அவான் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தின் பெயர் மாற்றம்... தயாரிப்புகளும் நிறுத்தமா?

புனேவை மைய இடமாக கொண்டு செயல்பட்டு வரும் அவான் மோட்டார்ஸ் நிருவனம் தனது நிறுவனத்தை மறு சீரமைப்பு செய்துள்ளது. இதன்படி இந்த நிறுவனத்தின் பெயர் நெக்ஸ்ஸு மொபைலிட்டி என மாற்றப்பட்டுள்ளது.

அவான் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தின் பெயர் மாற்றம்... தயாரிப்புகளும் நிறுத்தமா?

இந்த புதிய சீரமைப்பு நடவடிக்கைகள் இந்த மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்நிறுவனம் தனது பெயர் மட்டுமில்லாமல் மொத்த போர்ட்ஃபோலியோ, லோகோ மற்றும் மார்க்கெட்டில் தான் வகித்துவரும் நிலை என அனைத்தையும் மாற்றியமைக்கவுள்ளது.

அவான் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தின் பெயர் மாற்றம்... தயாரிப்புகளும் நிறுத்தமா?

புனேவில் செயல்பட்டு வருகின்ற நெக்ஸ்ஸு மொபைலிட்டி நிறுவனத்தின் 22,000 சதுர அடி தொழிற்சாலையில் இந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. மேலும் இந்நிறுவனம் தற்சமயம் 60 டீலர்ஷிப்களை இந்தியா முழுவதும் கொண்டுள்ளது.

அவான் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தின் பெயர் மாற்றம்... தயாரிப்புகளும் நிறுத்தமா?

மோட்டார்ஸ் என்ற பெயர் மொபைலிட்டி என மாற்றப்பட்டிருப்பது மூலமாக எங்களது நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் மட்டுமில்லாமல் எலக்ட்ரானிக் மொபைலிட்டி துறையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை வழங்கவும் தயாராகவுள்ளது என்பதை அறியலாம் என நெக்ஸ்ஸு நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

அவான் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தின் பெயர் மாற்றம்... தயாரிப்புகளும் நிறுத்தமா?

புதிய லோகோ டிசைன் இந்நிறுவனத்திற்கு புதிய அடையாளத்தை தருகிறது. இந்த புதிய லோகோவில் இரு முக்கியமான கூறுகள் அடங்கியுள்ளன. அவற்றில் ஒன்று வட்ட வடிவிலான நெக்ஸ்ஸு பேட்ஜ், மற்றொன்று ஸ்டைலான நெக்ஸ்ஸு என்கிற வார்த்தை. இதேபோல் தனது தயாரிப்பு மாடல்களின் வரிசைகளையும் இந்நிறுவனம் ரீ-ப்ராண்டிங்கால் வலுப்படுத்தவுள்ளது.

அவான் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தின் பெயர் மாற்றம்... தயாரிப்புகளும் நிறுத்தமா?

இதற்காக டெக்ஸ்ட்ரோ மற்றும் டெக்ஸ்ட்ரோ ப்ளஸ் என்ற இரு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக நெக்ஸ்ஸு மொபைலிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இவற்றுடன் புதியதாக மூன்று எலக்ட்ரிக் சைக்கிள்களையும் அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

அவான் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தின் பெயர் மாற்றம்... தயாரிப்புகளும் நிறுத்தமா?

இவை மட்டுமில்லாமல் பி2பி ப்ரோகிராம் மூலமாக எலக்ட்ரிக் மொபைலிட்டி துறையில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்கும் பணியில் ஈடுப்படவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த எலக்ட்ரிக் மொபைலிட்டி தீர்வுகளை இந்நிறுவனம் ரைட்-ஷேரிங்/ வாடகை கம்பெனிகளுக்கு வழங்கவுள்ளது. நெக்ஸ்ஸுவின் இந்த தீர்வுகளை இத்தகைய கம்பெனிகள் கார்ப்ரேட் குத்தகை மற்றும் கார்ப்ரேட் கொள்முதல் உள்ளிட்டவற்றிற்காக பயன்படுத்தி கொள்ள முடியும்.

அவான் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தின் பெயர் மாற்றம்... தயாரிப்புகளும் நிறுத்தமா?

மேலும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தொழிலாளர்கள் முன்னுரிமை திட்ட நன்மைகள் மற்றும் அரசாங்க/ தனியார் டெண்டர்கள் போன்றவற்றை நெக்ஸ்ஸு வழங்கும் தீர்வுகள் மூலம் பெற முடியும். இதுகுறித்து நெக்ஸ்ஸு மொபைலிட்டி நிறுவனத்தின் ப்ராண்ட் ஹெட், ரோகித் கொய்தானி கூறுகையில், எங்களது நிறுவனம் முழு உத்வேகத்துடன் களமிறங்கியுள்ளது.

அவான் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தின் பெயர் மாற்றம்... தயாரிப்புகளும் நிறுத்தமா?

எங்களது இத்தகைய முயற்சிகளுக்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இந்தியா முழுவதும் எலக்ட்ரிக் மொபைலிட்டி புரட்சி பரவியவுடன், பி2பி மற்றும் பி2சி ப்ரோகிராம்களில் தயாரிக்கப்பட்ட புதுமையான எலக்ட்ரிக் மாடல்கள் எங்களது நிறுவனத்தில் இருந்து வழக்கம்போல் அறிமுகப்படுத்தப்படவுள்ளன என கூறினார்.

அவான் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தின் பெயர் மாற்றம்... தயாரிப்புகளும் நிறுத்தமா?

இந்த ரீ-ப்ராண்ட்டிங் நடவடிக்கை எங்களது அவான் நிறுவனத்தின் பரிமாண வளர்ச்சியாகும். இது எங்களது நிறுவனத்திற்கு மட்டுமில்லாமல் இதுவரை எங்களுக்கு ஆதரவு அளித்து வருகின்ற அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும் என நெக்ஸ்ஸு மொபைலிட்டி நிறுவனத்தின் வணிக பிரிவு முதன்மை அதிகாரி பங்கஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

அவான் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தின் பெயர் மாற்றம்... தயாரிப்புகளும் நிறுத்தமா?

நெக்ஸ்ஸு மொபைலிட்டி என ரீ-ப்ராண்டிங் செய்யப்பட்டுள்ள அவான் ப்ராண்ட்டில் இருந்து தற்சமயம் ட்ரெண்ட் இ மற்றும் எக்ஸீரோ ப்ளஸ் என்ற இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.56,900 மற்றும் ரூ.47,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி இந்த இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தயாரிப்புகளும் விரைவில் நிறுத்தப்படவுள்ளன.

அவான் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தின் பெயர் மாற்றம்... தயாரிப்புகளும் நிறுத்தமா?

நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதால், இனி நெக்ஸ்ஸு நிறுவனத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்படும் ஸ்கூட்டர்களில் புதுமையான காஸ்மெட்டிக் மாற்றங்களையும் வித்தியாசமான மோட்டார் திறனையும் எதிர்பார்க்கலாம். நெக்ஸ்ஸு என்கிற பெயர் நெக்ஸஸ் என்கிற வார்த்தையில் இருந்து உருவாக்கப்பட்டதாக இருக்கும் என தெரிகிறது. நெக்ஸஸ் என்றால் உறவு, இணைவு என்று பொருள்.

Most Read Articles
English summary
Avan Motors Re-Brands Itself As Nexzu Mobility: To Offer Total E-Mobility Solutions
Story first published: Thursday, January 9, 2020, 11:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X