முக்கிய நகரத்தில் டூ வீலர்களுக்கு தடை விதிக்க முடிவு... எங்கு என்பதுதான் ஆச்சரியம்... இது சாத்தியமா?

முக்கிய நகரம் ஒன்றில் இருசக்கர வாகனங்களின் இயக்கத்திற்கு தடைவிதிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. அதுகுறித்த தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

முக்கிய நகரத்தில் டூ வீலர்களுக்கு தடை விதிக்க முடிவு... எங்கு என்பதுதான் ஆச்சரியம்... இதெல்லாம் சாத்தியம்தானா?

இந்திய இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான இருசக்கர வாகனங்களில் கேடிஎம் நிறுவனத்தின் தயாரிப்புகளும் ஒன்று. இந்நிறுவனம் ஓர் ஆஸ்திரியா நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

முக்கிய நகரத்தில் டூ வீலர்களுக்கு தடை விதிக்க முடிவு... எங்கு என்பதுதான் ஆச்சரியம்... இதெல்லாம் சாத்தியம்தானா?

இந்த பிரபலமான நிறுவனம் இயங்கிக் கொண்டிருக்கும் ஆஸ்திரியா நாட்டின் தலைநகரமான வியன்னா-வில்தான் தற்போது இருசக்கர வாகனங்களின் இயக்கத்திற்கு தடை விதிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை அந்நாட்டு பிரபல ஊடகமான விஷர்டவுண் வெளியிட்டுள்ளது.

முக்கிய நகரத்தில் டூ வீலர்களுக்கு தடை விதிக்க முடிவு... எங்கு என்பதுதான் ஆச்சரியம்... இதெல்லாம் சாத்தியம்தானா?

என்ன சொல்றீங்க, அப்போ இருசக்கர வாகனங்களை வைத்திருப்போர் மற்றும் அதனை விற்பனைச் செய்வோர்களின் நிலைமை என்னவாகும்? என பல கேள்விகள் நம் மத்தியில் எழும்புகின்றது. ஆனால், இதுகுறித்து சற்றும் உள்ளூர் அதிகாரிகள் வருத்தப்படுவதாக தெரியவில்லை எனவும் விஷர்டவுண் தெரிவித்துள்ளது.

முக்கிய நகரத்தில் டூ வீலர்களுக்கு தடை விதிக்க முடிவு... எங்கு என்பதுதான் ஆச்சரியம்... இதெல்லாம் சாத்தியம்தானா?

அதற்கேற்ப இருசக்கர வாகனங்களின் இயக்கத்தை முற்றிலுமாக நிறுத்த வைக்கின்ற முயற்சிகள் அங்கு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அதிரடி முடிவால் வியன்னா வாசிகள் பெரிதும் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். அதிலும், இருசக்கர வாகனங்களைச் சார்ந்து தொழிலை மேற்கொண்டு வரும் மக்களின் நிலை கேள்விக்குறியாக மாறியுள்ளது. மேலும், தற்போது பயன்பாட்டில் இருக்கும் டூ-வீலர்களின் நிலைமையும் கேள்விக் குறியாக மாறியுள்ளது.

முக்கிய நகரத்தில் டூ வீலர்களுக்கு தடை விதிக்க முடிவு... எங்கு என்பதுதான் ஆச்சரியம்... இதெல்லாம் சாத்தியம்தானா?

சமீபத்தில், ஆஸ்திரியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்றான டைரோல் இதுபோன்று இருசக்கர வாகனங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்தை தலைநகர் வியன்னாவிலும் டூ-வீலர்களை தடைச் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இங்கு இருசக்கர வாகனங்களை ரைடு செய்வதற்கு ஏற்ப மிகவும் பொருத்தமான சாலைகள் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

முக்கிய நகரத்தில் டூ வீலர்களுக்கு தடை விதிக்க முடிவு... எங்கு என்பதுதான் ஆச்சரியம்... இதெல்லாம் சாத்தியம்தானா?

இதன்காரணமாக, அங்கு பைக் ரைடர்களை அதிகம் காண முடியும். இந்த தடையானது சுற்றுப்புறச் சூழலைக் கருத்தில் கொண்டு, வெறும் எரிபொருளால் இயங்கும் இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ள தடை என தவறாக நினைத்துக் கொள்ள வேண்டும். இந்த தடையில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கும் அடங்கும்.

முக்கிய நகரத்தில் டூ வீலர்களுக்கு தடை விதிக்க முடிவு... எங்கு என்பதுதான் ஆச்சரியம்... இதெல்லாம் சாத்தியம்தானா?

சுற்றுப்புற சீர்கேட்டை கருத்தில் கொண்டு வியன்னா வாசிகளில் பெரும்பாலனோர் மின்சார வாகனப் பயன்பாட்டிற்கு மாறியிருக்கின்றனர். தற்போதும் மாறிக்கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில், அனைத்து விதமான இருசக்கர வாகனங்களின் இயக்கத்திற்கும் தடை விதிக்க எடுக்கப்பட்டிருக்கும் முடிவு அந்த மக்களிடையே அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய நகரத்தில் டூ வீலர்களுக்கு தடை விதிக்க முடிவு... எங்கு என்பதுதான் ஆச்சரியம்... இதெல்லாம் சாத்தியம்தானா?

ஏன், இருசக்கர வாகனங்களுக்கு தடை?, இதனால் பயன் என்ன? இவ்வாறு பல கேள்விகள், வியன்னா அதிகாரிகளின் நடவடிக்ககையைக் கண்டு உங்களுக்கு எழுப்பியிருக்கும். வியன்னாவை 'கார் ஃப்ரீ' நகரமாக மாற்றும் நோக்கத்தில் மட்டுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. எனவேதான் இந்த முடிவு அந்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய நகரத்தில் டூ வீலர்களுக்கு தடை விதிக்க முடிவு... எங்கு என்பதுதான் ஆச்சரியம்... இதெல்லாம் சாத்தியம்தானா?

வியன்னாவில் கார் பயனர்கள் அதிகம் இருந்தாலும், தினசரி பயன்பாட்டிற்காக இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோரும் அதிகம் இருக்கின்றனர். இவர்களில் பலர் மின்சார வாகனங்களின் பயன்பாட்டிற்கு மாறியிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையில்தான் வியன்னா அதிகாரிகள் இந்த அதிர்ச்சிகரமான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றனர்.

முக்கிய நகரத்தில் டூ வீலர்களுக்கு தடை விதிக்க முடிவு... எங்கு என்பதுதான் ஆச்சரியம்... இதெல்லாம் சாத்தியம்தானா?

இந்த தடையானது, இருசக்கர வாகனங்களை நகரத்தின் மையப் பகுதியில் பார்க்கிங் செய்வதற்கும் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், நகரத்தை சுற்றியமைக்கப்பட்டிருக்கும் ரிங் ரோடில் இருசக்கர வாகனங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், விற்பனை பிரதிநிதிகள், சாதரணமான அலுவலக பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் டூ வீலர்களை இயக்க அனுமதி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.

முக்கிய நகரத்தில் டூ வீலர்களுக்கு தடை விதிக்க முடிவு... எங்கு என்பதுதான் ஆச்சரியம்... இதெல்லாம் சாத்தியம்தானா?

வியன்னா நகரத்தின் இந்த முடிவு கேடிஎம் நிறுவனத்திற்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கேள்வியும் உங்களுக்கு எழும்பியிருக்கலாம். ஆனால், இந்த நிறுவனம் வியன்னாவில் இருந்து சுமார் 300 கிமீ இடைவெளியில் அமைந்துள்ளது. அதாவது ஜெர்மனின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. எனவே, இந்த தடை கேடிஎம் நிறுவனத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என தெரிகின்றது.

முக்கிய நகரத்தில் டூ வீலர்களுக்கு தடை விதிக்க முடிவு... எங்கு என்பதுதான் ஆச்சரியம்... இதெல்லாம் சாத்தியம்தானா?

பொதுவாக இந்தியாவில் இருசக்கர வாகனத்தின் இயக்கத்திற்கு மிக முக்கியமான சாலைகளில் மட்டுமே தடை விதிக்கப்பட்ட சூழ்நிலைக் காணப்படுகின்றது. அதாவது, எக்ஸ்பிரஸ் வே மற்றும் குறிப்பிட்ட நகரங்களின் ரிங் ரோடு உள்ளிட்டவற்றில் மட்டுமே இருசக்கர வாகனங்களின் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய நகரத்தில் டூ வீலர்களுக்கு தடை விதிக்க முடிவு... எங்கு என்பதுதான் ஆச்சரியம்... இதெல்லாம் சாத்தியம்தானா?

ஆனால், ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் 'கார் ஃப்ரீ' பகுதியாக மாற்றும் நோக்கில் கொண்டு வரப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பொதுமக்கள் மற்றும் பலர் தரப்பில் இருந்து எதிர்ப்பு எழும்பிய வண்ணம் இருக்கின்றது. எனவே, இங்கு என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Austrian Government Planning To Ban Motorcycle From Vienna. Read In Tamil.
Story first published: Thursday, June 25, 2020, 15:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X