இந்தியாவின் முதல் ஏப்ரிலியா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்டரி மாடல் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

இந்தியாவின் முதல் ஏப்ரிலியா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்டரி சூப்பர் பைக் பெங்களூரை சேர்ந்த வாடிக்கையாளருக்கு டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட பல முக்கிய விபரங்கள் மற்றும் பிரத்யேக படங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் முதல் ஏப்ரிலியா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்டரி மாடல் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

இத்தாலியை சேர்ந்த பியாஜியோ குழுமத்தின் கீழ் செயல்படும் ஏப்ரிலியா நிறுவனம் சூப்பர் பைக் தயாரிப்பில் உலக அளவில் வாடிக்கையாளர்களை கவர்ந்த நிறுவனமாக உள்ளது. இந்தியாவிலும் ஏப்ரிலியா சூப்பர் பைக்குகளுக்கு குறிப்பிடத்தக்க அளவு வரவேற்பு இருந்து வருகிறது.

இந்தியாவின் முதல் ஏப்ரிலியா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்டரி மாடல் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

குறிப்பாக, ஏப்ரிலியா நிறுவனத்தின் ஆர்எஸ்வி4 சூப்பர் பைக்குகள் வாடிக்கையாளர்களின் பேராதரவை பெற்ற மாடலாக உள்ளது. இந்த நிலையில், கடந்த மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் ஆர்எஸ்வி4 சூப்பர் பைக்கின் மிகவும் ஸ்பெஷலான மாடலாக உருவாக்கப்பட்ட ஆர்எஸ்வி4 1100 ஃபேக்டரி பைக் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

இந்தியாவின் முதல் ஏப்ரிலியா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்டரி மாடல் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

இந்த பைக்கிற்கு ரூ.22.42 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டது. சாதாரண ஏப்ரிலியா ஆர்எஸ்வி4 சூப்பர் பைக்கைவிட அதிக சிறப்பம்சங்களுடன் வந்த இந்த பைக்கில் பிஎஸ்-4 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, வரும் மார்ச் 31க்குள் மட்டுமே இந்த பைக்கை வாங்குவோர் பதிவு செய்ய முடியும்.

இந்தியாவின் முதல் ஏப்ரிலியா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்டரி மாடல் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

மேலும், இறக்குமதி செய்தே இந்த பைக் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில், இந்தியாவின் முதல் ஏப்ரிலியா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்டரி பைக் மாடலை பெங்களூரை சேர்ந்த டாக்டர் மிர்ஸா முன்பதிவு செய்திருந்தார்.

இந்தியாவின் முதல் ஏப்ரிலியா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்டரி மாடல் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

இதன்படி, மிகவும் ஸ்பெஷலான ஏப்ரிலியா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்டரி பைக் இறக்குமதி செய்யப்பட்டது. மேலும், நேற்று மாலை பெங்களூரில் உள்ள மோட்டோபிளெக்ஸ் ஷோரூமில் நடந்த நிகழ்ச்சியில் வைத்து அந்த பைக் டாக்டர் மிர்ஸாவுக்கு டெலிலிரி கொடுக்கப்பட்டது.

இந்தியாவின் முதல் ஏப்ரிலியா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்டரி மாடல் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

இதுகுறித்து மோட்டோபிளெக்ஸ் ஷோரூம் பிரதிநிதிகள் கூறுகையில்," உலக அளவில் இது மிகவும் பிரத்யேகமான சூப்பர் பைக் மாடல். குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே உலக அளவில் விற்பனை செய்யப்படும். இதில், ஒரு பைக் பெங்களூரை சேர்ந்த எங்களது வாடிக்கையாளருக்கு டெலிலிரி கொடுத்திருக்கிறோம்," என்று பெருமிதத்துடன் கூறினர்.

இந்தியாவின் முதல் ஏப்ரிலியா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்டரி மாடல் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

புதிய ஏப்ரிலியா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்டரி பைக்கின் டிசைன் இத்தாலிய பொறியியல் கைவண்ணத்தை காட்டும் வகையில் அமைந்துள்ளது. இந்த பைக்கில் விசேஷ வண்ணக் கலவையிலான ஸ்டிக்கர் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் முதல் ஏப்ரிலியா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்டரி மாடல் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

மூன்று பிரிவுகளை கொண்ட ஹெட்லைட் க்ளஸ்ட்டர் அமைப்பு, பெட்ரோல் டேங்க், சைடு ஃபேரிங் பேனல்கள், முன்புற ஃபென்டர், புகைப்போக்கி ஆகியவை கார்பன் ஃபைபர் பாகங்கள் கொடுக்கப்பட்டு இருப்பது இதன் மதிப்பை உயர்த்தும் விஷயமாக உளஅளது. இந்த மாடலில் விசேஷமான விங்லெட் அமைப்பு மூலமாக அதிவேகத்தில் அதிக நிலைத்தன்மையை பெறும் வாய்ப்பு உள்ளது.

இந்தியாவின் முதல் ஏப்ரிலியா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்டரி மாடல் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

புதிய ஏப்ரிலியா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்டரி பைக்கில் எல்இடி விளக்குகள், எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள் உள்ளன. ஓட்டுனருக்கு மட்டும் இருக்கை வசதியுடன் வந்துள்ளது. பின்புறத்தில் மற்றொருவர் அமர்வதற்கான இடவசதி இல்லை.

இந்தியாவின் முதல் ஏப்ரிலியா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்டரி மாடல் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

இந்த பைக்கில் அலுமினியம் டியூவல் பீம் சேஸீ பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் ஸ்விங் ஆர்ம் என்ற பின் சக்கரத்தை தாங்கும் அமைப்பும் அலுமினியத்தாலானது. இந்த சேஸீ மற்றும் கார்பன் ஃபைபர் பாகங்கள் மூலமாக இந்த பைக்கின் மதிப்பு பன்மடங்கு கூடுகிறது. இதன் ரகத்தில் மிகவும் இலகுவான மாடலாகவும் உள்ளது.

இந்தியாவின் முதல் ஏப்ரிலியா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்டரி மாடல் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

புதிய ஏப்ரிலியா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்டரி பைக்கில் 1,078 சிசி வி4 லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 214 பிஎச்பி பவரையும், 122 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் முதல் ஏப்ரிலியா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்டரி மாடல் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

ரைடு பை வயர் த்ராட்டில் சிஸ்டம், ஸ்லிப்பர் க்ளட்ச், குயிக் ஷிஃப்ட் சிஸ்டம், டைட்டானியம் அக்ரபோவிக் புகைப்போக்கி அமைப்பு ஆகியவையும் இந்த பைக்கின் பிற முக்கிய தொழில்நுட்ப அம்சங்களாக உள்ளன.

இந்தியாவின் முதல் ஏப்ரிலியா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்டரி மாடல் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

முன்புறத்தில் ஓலின்ஸ NIX 43 மிமீ ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ஓலின்ஸ் TTX மோனோ ஷாக் பிக்கி பேக் சஸ்பென்ஷனும் உள்ளன. ஓலின்ஸ் நிறுவனத்தின் ஸ்டீயரிங் டேம்பர் அமைப்பும் இதன் கையாளுமையை சிறப்பாக வைத்திருக்க உதவுகிறது.

இந்தியாவின் முதல் ஏப்ரிலியா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்டரி மாடல் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

இந்த பைக் மணிக்கு 300 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. இந்த சக்திவாய்ந்த பைக்கை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக முன்சக்கரத்தில் பிரெம்போ ஸ்டைல்மா மோனோபிளாக் ரேடியல் காலிபர்களுடன் கூடிய 330 மிமீ டியூவல் ஃப்ளோட்டிங் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் முதல் ஏப்ரிலியா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்டரி மாடல் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

பின்சக்கரத்தில் பிரெம்போ காலிபர் கொண்ட 220 மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 17 அங்குலத்திலான ஃபோர்ஜ்டு ரிம் கொண்ட சக்கரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பைரெல்லி டயாப்லோ சூப்பர்கார்ஸா எஸ்பி செமி ஸ்லிக் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் முதல் ஏப்ரிலியா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்டரி மாடல் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

ஏப்ரிலியா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்டரி சூப்பர் பைக்கில் டிராக், ஸ்போர்ட், ரேஸ் என மூன்று ரைடிங் மோடுகள் உள்ளன. ஏப்ரிலியா நிறுவனத்தின் பெர்ஃபார்மென்ஸ் ரைடு கன்ட்ரோல் என்ற தொழில்நுட்ப தொகுதியின் கீழ், டிராக்ஷன் கன்ட்ரோல், வீலி கன்ட்ரோல், லான்ச் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், ஸ்பீடு லிமிட்டர் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை உரிமையாளர் விருப்பத்தின் பேரில் மாற்றி அமைக்கவும், அணைத்து வைக்கவும் முடியும். பாஷ் நிறுவனத்தின் கார்னரிங் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது.

இந்தியாவின் முதல் ஏப்ரிலியா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்டரி மாடல் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

இந்த பைக்கில் டிஎஃப்டி திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்ஃபோனை இணைத்துக் கொண்டால், பைக்கின் இயக்கம் குறித்த பல்வேறு தகவல்களை பெற முடியும்.

இந்தியாவின் முதல் ஏப்ரிலியா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்டரி மாடல் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

இந்த பைக் ரூ.30 லட்சம் ஆன்ரோடு விலையில் டாக்டர் மிர்ஸாவுக்கு டெலிலிரி கொடுக்கப்பட்டு இருப்பதாக மோட்டோபிளெக்ஸ் ஷோரூம் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Most Read Articles
மேலும்... #அப்ரிலியா #aprilia
English summary
The Italian motorcycle manufacturer Aprilia, has delivered their first and only RSV4 1100 Factory in India. The motorcycle was delivered in Bengaluru by Motoplex to Doctor Mirza. The Aprilia RSV4 1100 Factory Retailed at Rs 30 lakh, on-road (Bengaluru).
Story first published: Friday, March 6, 2020, 13:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X