சார்ஜ் தீர்ந்து போயுடுமோ.. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அந்த கவலை அறவே இல்லை!

சிறப்பான ரேஞ்ச் மற்றும் சவாலான விலையிலும் ஆம்பியர் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

சார்ஜ் தீர்ந்து போயுடுமோ.. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அந்த கவலை அறவே இல்லை!

இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் பல புதிய மாடல்கள் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றன. அந்த வரிசையில், இன்று ஆம்பியர் நிறுவனம் மேக்னஸ் புரோ என்ற பெயரில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. ஆம்பியர் நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் மேக்னஸ் 60 என்ற மாடலின் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் இந்த புதிய மேக்னஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வந்துள்ளது.

சார்ஜ் தீர்ந்து போயுடுமோ.. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அந்த கவலை அறவே இல்லை!

ஆம்பியர் மேக்னஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட், எல்இடி பைலட் விளக்குகள், ஸ்டெப் அப் இருக்கை, முன்புறத்தில் ஆவணங்களுக்கான பாக்கெட் அமைப்பு, அலாய் வீல்கள், டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சார்ஜ் தீர்ந்து போயுடுமோ.. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அந்த கவலை அறவே இல்லை!

மேலும், கால் வைப்பதற்கான ஃபுட்போர்டில் இடவசதி மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, இருக்கைக்கு கீழே உள்ள ஸ்டோரேஜ் பகுதியிலும் இடவசதி மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. அதாவது, சாதாரண பெட்ரோல் ஸ்கூட்டர்களைவிட அதிக சிறப்பம்சங்களை இந்த ஸ்கூட்டர் பெற்றிருக்கிறது.

சார்ஜ் தீர்ந்து போயுடுமோ.. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அந்த கவலை அறவே இல்லை!

ஆம்பியர் மேக்னஸ் புரோ ஸ்கூட்டரில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. பேட்டரியில் சார்ஜ் அளவு, ட்ரிப் மீட்டர், வேகத்தை காட்டும் ஸ்பீடோ மீட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்கூட்டரில் யுஎஸ்பி போன் சார்ஜர் உள்ளது.

சார்ஜ் தீர்ந்து போயுடுமோ.. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அந்த கவலை அறவே இல்லை!

கீ லெஸ் என்ட்ரி வசதி, ஆன்ட்டி தெஃப் அலாரம் ஆகியவற்றுடன் ஹேண்ட்பிரேக் வசதியும் பார்க்கிங் செய்திருக்கும்போது கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.

சார்ஜ் தீர்ந்து போயுடுமோ.. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அந்த கவலை அறவே இல்லை!

ஆம்பியர் மேக்னஸ் புரோ ஸ்கூட்டரில் 30Ah லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. 1.2kW மின் மோட்டாருடன் இணைந்து அதிகபட்சமாக 80 கிமீ தூரம் வரை செல்லும். மணிக்கு 55 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கிறது.

சார்ஜ் தீர்ந்து போயுடுமோ.. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அந்த கவலை அறவே இல்லை!

இந்த ஸ்கூட்டரில் மிக முக்கிய சிறப்பம்சமாக, லிம்ப் ஹோம் என்ற தொழில்நுட்ப வசதி உள்ளது. சார்ஜ் குறைவாக இருக்கும் சமயத்தில், இந்த மோடில் வைக்கும்போது இதன் பயணிக்கும் தூரம் 10 கிமீ வரை அதிகரிக்கும். இதனால், நடுவழியில் சார்ஜ் இல்லாமல் நிற்கும் நிலையை தவிர்க்க முடியும்.

சார்ஜ் தீர்ந்து போயுடுமோ.. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அந்த கவலை அறவே இல்லை!

புதிய ஆம்பியர் மேக்னஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முதல்கட்டமாக பெங்களூர் நகரில் மட்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ.73,990 எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெலிவிரிப் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆம்பியர் நிறுவனத்தின் இணையதளம் மூலமாக புக்கிங் செய்ய முடியும்.

Most Read Articles
English summary
Ampere Vehicles has launched a new flagship electric scooter in the Indian market, called the Magnus Pro. The new Ampere Magnus Pro electric scooter is priced at Rs 73,990, ex-showroom (India) and comes packed with features and equipment.
Story first published: Monday, June 15, 2020, 15:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X