அதிகாரிகள் அனுமதி அளித்தனர்... தொழிற்சாலைகளை திறக்கும் பஜாஜ் ஆட்டோ...

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் தனது இரு தொழிற்சாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு உள்ளூர் அதிகாரிகளிடம் இருந்து அனுமதியை பெற்றுள்ளது. இதனால் மஹராஷ்டிரா, அவ்ரங்காபாத்தில் உள்ள இந்நிறுவனத்தின் வாலுஜ் தொழிற்சாலையிலும், உத்தரகாண்ட், ருத்ராபூரில் உள்ள தொழிற்சாலையிலும் விரைவில் தயாரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதிகாரிகள் அனுமதி அளித்தனர்... தொழிற்சாலைகளை திறக்கும் பஜாஜ் ஆட்டோ...

பஜாஜின் தயாரிப்பு பணிகள் உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படியே மறு தொடக்கம் செய்யப்படவுள்ளது. அதாவது, கடந்த ஏப்ரல் 20ஆம் தேதியில் இருந்து கிராமப்புறங்களில் உள்ள தொழில் நிறுவனங்களை சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கலாம் என அரசாங்கம் அறிவித்திருந்தது.

அதிகாரிகள் அனுமதி அளித்தனர்... தொழிற்சாலைகளை திறக்கும் பஜாஜ் ஆட்டோ...

இந்த கட்டுப்பாடுகளில் தொழிற்சாலை பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் அடங்கும். இதனால் கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து திறக்கப்பட்டுள்ள பஜாஜின் இந்த இரு தொழிற்சாலைகளும் இத்தகைய நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அதிகாரிகள் அனுமதி அளித்தனர்... தொழிற்சாலைகளை திறக்கும் பஜாஜ் ஆட்டோ...

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில் பஜாஜ் நிறுவனம் அவ்ராங்காபாத்தில் உள்ள வாலுஜ் தொழிற்சாலை பணியில் ஈடுப்படுத்துவதற்காக 850 தொழிலாளர்களுக்கான அனுமதியை பெற்றுள்ளது. இந்த தொழிற்சாலைகளில் முதல் வேலையாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பஜாஜ் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் வணிக பயன்பாட்டு வாகனங்களுக்கான க்னாக்டு-டவுன் கிட்ஸ் தயாரிக்கப்படவுள்ளன.

அதிகாரிகள் அனுமதி அளித்தனர்... தொழிற்சாலைகளை திறக்கும் பஜாஜ் ஆட்டோ...

ஏனெனில் மற்ற நாட்டு சந்தைக்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களின் மூலமாக தற்போதைய பண தேவையை ஓரளவு சமாளிக்க முடியும் என இந்நிறுவனம் கருதுகிறது. இந்த கருத்தை வெளிப்படுத்தும் விதமாக, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சர்மா, தங்களது நிறுவனத்தின் ரூ.1000 மதிப்பிலான ஏற்றுமதி ஆர்டர்கள் நிலுவையில் உள்ளதாக கூறியுள்ளார்.

அதிகாரிகள் அனுமதி அளித்தனர்... தொழிற்சாலைகளை திறக்கும் பஜாஜ் ஆட்டோ...

பஜாஜ் நிறுவனம் அதன் மொத்த தயாரிப்பில் 50 சதவீதத்தை ஏற்றுமதி செய்து வருகிறது. இத்தகைய ஏற்றுமதி வாகனங்கள் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் மற்ற தென்கிழக்கு ஆசிய நாட்டு சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

அதிகாரிகள் அனுமதி அளித்தனர்... தொழிற்சாலைகளை திறக்கும் பஜாஜ் ஆட்டோ...

பஜாஜ் நிறுவனத்தின் இரு தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டாலும், இந்நிறுவனத்தின் பிரதான சாகான் தொழிற்சாலை குறைந்தது இம்மாத இறுதி வரையிலாவது மூடப்பட்டே இருக்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏனெனில் முதலில் புனேவை சுற்றியுள்ள பகுதிகளில் ஊரடங்கை தளர்த்துவதாக அறிவித்திருந்த மஹாராஷ்டிரா அரசாங்கம் பிறகு தனது அறிவிப்பை வாபஸ் பெற்று கொண்டது.

அதிகாரிகள் அனுமதி அளித்தனர்... தொழிற்சாலைகளை திறக்கும் பஜாஜ் ஆட்டோ...

இதனால் புனே நகராட்சி ஆணையர்களும், பிம்ப்ரி-சின்ச்வாட் மாநகராட்சிகளும் தங்களது பகுதிகளை ஏப்ரல் 27ஆம் தேதி வரை மூட உத்தரவை பிறப்பித்துள்ளன. தொழிற்சாலை பணியாளர்கள் நிறுவனத்தின் சொந்த முகாம்களில் தங்கியிருந்தால் மட்டுமே அதிகாரிகள் தொழிற்சாலையை திறக்க அனுமதியளிக்கின்றனர்.

அதிகாரிகள் அனுமதி அளித்தனர்... தொழிற்சாலைகளை திறக்கும் பஜாஜ் ஆட்டோ...

இந்திய சந்தைக்கான பிஎஸ்6 வாகனங்களை தயாரிக்க இந்நிறுவனத்திடம் போதுமான சரக்குகள் இருப்பினும், தற்போதைக்கு பஜாஜ் நிறுவனம் வெளிநாட்டு வாகனங்களின் மீது தான் கவனம் செலுத்தவுள்ளது. மீண்டும் தொழிற்சாலைகள் திறக்கப்படவுள்ளதால் பஜாஜ் நிறுவனம் கடந்த ஒரு மாத காலமாக ஊரடங்கினால் அடைந்திருந்த நஷ்டத்தை ஓரளவு சமாளிக்க முயற்சிக்கும் என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Thursday, April 23, 2020, 23:29 [IST]
English summary
Bajaj Auto Restarts Production Operations At Two Facilities: Chakan Plant Remains Shut
மேலும்... #bajaj auto
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+