Just In
- 4 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 6 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 6 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 7 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பெட்ரோல் பம்ப் மெஷினை ஒரே முட்டால் சாய்த்த மாடு... நல்ல வேல அவங்க தப்பிச்சிட்டாங்க... வீடியோ!
பெட்ரோல் பம்ப் மெஷினை மாடு ஒன்று ஒரே முட்டால் முட்டி சாய்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.

சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று அதிக வேகத்தில் வைரலாகி வருகின்றது. இதனை ஒரு சிலர் பார்த்திருப்பீர்கள் என நம்புகின்றோம். வீடியோவில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மாடு ஒன்று முட்ட வருவதைப் போன்ற காட்சிகள் அடங்கியிருக்கின்றன. ஆனால், இளைஞர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டதனால் மாடு இளைஞர்களுக்கு பதிலாக பெட்ரோல் பம்பை ஒரே அடியாக முட்டி சாய்த்தது.

இந்த வீடியோவே தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த சம்பவம் நிகழ்ந்தபோது குறிப்பிட்ட அந்த பெட்ரோல் பங்க்கில் ஆட்கள் யாரும் இல்லாததை நம்மால் காண முடிகின்றது. ஆகையால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

ஒரு வேலை அங்கு பணியாளர் அல்லது எரிபொருள் நிரப்புவதற்கு வேறு யாரேனும் அந்த இடத்தில் இருந்திருந்தால் நிலைமை விபரீதமானதாக மாறியிருக்கும். இளைஞர்கள் மாட்டிடம் இருந்தும் தப்பித்த வியூகம் பாராட்டிற்குரியதாக இருக்கின்றது. அதேசமயம், இவர்கள் மாட்டினை திசை திருப்ப வேறு ஏதேனும் இடத்தைத் தேர்வு செய்திருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றுகின்றது.

ஏனெனில் பெட்ரோல் பங்குகள் மிக எளிதில் மிகப்பெரிய அசம்பாவிதத்தை ஏற்படுத்தக்கூடியவை ஆகும். இதன் காரணத்தினாலயே மாட்டை திசை திருப்ப வேறு ஏதேனும் வழியை தேர்வு செய்திருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றுகின்றது. இருப்பினும், அங்கு யோசிக்க நேரமில்லாத மற்றும் உடனுக்குடன் தீர்வு காண வேண்டிய இடத்தில் இருந்ததால் அவர்கள் பெட்ரோல் பங்க்கிற்குள் நுழைந்திருக்கின்றனர்.

இதனைக் கவனக்குறைவாக எடுத்துக் கொள்ள முடியாது. வாகன ஓட்டிகள் வந்த திசை பெட்ரோல் பங்க்கின் அமைப்பு ஆகியவற்றைக் கொண்டு பார்க்கையில் இந்த சம்பவம் இந்தியாவில் அரங்கேறியது அல்ல என்பது உறுதியாக தெரிகின்றது. மேலும், கால்நடைகளால் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிலும் வாகன ஓட்டிகள் இடையூறுகள் சந்தித்து வருகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.

கால்நடைகளால் எந்த நேரத்திலும் எப்படி வேண்டுமானாலும் ஆபத்து நேரலாம் என்பதையே இந்த சம்பவம் விளக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. மேலும், கால்நடைகளை கடக்கும்போது எப்போதும் அதிக கவனம் தேவை என்பதையும் இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகின்றது.

இந்திய சாலைகளில் கால்நடைகளால் அரங்கேறிய விபத்து சம்பவங்கள் பல. அரசு ஊழியர்கள் கால்நடைகளை சாலைகளில் இருந்து அப்புறப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும், அவற்றைக் கட்டுபடுத்த முடியவில்லை.
எனவேதான் கிராமம் மற்றும் விலங்குகள் நடமாட்டம் அதிகம் காணப்படக்கூடிய சாலைகளில் சற்று பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. இந்த சம்பவம் இந்திய சாலையில் அரங்கேறவில்லை என்றாலும், அனைத்து நாட்டிற்கும், அனைத்து சாலைகளுக்கும் பொருத்தமானது என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.