அசத்தலான தோற்றத்தில் வருகிறது புதிய அப்ரில்லா ஆர்எஸ் 660 பைக்...!
அப்ரில்லா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சர்வதேச இணையத்தள பக்கத்தில் ஆர்எஸ்660 பைக் மாடலின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த புதிய அப்ரில்லா பைக்கை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

அப்ரில்லா நிறுவனத்தில் இருந்து ஏற்கனவே விற்பனையில் உள்ள ஆர்எஸ்வி4 மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வரும் புதிய ஆர்எஸ்660 பைக் மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தில் காற்று இயக்கவியலுக்கு இணக்கமான விங்லெட்களுடன் காட்சியளிக்கிறது.

முன்புறத்தில் எல்இடி ஹெட்லேம்ப்கள் கார்னரிங் விளக்குகள் உடன் உள்ளன. பெட்ரோல் டேங்க் கூர்மையான லைன்கள் மற்றும் க்ரீஸ்களுடன் காட்சியளிக்கிறது. பைக்கின் பின்புறம் ஆர்எஸ்வி4-ன் பின்பகுதியை போல் மிகவும் ஸ்டைலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த எலக்ட்ரானிக் தொழிற்நுட்பங்களில் வீலிங் கண்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ், க்ரூஸ் கண்ட்ரோல், 5 நிலை மோட்களுடன் இரு-வழி விரைவான ஷிப்டர் உள்ளிட்டவை அடங்கும். இவற்றுடன் இந்த பைக்கில் இரு லேஅவுட்களுடன் 5-இன்ச் டிஎஃப்டி திரையும் உள்ளது.

சஸ்பென்ஷனிற்கு அப்ரில்லா ஆர்எஸ்660 பைக் மாடல் முன்புறத்தில் 41மிமீ-ல் கயபாவின் யுஎஸ்டி ஃபோர்க்ஸையும், பின்புறத்தில் மோனோ-ஷாக்கையும் கொண்டுள்ளது. ப்ரேக்கிற்கு ப்ரெம்போ நிறுவனத்தின் ப்ரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

சிவப்பு-மேட் ப்ளாக் மற்றும் சிவப்பு-பர்பிள் என்ற இரு பெயிண்ட் அமைப்பை ஆர்எஸ்250 ரெக்கியானி ரெப்லிகா மோட்டார்சைக்கிளில் இருந்து இந்த புதிய அப்ரில்லா பைக் பெற்றுள்ளது. இன்னும் சில மாதங்களில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகவுள்ள புதிய ஆர்எஸ்660 பைக்கை அப்ரில்லா நிறுவனம் இந்திய சந்தைக்கு 2021ல் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.12.5 லட்சத்தில் இருந்து ரூ.13 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படலாம். இந்த பைக்கிற்கு சந்தையில் போட்டியாக கவாஸாகி நிறுவனத்தின் நிஞ்சா இசட்எக்ஸ்-6ஆர் மற்றும் ஹோண்டா சிபிஆர்650ஆர் போன்ற பைக்குகள் விளங்கும்.


Click it and Unblock the Notifications








