பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்

இருசக்கர வாகன உற்பத்தியில் நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன விற்பனையிலும் களமிறங்கி உள்ளது. முதல் மாடலாக சேத்தக் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கி இருக்கிறது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்

கடந்த ஆண்டு இறுதியில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்ட இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டிசைன், சிறப்பம்சங்கள் இந்தியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், ஆவலையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு அடுத்த சில நாட்களில் முன்பதிவும் துவங்கப்படும் என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்

இந்த நிலையில், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய நிகழ்ச்சிக்கான அழைப்பை அனுப்பியுள்ளது. அதில், வரும் 14ந் தேதி சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய பத்திரிக்கையாளர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்

இதன்படி, அன்றைய தினம் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை அறிவிக்கப்படும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. அத்துடன் எப்போது டெலிவிரி துவங்கும் என்ற அதிகாரப்பூர்வ தகவலையும் பெறும் வாய்ப்பு இருக்கிறது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்

புதிய பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முதல்கட்டமாக புனே மற்றும் பெங்களூர் நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்

இதைத்தொடர்ந்து, டெல்லி, மும்பை மற்றும் சென்னை உள்ளிட்ட நாட்டின் இதர முக்கிய நகரங்களிலும் படிப்படியாக விற்பனைக்கு கொண்டு வருவதற்கு பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்

மேலும், கேடிஎம் பைக் ஷோரூம்கள் வாயிலாக புதிய பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட இருக்கிறது. எனவே, சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்படும்.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்

புதிய பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட்டுகள், டெயில் லைட்டுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், எல்இடி பகல்வேளை விளக்குகள், ஃபெதர் டச் சுவிட்சுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி மற்றும் இதர முக்கிய தொழில்நுட்ப அம்சங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 75 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்

ரூ.1.10 லட்சம் முதல் ரூ.1.30 லட்சம் வரையிலான ஆன்ரோடு விலையில் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 8, 2020, 11:07 [IST]
English summary
Bajaj Auto India is all set to introduce its first all-electric scooter in the Indian market, with the Chetak. The Bajaj Chetak electric has been confirmed to go on sale in the Indian market from the 14th of January 2020.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+