சீனாவுக்கு எதிராக ஆப்பு சீவும் இந்தியா... பஜாஜ் நடவடிக்கையே வேற... என்ன தெரிஞ்சா மிரண்டு போய்டுவீங்க

சீனாவுக்கான ஆப்பை இந்தியா சீவிக் கொண்டிருக்கின்ற வேலைியில் பஜாஜ் நிறுவனத்தின் செய்கை மக்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சீனாவுக்கு எதிராக ஆப்பு சீவும் இந்தியா... பஜாஜ் நடவடிக்கையே வேற... என்ன தெரிஞ்சா மிரண்டு போய்டுவீங்க!

இந்தியா-சீனா ஆகிய இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் எல்லைப் பகுதியான லடாக், கல்வான் பள்ளதாக்கு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு நாட்டு வீரர்களிடையே கை களப்பு ஏற்பட்டது. இதில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிலும் உயிர் சேதம் ஏற்பட்டது. இந்தியாவில் வீர மரணடைந்தோரின் எண்ணிக்கை 20 என அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், சீனா தரப்பில் இருந்து அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

சீனாவுக்கு எதிராக ஆப்பு சீவும் இந்தியா... பஜாஜ் நடவடிக்கையே வேற... என்ன தெரிஞ்சா மிரண்டு போய்டுவீங்க!

அதேசமயம், ஏஎன்ஐ தளம் வெளியிட்ட தகவலின்படி சீன வீரர்களின் பலி எண்ணிக்கை 50க்கும் அதிகம் என தெரிகின்றது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இரு நாட்டு தரப்பிலும் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை காரணமாக இரு நாட்டு வீரர்களும் அவரவர்களின் முகாம்களுக்கு திரும்பினர்.

சீனாவுக்கு எதிராக ஆப்பு சீவும் இந்தியா... பஜாஜ் நடவடிக்கையே வேற... என்ன தெரிஞ்சா மிரண்டு போய்டுவீங்க!

ஆனாலும் மக்கள் பலர் இந்த கசப்பான அனுபவத்தை மறக்காமல், கடும் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர். இதன் விளைவாக 'பாய்காட் சீனா புராடெக்ட்' எனும் மந்திரத்தைக் கையிலெடுத்துள்ளனர். அதாவது, சீனா பொருட்களை புறக்கணிப்போம் என்ற கோஷத்தை முழங்க தொடங்கியிருக்கின்றனர். சமூக வலைதளம் முதல் ஸ்டேட்டஸ் வரை இதே முழக்கமாக காட்சியளித்து வருகின்றது.

சீனாவுக்கு எதிராக ஆப்பு சீவும் இந்தியா... பஜாஜ் நடவடிக்கையே வேற... என்ன தெரிஞ்சா மிரண்டு போய்டுவீங்க!

இதைத்தொடர்ந்து, ஒரு சில நிறுவனங்களும்கூட சீன தயாரிப்புகளை இனி கொள்முதல் செய்யப் போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டன. இதேபோன்று, மஹாராஷ்டிரா மாநில அரசு அம்மாநிலத்தில் சீன நிறுவனங்கள் மூலம் வாகனத்துறையில் செய்யப்பட இருந்த ரூ. 5,020 கோடி முதலீட்டுக்கு தடை விதிக்க முடிவெடுத்துள்ளது. இதனை மத்திய அரசுடன் ஆலோசித்த பின்னரே எடுத்திருப்பதாக அம்மாநில முதலமைச்சர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

சீனாவுக்கு எதிராக ஆப்பு சீவும் இந்தியா... பஜாஜ் நடவடிக்கையே வேற... என்ன தெரிஞ்சா மிரண்டு போய்டுவீங்க!

இவ்வாறு, மக்கள் சார்பிலும், சில நிறுவனங்கள் (வாகன உற்பத்தி நிறுவனங்களும் அடங்கும்) சார்பிலும் எதிர்ப்புகள் மிகப்பெரிய அளவில் வலுத்து வரும் நிலையில் பஜாஜ் நிறுவனத்தின் சேத்தக் மின்சார ஸ்கூட்டருக்கான பேட்டரிகள் சீனாவில் இருந்து வரத் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, அந்த ஸ்கூட்டரின் உற்பத்தியும் விரைவில் ஆரம்பிக்கப்பட இருப்பதாக கூடுதல் தகவலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவுக்கு எதிராக ஆப்பு சீவும் இந்தியா... பஜாஜ் நடவடிக்கையே வேற... என்ன தெரிஞ்சா மிரண்டு போய்டுவீங்க!

பஜாஜ் நிறுவனத்தின் இந்த செயலுக்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. உலக நாடுகளைக் காட்டிலும் சீனாவில் மட்டுமே மின்சார வாகனங்களுக்கான பாகங்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கப் பெறுகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பாகங்கள் மட்டுமில்லாமல் ப்யூவல் வாகனங்களுக்கான பாகங்களும் இங்குதான் சற்று குறைந்த விலையில் கிடைக்கின்றன.

சீனாவுக்கு எதிராக ஆப்பு சீவும் இந்தியா... பஜாஜ் நடவடிக்கையே வேற... என்ன தெரிஞ்சா மிரண்டு போய்டுவீங்க!

இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் மலிவு விலை வாகனங்களை இந்தியாவில் களமிறக்க முடியும். அதேசமயம், பஜாஜ் நிறுவனம் சேத்தக் மின்சார ஸ்கூட்டருக்கான பேட்டரிகளை நேரடியாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்நிறுவனம், அதன் கூட்டாளர்களின் மூலமாகவே இதனை வாங்கி பயன்படுத்துகின்றது.

சீனாவுக்கு எதிராக ஆப்பு சீவும் இந்தியா... பஜாஜ் நடவடிக்கையே வேற... என்ன தெரிஞ்சா மிரண்டு போய்டுவீங்க!

கொரோனா வைரஸ் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியதில் இருந்த இந்த பேட்டரிகளின் இறக்குமதி தற்காலிக தடையைப் பெற்றிருந்தது. தற்போது, இந்த வைரசின் தாக்கத்தில் இருந்து உலகம் மெல்ல மெல்ல விடிவு காலம் பெற்றுவருவதை அடுத்து நிறுவனங்கள் அனைத்தும் இயங்க ஆரம்பித்துள்ளன. இதனடிப்படையிலேயே தற்போது பஜாஜ் சேத்தக்கிற்கான பேட்டரிகள் வரத் தொடங்கியிருக்கின்றன.

சீனாவுக்கு எதிராக ஆப்பு சீவும் இந்தியா... பஜாஜ் நடவடிக்கையே வேற... என்ன தெரிஞ்சா மிரண்டு போய்டுவீங்க!

எனவே, நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர் உற்பத்தி தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த உற்பத்தி தொடக்கத்தை அடுத்து மின்சார ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவும் தொடங்கப்பட்டிருக்கின்றது.

சீனாவுக்கு எதிராக ஆப்பு சீவும் இந்தியா... பஜாஜ் நடவடிக்கையே வேற... என்ன தெரிஞ்சா மிரண்டு போய்டுவீங்க!

பஜாஜ் நிறுவனம் அதன் பிரபல மாடலான சேத்தக் ஸ்கூட்டருக்கு உயிரளிக்கும் விதமாகவே எலெக்ட்ரிக் வெர்ஷன் தோற்றத்தை அதற்கு வழங்கியது. இந்த ஸ்கூட்டர் தற்போது நாட்டின் ஒரு சில முக்கியமான நகரங்களில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இது இரு வேரியண்டுகளில் விற்பனைக்கு கிடைக்கின்றது. அதாவது, அர்பன் மற்றும் பிரிமியம் ஆகிய இரு வேரியண்டுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.

சீனாவுக்கு எதிராக ஆப்பு சீவும் இந்தியா... பஜாஜ் நடவடிக்கையே வேற... என்ன தெரிஞ்சா மிரண்டு போய்டுவீங்க!

இது நாட்டின் விலையுயர்ந்த பிரிமியம் ரக மின்சார ஸ்கூட்டராகும். இதில், ப்ளூடூத் மற்றும் நேவிகேஷன் போன்ற பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன. தற்போது இந்த ஸ்கூட்டர் ஆறு விதமான வண்ண தேர்வில் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மின்சார ஸ்கூட்டர் கூடுதல் தகவலை அறிந்துக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

Most Read Articles

மேலும்... #bajaj auto
English summary
Bajaj Chetak Production To Restart Soon. Read In Tamil.
Story first published: Wednesday, June 24, 2020, 7:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X