இவை உங்க பைக்கையும், ரைடையும் மிகவும் உற்சாகமானதாக மாற்றும்... விலையும் ரொம்ப கம்மிங்க!

வழக்கமான பைக்கைக்கூட பிரீமியம் தரத்தில் உயர்த்தும் வகையில் சந்தையில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் அக்ஸசெரீஸ்களின் பட்டியலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் அதுகுறித்த தகவலை விரிவாக பார்க்கலாம்.

இந்த அம்சங்கள் இருந்த உங்க பைக்கைவிட்டு பிரியவே மாட்டீங்க... மலிவு விலை அக்ஸசெரீஸ்களின் பட்டியல்!

இந்தியாவில் கார் பயனர்களைக் காட்டிலும் மோட்டார்சைக்கிள் பயனர்களே அதிகம். இருசக்கர வாகனங்கள் மலிவு விலை, அதிக பயன் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு என பல்வேறு வகைகளில் அதன் உரிமையாளர்களுக்கு அதிக லாபத்தை வழங்குவதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதில், தற்போது லேசான பரிணாம மாற்றம் அடையத் தொடங்கியுள்ளது.

இந்த அம்சங்கள் இருந்த உங்க பைக்கைவிட்டு பிரியவே மாட்டீங்க... மலிவு விலை அக்ஸசெரீஸ்களின் பட்டியல்!

அதாவது, தற்போதைய இளைஞர்கள் பலர், தங்களின் மோட்டார் சைக்கிள் மிகவும் ஸ்டைலானதாகவும், அதிக தொழில்நுட்பம் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். இம்மாதிரியான இளைஞர்கள் சந்தையில் புதிதாக அறிமுகமாகும் ஒரு இருசக்கர வாகனத்தைக்கூட விடமாட்டார்கள். உடனே தன்னுடைய பழைய வாகனத்தை விற்பனைச் செய்துவிட்டு ஓடிபோய் புதிய மாடல் பைக்கை வாங்கிவிடுவர்.

இந்த அம்சங்கள் இருந்த உங்க பைக்கைவிட்டு பிரியவே மாட்டீங்க... மலிவு விலை அக்ஸசெரீஸ்களின் பட்டியல்!

இதனை நம்மில் பலரால் செய்துவிட முடியாது. இருப்பினும், நம்முடைய தொழில்நுட்ப இருசக்கர வாகனத்தின் கனவையும் விட்டுக் கொடுக்க முடியாது. இத்தகையோருக்கு உதவியளிக்கும் விதமாக மோட்டார்சைக்கிளை அழகாகவும், தொழில்நுட்பம் நிறைந்ததாகவும் மாற்றும் வகையில் வெளிச் சந்தையில் விற்பனையாகக்கூடிய உபயோகமான அணிகலன்களைப் பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாங்கள் உங்களுக்கு வழங்க இருக்கின்றோம்.

இந்த அம்சங்கள் இருந்த உங்க பைக்கைவிட்டு பிரியவே மாட்டீங்க... மலிவு விலை அக்ஸசெரீஸ்களின் பட்டியல்!

இவற்றைப் பொருத்துவதன் மூலம் நம்முடைய மிக சாதாரண டூ வீலர்கூட அதிக தொழில்நுட்பம் அடங்கிய வாகனமாக மாறிவிடும். மேலும், அதனை அழகானதாகவும் மாற்றிவிடலாம். அப்படியென்றால் அவற்றின் விலை மிக அதிகமானதாக இருக்குமோ என எண்ணிவிடாதீர்கள். மலிவு விலைக் கொண்ட பொருட்களும் இந்திய பட்டியலில் அடங்கும். வாருங்கள் அதுகுறித்த தகவலை பார்க்கலாம்.

இந்த அம்சங்கள் இருந்த உங்க பைக்கைவிட்டு பிரியவே மாட்டீங்க... மலிவு விலை அக்ஸசெரீஸ்களின் பட்டியல்!

வாட்டர் ப்ரூஃப் செல்போன் ஹோல்டர்

விலை: ரூ. 999 முதல் ரூ. 1,500 வரை

மழைக்காலங்களின்போது செல்போனை காக்க இந்த வாட்டர் ப்ரூஃப் ஹோல்டர்கள் உதவியாக இருக்கும். இதனால், எந்த மாதிரியான சூழ்நிலையிலும் நம்மால் செல்போனுடன் இணைந்தே இருக்க முடியும். எனவே, மலைக் காலத்தில் மேப்பை பார்ப்பதற்கு கூடாரத்தைத் தேட வேண்டிய அவசியம் இல்லை. இது, சந்தையில் ஆயிரம் ரூபாய் முதல் விற்பனைக் கிடைக்கின்றது.

இந்த அம்சங்கள் இருந்த உங்க பைக்கைவிட்டு பிரியவே மாட்டீங்க... மலிவு விலை அக்ஸசெரீஸ்களின் பட்டியல்!

செல்போன் சார்ஜர்

விலை: ரூ. 200 முதல் ரூ. 650 வரை

இந்தியா மார்ட் ஆன்-லைன் வர்த்தக தளத்தின்படி பைக்குகளில் பயன்படுத்தக்கூடிய செல்போன் சார்ஜர்கள் ரூ. 200 முதல் 650 ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது நெடுந்தூர பயணங்களின்போது செல்போனில் ஏற்படும் சார்ஜ் இழப்பை மீட்டெடுக்க உதவும். தற்போது விற்பனையில் இருக்கும் இருசக்கர வாகனங்களில் மட்டுமே செல்போன் சார்ஜிங் அம்சம் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த அம்சங்கள் இருந்த உங்க பைக்கைவிட்டு பிரியவே மாட்டீங்க... மலிவு விலை அக்ஸசெரீஸ்களின் பட்டியல்!

முன்னதாக, ஓரிரு வருடங்களுக்கு முன்பு விற்பனைக்கு வந்த பெருவாரியான இருசக்கர வாகனங்களில் இந்த அம்சம் காணப்படுவதில்லை. எனவே, இந்த அம்சத்தை நம்மால் பெறவே முடியாது என நினைக்க வேண்டும். சந்தையில் மிக குறைந்த விலையில் இது கூடுதல் அக்ஸசெரிஸாக விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த சிஸ்டத்தை எந்தவொரு ஒயரையும் கட் செய்யாமலே ஹேண்டில் பாரில் இணைக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு வசதி.

இந்த அம்சங்கள் இருந்த உங்க பைக்கைவிட்டு பிரியவே மாட்டீங்க... மலிவு விலை அக்ஸசெரீஸ்களின் பட்டியல்!

பார்-எண்ட் ஹெட்லேம்ப்

விலை ரூ. 80 முதல் ரூ. 200 வரை

ஹேண்டில் பார்களின் முனைகளில் பொருத்தக் கூடிய மின் விளக்குதான் இது. இது சந்தையில் ரூ. 80 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், டெலிவரி மற்றும் ஜிஎஸ்டி வரி பல சேர்ப்பதன் காரணமாக சில இடங்களில் 100 ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இதனைப் பொருத்துவதன் மூலம் உங்களின் பைக்கை வண்ண மயமானதாக அலங்கரிக்க முடியும்.

இந்த அம்சங்கள் இருந்த உங்க பைக்கைவிட்டு பிரியவே மாட்டீங்க... மலிவு விலை அக்ஸசெரீஸ்களின் பட்டியல்!

இந்த அணிகலனை சில ஆன்-லைன் வர்த்தக நிறுவனங்கள் ஆர்டரின் பேரில் ஷிப்பிங் செய்கின்றன. எனவே, வரிகள் அனைத்தும் சேர்க்கப்பட்ட நிலையில் அவற்றின் விலை சில ஆயிரங்களைத் தொடலாம் என தெரிகின்றது. இதனை பைக்குளில் இணைப்பது மற்றும் ஆக்டிவேட் செய்வது மிக சுலபம்.

இந்த அம்சங்கள் இருந்த உங்க பைக்கைவிட்டு பிரியவே மாட்டீங்க... மலிவு விலை அக்ஸசெரீஸ்களின் பட்டியல்!

ஹெல்மெட் லேம்ப்

விலை: ரூ. 1,250 முதல் ரூ. 3,899 வரை

இந்தியாவில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அதிக அச்சுறுத்தல் நிலவுகின்றது. இதனை நீக்கும் விதமாகவே ஹெல்மெட் லேம்ப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இது அடர்ந்த இருட்டான சாலையில் செல்லும்போது அடையாளம் உதவும். அதற்கேற்ப ஹெல்மெட்டின் பக்கவாட்டு மற்றும் பின் பகுதிகளில் பிரகாசமாக ஒளிருகின்ற வகையில் வண்ண மின் விளக்குகள் இதில் காணப்படுகின்றன.

இந்த அம்சங்கள் இருந்த உங்க பைக்கைவிட்டு பிரியவே மாட்டீங்க... மலிவு விலை அக்ஸசெரீஸ்களின் பட்டியல்!

இது அதிக பனி மற்றும் தூசி நிறைந்த சாலையில்கூட துள்ளியமாக அடையாளம் காண உதவும். எனவே, இதன் மூலம் ரைடர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்கச் செய்ய முடியும். இது, சந்தையில் ரூ. 1,250 முதல் ரூ. 3,899 வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இதனை ரீசார்ஜ் செய்வது மிக சுலபம்.

இந்த அம்சங்கள் இருந்த உங்க பைக்கைவிட்டு பிரியவே மாட்டீங்க... மலிவு விலை அக்ஸசெரீஸ்களின் பட்டியல்!

கேமிரா

விலை: ரூ. 2,895 முதல் ரூ. 6,000

செல்போனுக்கு மட்டுமில்லைங்க நம்முடைய பயணங்களுக்கும் கேமிரா தேவைப்படுகின்றது. இது, அரிய காட்சிகளைப் படம் பிடிப்பதுடன், தேவையற்ற சங்கடங்களில் விடைக் காணவும் உதவும். அதாவது, விபத்து போன்ற வேண்டத்தகாத நிகழ்வுகளின்போது யார்மீது குற்றம் இருக்கிறது என்பதை நிரூபிக்க இது உதவும். இதுமட்டுமின்றி, போலீஸாரின் தேவையற்ற அபராதங்களில் இருந்தும் நம்மால் தப்பிக்க முடியும்.

இந்த அம்சங்கள் இருந்த உங்க பைக்கைவிட்டு பிரியவே மாட்டீங்க... மலிவு விலை அக்ஸசெரீஸ்களின் பட்டியல்!

ப்ளூடூத் ஹெட்செட்

விலை: ரூ. 999 முதல் ரூ. 4,550 வரை

இந்த ப்ளூடூத் ஹெட்செட்டை ஹெல்மெட் அணிந்திருந்தாலும் நம்மால் பயன்படுத்த முடியும். இது ஒயர் மற்றும் ஒயர்லெஸ் ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதனைப் பயன்படுத்துவதன் மூலம் தேவையற்றை நிறுத்தங்களை நம்மால் தவிர்க்க முடியும். அதேசமயம், எந்தவொரு அழைப்பையும் தவற விடும் நிலையும் ஏற்படாது. அதேசமயம், பயணத்தின்போது போலீஸார் இதுபோன்ற ஹெட்செட்டுகளைப் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தகுந்தது.

இந்த அம்சங்கள் இருந்த உங்க பைக்கைவிட்டு பிரியவே மாட்டீங்க... மலிவு விலை அக்ஸசெரீஸ்களின் பட்டியல்!

ஹெல்மெட் கூலர்

விலை: ரூ. 1,299 முதல் ரூ. 4,999 வரை

ஹெல்மெட் கூலர்கள் கடந்த சில ஆண்டுகளாக சந்தையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன. இவை வெய்யில் நேரத்தில் ஏற்படும் எரிச்சலைக் குறைக்க உதவும். மேலும், நெடுந்தூர பயணத்தில் ஹெல்மெட் பயன்படுத்தும்போது ஏற்படும் அசௌகரியமான உணர்வைக் குறைக்கவும் அது உதவும். இது இந்தியாவில் ரூ. 1,299 முதல் ரூ. 4,999 வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது.

இந்த அம்சங்கள் இருந்த உங்க பைக்கைவிட்டு பிரியவே மாட்டீங்க... மலிவு விலை அக்ஸசெரீஸ்களின் பட்டியல்!

கூல் ரைடிங் வெஸ்ட்

விலை: ரூ. 2,300 முதல் ரூ. 3,500 வரை

ஹெல்மெட் கூலர் உங்களின் தலைப் பகுதிக்கு மட்டுமே குளிர்ச்சியான அனுபவத்தை வழங்கும். ஆனால், இந்த ஜாக்கெட் உங்களின் முதுகு மற்றும் மார்பக பகுதிக்கு குளிர்ச்சியான அனுபவத்தை வழங்கக்கூடியது. இதுவும் நெடுந்தூர இருசக்கர வாகன பயணத்தை ரம்மியமானதாக மாற்றக்கூடிய ஓர் தயாரிப்பாகும்.

Most Read Articles

English summary
Affordable & Useful Accessories For Motorcycle. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X