இந்தியர்களை அதளகளப்படுத்த புதிய மின்சார ஸ்கூட்டரை களமிறக்கும் ஆம்பியர்... விலை இவ்ளோ கம்மியா?

இந்தியர்களை அதகளப்படுத்தும் வகையில் புதிய மின்சார ஸ்கூட்டரை ஆம்பியர் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. எப்போது அறிமுகம், என்ன விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது உள்ளிட்ட தகவல்களை தொடர்ச்சியாக காணலாம்.

இந்தியர்களை அதளகளப்படுத்த புதிய மின்சார ஸ்கூட்டரை களமிறக்கும் ஆம்பியர்... விலை இவ்ளோ கம்மியா?

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான சந்தை தொடர்ச்சியாக விரிவடைந்துக் கொண்டே வருகின்றது. இதன் விளைவாக உள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அதன் பார்வையை மின்சார வாகனங்கள் பக்கம் திருப்பியுள்ளன. இதன்படி, அவை புதுமுக மின்சார வாகனங்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியும் வருகின்றன.

இந்தியர்களை அதளகளப்படுத்த புதிய மின்சார ஸ்கூட்டரை களமிறக்கும் ஆம்பியர்... விலை இவ்ளோ கம்மியா?

ஆனால், கடந்த சில நாட்களாக புதுமுக வாகனங்களின் அறிமுகம் விடைபெற்ற நிலையிலேயே இருந்து வருகின்றது. இதற்கு உலகையே அச்சுறுத்தி வரும் உயிர் கொல்லி கொரோனா வைரஸ் மட்டுமே காரணம் ஆகும். ஆம், வைரஸ் பரவல் காரணமாக உலக நாடுகளின் அனைத்துத்துறையும் இயக்கமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இந்தியர்களை அதளகளப்படுத்த புதிய மின்சார ஸ்கூட்டரை களமிறக்கும் ஆம்பியர்... விலை இவ்ளோ கம்மியா?

இதன் விளைவாக புதுமுக வாகனங்களின் அறிமுகமும் சில நாட்களாக குறைந்து காணப்படுகின்றது. அதிலும், மின் வாகனங்களின் அறிமுகம் அறவே தொலைந்துவிட்டதைப் போன்று காட்சியக்கின்றது.

இந்நிலையில், கொரோனா காலத்திற்கு பின் இந்திய மின்சார இருசக்கர வகானச் சந்தையை அதகளப்படுத்தும் வகையில் பிரபல ஆம்பியர் நிறுவனம், அதன் புதுமுக ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியர்களை அதளகளப்படுத்த புதிய மின்சார ஸ்கூட்டரை களமிறக்கும் ஆம்பியர்... விலை இவ்ளோ கம்மியா?

கொரோனா காலத்திற்கு பின் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் மின்சார ஸ்கூட்டர் என்பதால் இது மின் வாகன பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்திய பொறியியல் நிறுவனமான கிரீவ்ஸ் காட்டன் நிறுனவனத்துடன் இணைந்தை ஆம்பியர் நிறுவனம் இந்தியாவில் மின்சார இரு சக்கர வாகனங்களை களமிறக்கி வருகின்றது.

இந்தியர்களை அதளகளப்படுத்த புதிய மின்சார ஸ்கூட்டரை களமிறக்கும் ஆம்பியர்... விலை இவ்ளோ கம்மியா?

இந்த கூட்டணியின் அடிப்படையிலேயே புதுமுக மின்சார ஸ்கூட்டரையும் ஆம்பியர் நிறுவனம் நாட்டில் களமிறக்க இருக்கின்றது. இதுகுறித்த இரு வீடியோக்களையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோ, புதுமுக ஆம்பியர் மின்சார ஸ்கூட்டர் வருகின்ற ஜூன் 15ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதை உறுதிச் செய்துள்ளது.

இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அடுத்து அதன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த புதிய ஸ்கூட்டர் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஏத்தர் 450 ப்ளஸ், பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐ க்யூப் ஆகிய மின்சார ஸ்கூட்டர்களுக்கு போட்டியளிக்க இருக்கின்றது.

ஏனெனில் இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஆம்பியர் மின்சார ஸ்கூட்டர்களைக் காட்டிலும் இந்த புதுமுக ஸ்கூட்டர் அதிக திறன் கொண்ட மாடலாக களமிறக்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி, அதிக ரேஞ்ஜ், பெர்ஃபார்மன்ஸ் மற்றும் வசதிகளைக் கொண்ட மாடலாகவும் இது இருக்கும் என தெரிகின்றது.

இந்தியர்களை அதளகளப்படுத்த புதிய மின்சார ஸ்கூட்டரை களமிறக்கும் ஆம்பியர்... விலை இவ்ளோ கம்மியா?

இதனை உறுதிச் செய்கின்ற வகையில் தற்போது வெளியாகியிருக்கும் இரு டீசர் வீடியோக்களின் காட்சிகள் உள்ளன. அந்த வீடியோ மின்சார ஸ்கூட்டரின் வளைவு-நெளிவுகளை காட்சிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, ஸ்கூட்டரில் இடம்பெறும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டரை விளக்குகின்ற காட்சியும் அதில் உள்ளது.

இந்தியர்களை அதளகளப்படுத்த புதிய மின்சார ஸ்கூட்டரை களமிறக்கும் ஆம்பியர்... விலை இவ்ளோ கம்மியா?

இதன்மூலம் புதிய மின்சார ஸ்கூட்டரில் எல்சிடி யூனிட் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. இதுமட்டுமின்றி, ஸ்கூட்டரில் இருக்கும் மின் மோட்டாருக்கு தேவையான திறனை வழங்கும் விதமாக லித்தியம்-அயன் பேட்டரிகள் இணைக்கப்பட இருப்பது வீடியோ மூலம் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

இந்தியர்களை அதளகளப்படுத்த புதிய மின்சார ஸ்கூட்டரை களமிறக்கும் ஆம்பியர்... விலை இவ்ளோ கம்மியா?

அது, ஆம்பியர் நிறுவனத்தின் பிரபல ஸ்கூட்டர்களில் ஒன்றான ஜீல் மாடலில் உள்ளதைப் போன்றிருக்கும். எனவே, இதன் அதிகபட்ச மைலேஜ் 75 கிமீ அதிகமாக இருக்கும் என யூகிக்கப்படுகின்றது.

ஜீல் மின்சார ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும் பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்ய 5 முதல் 6 மணி நேரங்கள் வரை தேவைப்படுகின்றது. இதே நிலைதான் ஆம்பியரின் வெளிவராத புதுமுக மின்சார ஸ்கூட்டரிலும் காணப்படும் என கூறப்படுகின்றது.

இந்தியர்களை அதளகளப்படுத்த புதிய மின்சார ஸ்கூட்டரை களமிறக்கும் ஆம்பியர்... விலை இவ்ளோ கம்மியா?

பேட்டரி, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தைத் தொடர்ந்து, புதிய மின்சார ஸ்கூட்டரில் என்ன மாதிரியான சஸ்பெஷன் அமைப்பு இடம்பெற இருக்கின்றது என்பது பற்றிய தகவலும் வெளிவந்துள்ளது. இந்த மின் ஸ்கூட்டரில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் முன் பக்கத்திலும், ட்வின் ஷாக் அப்சார்பர் பின்பக்கத்திலும் இடம்பெற இருக்கின்றது.

இந்தியர்களை அதளகளப்படுத்த புதிய மின்சார ஸ்கூட்டரை களமிறக்கும் ஆம்பியர்... விலை இவ்ளோ கம்மியா?

இதேபேன்று, சிபிஎஸ் அம்சத்துடன் கூடிய டிரம் பிரேக் இரு வீல்களிலும் இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. எனவே, இந்த மின்சார ஸ்கூட்டரை அதிகபட்சமாக ரூ. 70 ஆயிரத்திற்கு எதிர்பார்க்கலாம். இது இந்திய சந்தையில் ஜெமோபாய் ஆஸ்ட்ரிட் லைட் மற்றும் ஒகினவா ரிட்ஜ் ப்ளஸ் ஆகியவற்றிற்கும் போட்டியாக விற்பனையில் களமிறங்க இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 11, 2020, 18:29 [IST]
English summary
Ampere Has Announced About The New Launch Electric Scooter. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+