டெலிவிரி பணிகள் நிறுத்தம்... பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இனி செப்டம்பரில் தான் பெற முடியும்..

புனேவை சேர்ந்த மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் ஆட்டோ தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான சேத்தக்கின் தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டரின் டெலிவிரிகள் இனி இந்த வருட செப்டம்பர் மாதத்தில் இருந்து தான் துவங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

டெலிவிரி பணிகள் நிறுத்தம்... பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இனி செப்டம்பரில் தான் பெற முடியும்...

குறிப்பாக பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு முன்பதிவு செய்தவர்களுக்கு தான் பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் செப்டம்பர் மாதத்தில் டெலிவிரி செய்யப்படவுள்ளது. முன்பதிவு காலம், தகவல் சரிபார்ப்பு மற்றும் கட்டண தேதிகளை பொறுத்து பஜாஜ் நிறுவனத்தின் வாகனங்கள் டெலிவிரி செய்யப்படுகின்றன.

டெலிவிரி பணிகள் நிறுத்தம்... பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இனி செப்டம்பரில் தான் பெற முடியும்...

வாகனத்திற்கான இறுதி தொகையை வாடிக்கையாளர்கள் ஆர்டர் டீலர்ஷிப்பை அடைந்து பின்பும் செலுத்தலாம். சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை குறித்து சமீபத்தில் வெளியாகி இருந்த தகவலில் இந்த ஸ்கூட்டர் கடந்த மார்ச் மாதத்தில் 91 யூனிட்கள் விற்பனையாகியுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

டெலிவிரி பணிகள் நிறுத்தம்... பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இனி செப்டம்பரில் தான் பெற முடியும்...

இதன் போட்டி ஸ்கூட்டர் மாடலான டிவிஎஸ் ஐக்யூப் 18 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனையாகியுள்ளது. பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இரு விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சேத்தக் அர்பன் வேரியண்ட் ரூ.1 லட்சத்திலும், சேத்தக் ப்ரீமியம் ரூ.1.15 லட்சத்திலும் விலையை எக்ஸ்ஷோரூமில் பெற்றுள்ளன.

டெலிவிரி பணிகள் நிறுத்தம்... பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இனி செப்டம்பரில் தான் பெற முடியும்...

டிசைன் அமைப்பில் மட்டுமே சிறிது வேறுபாட்டுடன் காணப்படும் சேத்தக் ஸ்கூட்டரின் இந்த இரு வேரியண்ட்களிலும் ஒரே 3 kWh, ஐபி67 லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பு ஸ்கூட்டரை சிங்கிள் சார்ஜில் 95 கிமீ தூரம் வரை இயக்கி செல்லும்.

டெலிவிரி பணிகள் நிறுத்தம்... பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இனி செப்டம்பரில் தான் பெற முடியும்...

மேலும் இந்த எலக்ட்ரிக் மோட்டாரின் மூலமாக அதிகப்பட்சமாக 6.44 பிஎச்பி பவரையும், 16 என்எம் டார்க் திறனையும் பெற முடியும். இதன் பேட்டரி முழு சார்ஜ் அடைய 5 மணிநேரங்களை எடுத்து கொள்கிறது. கொரோனா வைரஸினால் பஜாஜ் நிறுவனம் மட்டுமின்றி அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது தயாரிப்பு பணிகளை வலுக்கட்டயமாக நிறுத்தியுள்ளன.

டெலிவிரி பணிகள் நிறுத்தம்... பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இனி செப்டம்பரில் தான் பெற முடியும்...

இதன் விளைவாக தான் பஜாஜ் நிறுவனம் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவிரி பணிகளை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது. இந்தியாவில் ஊரடங்கு அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை நீடிக்கவுள்ளது. இதனால் நாடு முழுவதும் வாகன தயாரிப்பு பணிகள் மே 3-லிருந்து ஆரம்பமாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெலிவிரி பணிகள் நிறுத்தம்... பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இனி செப்டம்பரில் தான் பெற முடியும்...

பஜாஜ் நிறுவனத்தை பொறுத்தவரையில், இந்நிறுவனத்தின் சாகான் தொழிற்சாலையை தவிர்த்த மற்ற இரு தொழிற்சாலைகளும் இயங்க அரசாங்கத்திடம் இருந்து அனுமதி கிடைத்துள்ளது. இதனால் விரைவில் தயாரிப்பு பணிகளை துவங்கவுள்ள இந்த இரு தொழிற்சாலைகளை பற்றி விரிவாக அறிய நமது ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தை அணுகவும்.

டெலிவிரி பணிகள் நிறுத்தம்... பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இனி செப்டம்பரில் தான் பெற முடியும்...

சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தயாரிப்பு பணிகள் துவங்கவதற்கு இன்னும் 1 மாத காலம் ஆகும் என தெரிகிறது. ஏனெனில் இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்படும் எலக்ட்ரிக் மோட்டார் ஜெர்மனியில் இருந்து வரவழைக்கப்படுகிறது. ஆனால் தற்சமயம் ஜெர்மனியில் ஊரடங்கு தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
Bajaj Chetak Electric Scooter Production Suspended: Deliveries Rescheduled For September
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X