பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் ஆரம்பமாகின... முழுவிபரம் இதோ...

பஜாஜ் ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் வாகனமான சேத்தக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டுவர அனைத்து விதங்களிலும் தயாராகவுள்ளது. இந்நிலையில் தற்போது, இதன் விற்பனை வருகிற 14ஆம் தேதி முதல் துவங்க உள்ளதால் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டிருப்பதாக பஜாஜ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் ஆரம்பமாகின... முழுவிபரம் இதோ...

பேஸ்-வைஸ் வாரியாக விற்பனை செய்யப்படவுள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர், இந்தியா முழுவதும் உள்ள பஜாஜ் டீலர்ஷிப்களிடம் சென்றடையும் வரை, குறிப்பிட்ட ஐந்து முக்கிய நகரங்களில் மட்டும் தான் கிடைக்கவுள்ளது. சென்னை, பெங்களூர், மும்பை, புனே மற்றும் டெல்லி ஆகியவை இந்த ஐந்து நகரங்கள் ஆகும்.

பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் ஆரம்பமாகின... முழுவிபரம் இதோ...

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான புக்கிங்களும் இன்னும் சில நாட்களில் துவங்கப்பட்டுவிடும் என கூறப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவிரிகள் பெங்களூர் மற்றும் புனேவிலிருந்து தான் முதலில் ஆரம்பமாகவுள்ளன. அதன்பிறகு தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மற்ற மூன்று நகரங்களில் கிடைக்கவுள்ளது.

பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் ஆரம்பமாகின... முழுவிபரம் இதோ...

முன்னதாக இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கேடிஎம் டீலர்ஷிப்களிலும் கிடைக்கும் என பஜாஜ் நிறுவனம் கூறியிருந்தது. இந்நிறுவனம் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தியிருந்தது. மேலும் இதன் பிரிவில் உள்ள மற்றொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரான ஏத்தர் 450-ன் அறிமுகம் குறித்த தகவல்களும் கடந்த ஆண்டு மத்தியில் வெளியாகியிருந்தன.

பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் ஆரம்பமாகின... முழுவிபரம் இதோ...

இந்த ஸ்கூட்டரின் விலை ஆன்-ரோடில் ரூ1.10 லட்சமாக நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஜாஜ் நிறுவனம் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகத்தின்போது ஐபி-67 சான்றளிக்கப்பட்ட லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்பட்டிருப்பதாக கூறியிருந்தது.

பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் ஆரம்பமாகின... முழுவிபரம் இதோ...

மற்றப்படி இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் பற்றிய எந்தவொரு தகவலையும் இந்நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும் இந்த பேட்டரியை 5- 15 ஆம்பியர் எலக்ட்ரிக் பாயிண்ட் மூலமாக சார்ஜ் ஏற்ற முடியும் மற்றும் மின் இழப்பை தவிர்பதற்காக நவீன தொழிற்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என சில தகவல்கள் வெளியாகியிருந்தன.

பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் ஆரம்பமாகின... முழுவிபரம் இதோ...

ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என இரு விதமான ட்ரைவிங் மோட்களில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இயங்கவுள்ளது. இதில் ஈக்கோ மோடில் வைத்து இயக்கும்போது 95 கிமீ தூரமும், ஸ்மார்ட் மோடில் வைத்து பயணிக்கும்போது 85 கிமீ தூரமும் இந்த ஸ்கூட்டர் சிங்கிள் சார்ஜில் இயங்கும் திறன் கொண்டது. வெளிப்புற பாகங்களை பொருத்தவரை, ரெட்ரோ-தீம் உடன் பல்வேறு மாடர்ன் தொழிற்நுட்பங்களை பஜாஜ் நிறுவனம் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கியிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் ஆரம்பமாகின... முழுவிபரம் இதோ...

எல்இடி விளக்கு பொருத்தப்பட்ட ஹெட்லேம்ப் மற்றும் டெயில்லேம்ப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், மெல்லிய தொடுதல் மூலாமாகவே ஆக்டிவேட்டட் ஆகும் ஸ்விட்ச்கள், எல்இடி டிஆர்எல்கள், ஹெட்லைட்டை சுற்றிலும் க்ரோம் மற்றும் ப்ரீமியம் தோற்றத்தில் பெயிண்ட் அமைப்புகள் உள்ளிட்டவை இதன் தொழிற்நுட்ப அம்சங்களாக உள்ளன.

பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் ஆரம்பமாகின... முழுவிபரம் இதோ...

சேத்தக் என்ற பஜாஜ் நிறுவனத்தின் பழைய ஸ்கூட்டர் பெயருடன் அறிமுகமாகும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அந்த ஸ்கூட்டர் கொண்டிருந்த அதே பழைமையான டிசைன் அமைப்பை தான் அப்படியே கொண்டுள்ளது. 6 நிறத்தேர்வுகளில் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையாகவுள்ளது.

பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் ஆரம்பமாகின... முழுவிபரம் இதோ...

புனேக்கு அருகில் உள்ள சகன் நகரில் உள்ள பஜாஜ் தொழிற்சாலையில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாத இறுதியில் துவங்கப்பட்ட இதன் தயாரிப்பு பணிகளில் 80 சதவீதத்தினர் பெண்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். வருகிற 14ஆம் தேதி முதல் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை துவங்கவிருப்பது நிச்சயமாக இந்த ஸ்கூட்டரின் டெலிவிரிகளை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும்.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
Bajaj Chetak Electric Scooter India-Launch Date Confirmed: Here Are All The Details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X