிய நிகழ்வுகளில் ஜாம்பவன் என்ற புகழை அவர் சூடியிருக்கின்றார்.

இவ்வாறு, பைக் ரேசிங்கில் மட்டுமின்றி ஷெர்பா டி வாகனத்தை உருவாக்கியதில் இவருடைய பங்கு இருக்கின்றது. இந்த வகை மோட்டார்சைக்கிள்கள் ரேலி பந்தயங்களுக்கெனவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டவை ஆகும்.

தற்போது இளைஞர்களுக்கு ஓர் தூண்டுகோலாக இருக்கும் வகையிலேயே இந்த வீடியோவை சேமி மில்லர் அருங்காட்சியகம் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில், "நான் வெளியேற முயற்சிக்கிறேன், ஒரு நாளைக்கு பத்து நிமிடங்கள், ஃபிட்டாக மற்றும் துடிப்புடன் இருப்பதற்காக" என சேமுவேல் ஹமில்டன் கூறுவதையும் நம்மால் வீடியோவில் காண முடிகின்றது.

வயது என்றுமே தடையில்லை.. இளைஞர்கள் தயங்கும் சாகசத்தை அசால்டாக செய்யும் 86 வயது இளைஞர்.. வீடியோ!

இவரின் இந்த வார்த்தையும், செயலும் இளைஞர்களுக்கு தூண்டுகோலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பலர் குறிப்பிட்ட வயதில் தனக்கு எல்லாமே முடிந்துவிட்டதாக உணர்கின்றனர். ஆனால், உலகில் பல ஜாம்பவான்கள் தங்களுடைய தள்ளாத வயது அல்லது அதற்கு முன்பாகவே புகழின் உச்சத்தைத் தொட்டவர்களாக இருக்கின்றனர். வயது என்பது எண் மட்டுமே, அது என்றுமே தடை கல்லாக இருக்காது என்பதற்கு இதுவே சான்று.

Image Courtesy: Sammy Miller Motorcycle Museum/YouTube

More from DriveSpark

Article Published On: Friday, April 24, 2020, 12:30 [IST]
English summary
86-Year Old Man Rides Like A 18 Old. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+