பஜாஜ்-கேடிஎம் கூட்டணியில் அதி திறன் எலெக்ட்ரிக் பைக்... அறிமுகம் எப்போது..? ஆவலை தூண்டிய அறிவிப்பு!

பஜாஜ்-கேடிஎம் நிறுவனங்கள் இந்திய இளைஞர்களை மெர்சலாக்கின்ற வகையிலான ஓர் தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

மெர்சலான தகவல் வெளியிட்ட பஜாஜ்-கேடிஎம்... இதுக்குதான் காத்திருக்கிறார்கள் இந்திய இளைஞர்கள்... என்ன தெரியுமா?

பஜாஜ் ஆட்டோ மற்றும் கேடிஎம் ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டமைப்பு இந்தியாவில் மட்டுமின்றி சில சர்வதேச சந்தையிலும் நீடித்து வருகின்றது. இந்த உறவை மேலும் பிணைக்கும் வகையில் பல்வேறு செயல்களில் அந்த நிறுவனங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. அம்மாதிரியான ஓர் தகவல்தான் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

மெர்சலான தகவல் வெளியிட்ட பஜாஜ்-கேடிஎம்... இதுக்குதான் காத்திருக்கிறார்கள் இந்திய இளைஞர்கள்... என்ன தெரியுமா?

அதவாது, இவ்விரு நிறுவனங்களும் இணைந்து உயர் ரக பெர்ஃபார்மன்ஸ் பைக்குகளை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் பஜாஜ் மற்றும் கேடிஎம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், அந்த பைக் வருகின்ற 2022ம் ஆண்டிற்குள்ளாகவே அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என்ற கூடுதல் ஆவலை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

MOST READ: பிஎஸ்6 எஞ்சின் மற்றும் புதிய பொலிவில் விரைவில் வருகிறது ரெனோ கேப்ச்சர்!

மெர்சலான தகவல் வெளியிட்ட பஜாஜ்-கேடிஎம்... இதுக்குதான் காத்திருக்கிறார்கள் இந்திய இளைஞர்கள்... என்ன தெரியுமா?

அண்மைக் காலங்களாக இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதிலும், இந்தியாவில் மின்சார டூ-வீலர்களுக்கான எதிர்பார்ப்பே சற்று கூடுதலாக இருக்கின்றது. எனவேதான் அந்த சந்தையைக் கைப்பற்றும் விதமாக புதிய பெர்ஃபார்மென்ஸ் பைக்கை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மெர்சலான தகவல் வெளியிட்ட பஜாஜ்-கேடிஎம்... இதுக்குதான் காத்திருக்கிறார்கள் இந்திய இளைஞர்கள்... என்ன தெரியுமா?

இந்த பைக் மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள சக்கான் உற்பத்தியாலையில் தயாரிக்கப்பட இருக்கின்றது.

கடந்த ஆண்டின் மத்தியில் கேடிஎம் இன்டஸ்ட்ரீஸ் ஏஜி ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், மின்சார வாகனங்களை உருவாக்குவதற்கான திட்டம் செயல்பாட்டுக் கொண்டுவரப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

MOST READ: டொயோட்டா யாரிஸ் செடான் காரின் விலை ரூ.1.68 லட்சம் வரையில் அதிகரிப்பு... க்ளான்ஸாவின் விலையும் உயர்வு

மெர்சலான தகவல் வெளியிட்ட பஜாஜ்-கேடிஎம்... இதுக்குதான் காத்திருக்கிறார்கள் இந்திய இளைஞர்கள்... என்ன தெரியுமா?

இந்த அறிவிப்பைத் தொடர்ந்தே தற்போது இரு நிறுவனங்களும் இணைந்து மின்சார பைக்கைத் தயாரிக்க இருக்கின்றன.

இந்த மின்சார இரு சக்கர வாகனங்களின் செயல்திறன் 3 கிலோவாட் முதல் 10 கிலோவாட் வரை இருக்கும் என்று தெரிகின்றது.

மெர்சலான தகவல் வெளியிட்ட பஜாஜ்-கேடிஎம்... இதுக்குதான் காத்திருக்கிறார்கள் இந்திய இளைஞர்கள்... என்ன தெரியுமா?

இதற்காக உருவாக்கப்படும் கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுதான் எதிர்கால மின்சார பைக்குகளையும் பஜாஜ்-கேடிஎம் கூட்டணி தயாரிக்க இருக்கின்றது. எனவே, வருகின்ற 2022ம் ஆண்டில் மட்டுமின்றி அடுத்தடுத்து வரும் மாடல்களும் பெர்ஃபார்மன்ஸ் மின்சார பைக்காகவே இருக்கும் என தெரிகின்றது.

MOST READ: வெறும் 250 ரூபாயில் கார்களில் கிருமிநீக்கம் செய்து தரும் விண்ட்ஷீல்டு எக்ஸ்பர்ட்ஸ்!

மெர்சலான தகவல் வெளியிட்ட பஜாஜ்-கேடிஎம்... இதுக்குதான் காத்திருக்கிறார்கள் இந்திய இளைஞர்கள்... என்ன தெரியுமா?

அதேசமயம், அவை பட்ஜெட் விலைக்குள் அடங்கும் பைக்காகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அதுகுறித்த தகவல் இரண்டு ஆண்டுகள் கழித்தே தெரியவரும். இந்த பைக்கைப் போலவே இலகு ரக எடையுள்ள ஸ்கூட்டர் மற்றும் மொபட்டுகளைத் தயாரிக்கும் பணியிலும் கேடிஎம் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஈடுபட்டு வருகின்றது. இதற்கான காலக்கெடுவை இன்னும் அந்த நிறுவனங்கள் இறுதிச் செய்யவில்லை.

மெர்சலான தகவல் வெளியிட்ட பஜாஜ்-கேடிஎம்... இதுக்குதான் காத்திருக்கிறார்கள் இந்திய இளைஞர்கள்... என்ன தெரியுமா?

எனவே, பஜாஜ்-கேடிஎம் கூட்டணியில் வெளிவரவிருக்கும் மின்சார மொபட்டின் அறிமுகம் மர்மமகாவே இருக்கின்றது.

அதேசமயம், பஜாஜ் நிறுவனம் சமீபத்தில்தான் அதன் சேத்தக் மாடலில் மின்சார ஸ்கூட்டர் ஒன்றை இந்தியச் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

MOST READ: இரண்டே பேர்தான், ஆனா திருடியது 18 கார்கள்! அத்தனையும் விலையுயர்ந்த எஸ்யூவி கார்கள்...

மெர்சலான தகவல் வெளியிட்ட பஜாஜ்-கேடிஎம்... இதுக்குதான் காத்திருக்கிறார்கள் இந்திய இளைஞர்கள்... என்ன தெரியுமா?

அந்த ஸ்கூட்டர் ஆரம்பகட்டமாகா இந்தியாவின் சில முக்கிய நகரங்களில் மட்டுமே தற்போது விற்பனைக்குக் கிடைக்கின்றது. சென்னை போன்ற நகரங்களில் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. ஆனால், நாடு முழுவதும் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் பஜாஜ் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இதைக்காட்டிலும், மின்சார பைக்குகளுக்கே அது முக்கியத்துவத்தைக் கொடுத்து வருகின்றது.

மெர்சலான தகவல் வெளியிட்ட பஜாஜ்-கேடிஎம்... இதுக்குதான் காத்திருக்கிறார்கள் இந்திய இளைஞர்கள்... என்ன தெரியுமா?

இருப்பினும், சென்னயில் பஜாஜ் நிறுவனத்தின் சேத்தக் மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்குக் களமிறக்கப்படுமேயானால், அது தற்போது விற்பனையில் இருக்கும் ஏத்தர் நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக இருக்கும். பஜாஜ் சேத்தக் பிரிமியம் ஸ்கூட்டர் தரத்தில் விற்கப்படுவதால் அது கேடிஎம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதேநிலைதான் சென்னையிலும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அறிவிப்பு எதுவும் பஜாஜ் தரப்பில் இருந்து வெளிவராமல் இருப்பது சென்னை வாசிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Note: Images Are For Representation Purpose Only

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bajaj Auto & KTM Are Working On Performance Based High End Electric Two-Wheelers. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X