வெறும் 166 கிலோ எடையுடன் புதிய அப்ரில்லா லிமிடேட் எடிசன் பைக்... என்ன விலை தான் மயக்கம்வர வைக்கிறது

அப்ரில்லா நிறுவனம் உலகிற்கு தனது புதிய தயாரிப்பான டுயோனோ வி4 எக்ஸ் லிமிடேட் எடிசனை வெளிக்காட்டியுள்ளது. இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் பைக்கை பற்றிய விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

வெறும் 166 கிலோ எடையுடன் புதிய அப்ரில்லா லிமிடேட் எடிசன் பைக்... என்ன விலை தான் மயக்கம்வர வைக்கிறது

வெறும் 10 மாதிரிகள் மட்டுமே தயாரிக்கப்படவுள்ள அப்ரில்லா டுயோனோ வி4 எக்ஸ் பைக்கின் புதிய லிமிடேட் எடிசனின் விலை ஐரோப்பாவில் 34,900 யூரோவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.30.51 லட்சம் என வருகிறது.

வெறும் 166 கிலோ எடையுடன் புதிய அப்ரில்லா லிமிடேட் எடிசன் பைக்... என்ன விலை தான் மயக்கம்வர வைக்கிறது

மற்ற பிராண்ட்களின் விலையுயர்ந்த பாகங்களுடன் ட்ராக்குகளுக்கு ஏற்ற பைக்காக விற்பனை செய்யப்பட்டுவரும் அப்ரில்லா டுயோனோ வி4 எக்ஸ் பைக்கின் விலை இவ்வளவு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டாலும் இதன் 10 மாதிரிகளும் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுவிட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

வெறும் 166 கிலோ எடையுடன் புதிய அப்ரில்லா லிமிடேட் எடிசன் பைக்... என்ன விலை தான் மயக்கம்வர வைக்கிறது

டுயோனோ வி4 எக்ஸ் லிமிடேட் எடிசன் பைக்கை மோட்டோஜிபி குழு மற்றும் ஜிபி-ஸ்பெக் பைக் குழுவினர்களின் உதவியுடன் அப்ரில்லா நிறுவனம் வடிவமைத்துள்ளது. தற்போதைய-பந்தய வீரர் அலிக்ஸ் எஸ்பர்காரோ மற்றும் அணியின் டெஸ்ட் ரைடர் லோரென்சோ சால்வடோரி, டுவோனோ வி 4 எக்ஸ் பைக்கில் பயணம் செய்ததோடு, ஒற்றை-துண்டு கைப்பிடியை உயர்த்தியிருந்தாலும் செயல்திறனைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.

வெறும் 166 கிலோ எடையுடன் புதிய அப்ரில்லா லிமிடேட் எடிசன் பைக்... என்ன விலை தான் மயக்கம்வர வைக்கிறது

இதற்கு மிக முக்கிய காரணம் பைக்கின் மிகவும் குறைவான எடை ஆகும். மொத்தம் 166 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த லிமிடேட் எடிசன் பிராண்ட்டின் மற்றொரு ஆர்எஸ்வி4 எக்ஸ் லிமிடேட் எடிசனை காட்டிலும் வெறும் 1 கிலோ மட்டுமே எடை அதிகமாக உள்ளது.

வெறும் 166 கிலோ எடையுடன் புதிய அப்ரில்லா லிமிடேட் எடிசன் பைக்... என்ன விலை தான் மயக்கம்வர வைக்கிறது

இத்தகைய குறைவான எடைக்கு பைக்கின் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள கரீம நார்பொருள்கள் (கார்பன்-பைபர்) தான் முக்கிய காரணங்களாக அமைக்கின்றன. இவற்றுடன் பெரும்பான்மையான பாகங்கள் அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டிருப்பதும் பைக்கின் குறைவான எடைக்கு காரணமாகும்.

வெறும் 166 கிலோ எடையுடன் புதிய அப்ரில்லா லிமிடேட் எடிசன் பைக்... என்ன விலை தான் மயக்கம்வர வைக்கிறது

அலுமினியத்தால் ஆன பாகங்களில் க்ளட்ச் மற்றும் ப்ரேக் லிவர்கள், கார்ன்க்கேஸ் பாதுகாப்பான், கால் பாதம் வைக்கும் பகுதி மற்றும் பெட்ரோல் டேங்க் மூடி உள்ளிட்டவை அடங்குகின்றன. மேலும் பைக்கின் எடையை குறைக்கும் விதமாக மார்செசினி மெக்னீசியம் சக்கரங்களில் பைரெல்லி பந்தய மென்மையான டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வெறும் 166 கிலோ எடையுடன் புதிய அப்ரில்லா லிமிடேட் எடிசன் பைக்... என்ன விலை தான் மயக்கம்வர வைக்கிறது

டுயோனோ வி4 எக்ஸ் எடிசனில் 1077சிசி வி4 என்ஜின் ஆர்எஸ்வி4 1100 ஃபாக்டேரி பைக்கில் பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 218 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இத்தகைய அதிகப்படியான என்ஜின் உடன் பைக்கின் குறைவான 166 கிலோ எடை இணைந்தால் ஒரு டன்னிற்கு 1208 எச்பி ஆற்றல் செலவிடப்படும் என நாங்கள் கணித்துள்ளோம்.

வெறும் 166 கிலோ எடையுடன் புதிய அப்ரில்லா லிமிடேட் எடிசன் பைக்... என்ன விலை தான் மயக்கம்வர வைக்கிறது

இந்த ஆற்றல் ஆனது சுருள் காற்று வடிகட்டி, முழு-அமைப்பு அக்ராபோவிக் டைட்டானியம் எக்ஸாஸ்ட் சிஸ்டம், ஸ்லிப்-க்ளட்ச் உடன் உள்ள 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் 2-வழி விரைவான ஷிஃப்டர் உள்ளிட்டவற்றுடன் பிரித்தெடுக்கப்படுகிறது.

வெறும் 166 கிலோ எடையுடன் புதிய அப்ரில்லா லிமிடேட் எடிசன் பைக்... என்ன விலை தான் மயக்கம்வர வைக்கிறது

அப்ரில்லா பிராண்டின் ஜிபி மோட்டார்சைக்கிள்களில் இருந்து எடுத்து பொருத்தப்பட்டுள்ள முன்புற எதிர் காற்று தடுப்பான் ரைடருக்கு நல்ல ஹேண்ட்லிங்கை வழங்கும். அதேபோல் இந்த புதிய கண்ணாடி அதிவேகத்திலும், ப்ரேக் மற்றும் குதித்தலின்போதும் காற்றியக்கவியல் நிலைப்பாட்டை பைக்கிற்கு வழங்கும்.

வெறும் 166 கிலோ எடையுடன் புதிய அப்ரில்லா லிமிடேட் எடிசன் பைக்... என்ன விலை தான் மயக்கம்வர வைக்கிறது

பைக்கின் சஸ்பென்ஷன் பணியினை கவனிக்க ஹோலின்ஸின் செமி-ஆக்டிவ் எலக்ட்ரானிக் சஸ்பென்ஷனும், ப்ரேக்கிங் பணியை கவனிக்க இருசக்கரங்களிலும் ப்ரெம்போ ஜிபி4-எம்எஸ் காலிபர்களுடன் முன்சக்கரத்தில் ப்ரெம்போ டி-ட்ரைவ் இரட்டை டிஸ்க்கும் பின் சக்கரத்தில் அதன் சிங்கிள் டிஸ்க்கும் வழங்கப்பட்டுள்ளன.

வெறும் 166 கிலோ எடையுடன் புதிய அப்ரில்லா லிமிடேட் எடிசன் பைக்... என்ன விலை தான் மயக்கம்வர வைக்கிறது

இவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஜிபிஎஸ் சென்சார் உடன் செயல்படக்கூடிய டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்டேஷன் அப்ரில்லா டுயோனோ வி4 எக்ஸ் பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக லேப் நேரம் உள்ளிட்ட தகவல்களை பெறலாம். கிராஃபிக்ஸ் போன்றவை ஆர்எஸ்வி1000 ஃபேக்டெரி பைக்கில் எடுக்கப்பட்டுள்ளன.

வெறும் 166 கிலோ எடையுடன் புதிய அப்ரில்லா லிமிடேட் எடிசன் பைக்... என்ன விலை தான் மயக்கம்வர வைக்கிறது

நோல் பந்தயத் துறைக்கு பிரத்யேக அணுகல் உள்ளவர்களில் 10 அதிர்ஷடசாலிகள் இந்த லிமிடேட் எடிசன் பைக்கை நேரடியாக தொழிற்சாலையில் இருந்து பெறவுள்ளனர். இவர்களுக்கு பைக்குடன் பைக்கிற்கு ஒத்த கிராஃபிக்ஸ் டிசைனில் கேஒய்டி என்எக்ஸ்-ரேஸ் ஹெல்மேட்டும் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #அப்ரில்லா #aprilia
English summary
Aprilia Unveiled Tuono V4 X Limited Edition Motorcycle: 218bhp & 166 Kilo Track Moster
Story first published: Tuesday, September 1, 2020, 1:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X