அப்ரில்லா ஜிபிஆர்150 ஏபிஎஸ் பைக் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதா..? அப்போ ஆர்15-க்கு போட்டி ரெடி..

சமீபத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஜிபிஆர்150 ஏபிஎஸ் பைக்கை இந்தியாவில் களமிறக்க அப்ரில்லா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் இந்த புதிய 150சிசி பைக்கை பற்றி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

அப்ரில்லா ஜிபிஆர்150 ஏபிஎஸ் பைக் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதா..? அப்போ ஆர்15-க்கு போட்டி ரெடி..

சீனாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் ஜிபிஆர்250 மாடலின் இளைய தலைமுறை பைக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஜிபிஆர்150 பைக்கின் விலை அங்கு 22,980 யென் ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதன் இந்திய ரூபாய் மதிப்பு ரூ.2.45 லட்சமாகும்.

அப்ரில்லா ஜிபிஆர்150 ஏபிஎஸ் பைக் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதா..? அப்போ ஆர்15-க்கு போட்டி ரெடி..

முழுக்க முழுக்க ஸ்போர்ட்ஸ் வெர்சனாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய பைக்கில் எல்இடி விளக்குகளுடன் ட்யூல்-ஹெட்லேம்ப் செட்அப் வழங்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய யுஎஸ்பி மற்றும் பெரிய பைக் தோற்றம் இந்த பைக்கை அதன் போட்டி மாடல்களில் இருந்து வேறுப்படுத்தி காட்டுகிறது.

அப்ரில்லா ஜிபிஆர்150 ஏபிஎஸ் பைக் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதா..? அப்போ ஆர்15-க்கு போட்டி ரெடி..

மொத்த ஸ்டைலிங் பாகங்களை பொறுத்தவரையில் அப்ரில்லா நிறுவனத்தின் டச் மீண்டும் தொடர்ந்துள்ளது. 15.4 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உடன் உள்ள க்ளிப்-ஆன் ஹேண்டில்பார்கள் பைக்கை ஸ்போர்ட்பைக் என முன்னுறுத்துகின்றன. இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் செமி-டிஜிட்டல் தரத்தில் அனலாக் டாக்கோமீட்டர் உடன் வழங்கப்பட்டுள்ளது.

அப்ரில்லா ஜிபிஆர்150 ஏபிஎஸ் பைக் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதா..? அப்போ ஆர்15-க்கு போட்டி ரெடி..

மேலும் இந்த இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் கியர் பொஷிசன் இண்டிகேட்டர், ஓடோமீட்டர், என்ஜினின் வெப்பநிலை, ஸ்பீடோமீட்டர், பெட்ரோல் இருப்பு உள்ளிட்டவற்றையும் காட்டும் விதத்தில் உள்ளது. ஜிபிஆர்150 பைக்கில் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 149சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

அப்ரில்லா ஜிபிஆர்150 ஏபிஎஸ் பைக் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதா..? அப்போ ஆர்15-க்கு போட்டி ரெடி..

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 18 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் பைக்கிற்கு வழங்கும். இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனிற்கு யுஎஸ்டி ஃபோர்க்குகள் முன்புறத்திலும் மோனோஷாக் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளன.

அப்ரில்லா ஜிபிஆர்150 ஏபிஎஸ் பைக் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதா..? அப்போ ஆர்15-க்கு போட்டி ரெடி..

இத்தகைய டெக்னிக்கல் பாகங்களால் இந்த பைக், 2018 ஆட்டோ எக்ஸ்போவின் மூலமாக இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆர்எஸ்150 பைக்குடன் ஒத்து போகிறது. டெக்னிக்கல் பாகங்கள் மட்டுமில்லாமல் என்ஜின் அமைப்பிலும் ஜிபிஆர்150 பைக்குடன் ஒத்து காணப்பட்டாலும் இவை இரண்டிலும் ஸ்டைலிங் அமைப்புகள் வேறுப்படும்.

அப்ரில்லா ஜிபிஆர்150 ஏபிஎஸ் பைக் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதா..? அப்போ ஆர்15-க்கு போட்டி ரெடி..

ஆர்எஸ்150 பைக் மாடலையும் அப்ரில்லா நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் இரண்டில் எது முதலில் வெளியாகவுள்ளது என்பது தெரியவில்லை. எப்படியிருந்தாலும் விரைவில் அப்ரில்லா நிறுவனத்தின் புதிய 150சிசி பைக் இந்திய சந்தைக்கு வருவது உறுதி.

Most Read Articles
மேலும்... #அப்ரில்லா #aprilia
English summary
Aprilia planning to introduce new GPR150 ABS in India; rival R15
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X