உள்நாட்டில் பூஜ்யம்தான்... ஏற்றுமதியில் கொஞ்சம் சரிகட்டிய பஜாஜ் ஆட்டோ!

கொரோனா ஊரடங்கால் உள்நாட்டு விற்பனை பூஜ்யமாக பதிவான நிலையில், ஏற்றுமதியில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இழப்பை ஓரளவு சரி கட்டி உள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஏற்றுமதியில் கொஞ்சம் சரிகட்டிய பஜாஜ் ஆட்டோ!

கொரோனா பிர்சனை உலக பொருளாதாரத்தை ஆட்டம் காண செய்துவிட்டது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு காரணமாக, 40 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் 17ந் தேதி வரை தேசிய ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஏற்றுமதியில் கொஞ்சம் சரிகட்டிய பஜாஜ் ஆட்டோ!

இந்த சூழலால், ஆட்டோமொபைல் துறை நிறுவனங்கள் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளன. நாள் ஒன்றுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பை ஆட்டோமொபைல் துறை சந்தித்து வருகிறது. இந்திய ஆட்டோமொபைல் வரலாற்றில் முதல்முறையாக கடந்த மாதம் விற்பனை பூஜ்யமாக பதிவாகி உள்ளது.

ஏற்றுமதியில் கொஞ்சம் சரிகட்டிய பஜாஜ் ஆட்டோ!

நம் நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் தனது வரலாற்றில் மிக மோசமான தருணத்தை சந்தித்துள்ளது. கடந்த மாதம் உள்நாட்டு விற்பனை பூஜ்யமாக பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஏற்றுமதியில் கொஞ்சம் சரிகட்டிய பஜாஜ் ஆட்டோ!

அதேநேரத்தில், கடந்த ஏப்ரலில் 32,009 இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 1,60,393 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த நிலையில், கடந்த மாதம் 5ல் ஒரு பங்கு அளவே ஏற்றுமதி செய்துள்ளது.

ஏற்றுமதியில் கொஞ்சம் சரிகட்டிய பஜாஜ் ஆட்டோ!

ஆனால், பிற நிறுவனங்களை ஒப்பிடும்போது, ஏற்றுமதியில் ஓரளவு எண்ணிக்கையை ஆறுதல் பெற்றிருக்கிறது பஜாஜ் ஆட்டோ நிறுவனம். அதேபோன்று, கடந்த ஆண்டு 30,818 வர்த்தக வாகனங்கள ஏற்றுமதி செய்திருந்த பஜாஜ் ஆட்டோ, கடந்த மாதத்தில் 5,869 வர்த்தக வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. மொத்தமாக 37,878 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.

ஏற்றுமதியில் கொஞ்சம் சரிகட்டிய பஜாஜ் ஆட்டோ!

ஏற்றுமதியில் கவனம் செலுத்தாத பிற நிறுவனங்களின் விற்பனை பூஜ்யமாகி தவித்து வரும் நிலையில், இந்த இக்கட்டான தருணத்திலும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பொருளாதார இழப்பை இந்த குறைந்தபட்ச ஏற்றுமதி கூட ஓரளவு இழப்பை சரிகட்ட உதவி இருக்கிறது.

ஏற்றுமதியில் கொஞ்சம் சரிகட்டிய பஜாஜ் ஆட்டோ!

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திற்கு மஹாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்திலும், உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரிலும் வாகன உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. ருத்ராபூர் ஆலை கடந்த மாதம் 20ந் தேதி முதலும் அவுரங்காபாத் ஆலை 24ந் தேதி முதலும் குறைந்தபட்ச இலக்குடன் உற்பத்தி மீண்டும் துவங்கப்பட்டது.

More from DriveSpark

Article Published On: Monday, May 4, 2020, 15:30 [IST]
English summary
Bajaj Auto has revealed that didn't sell any two-wheelers or commercial vehicles in the domestic market in April. However, The company has shipped 32,009 two-wheeler units to overseas markets last month, Bajai Auto said in a statement.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+