ஷோரூம்களை சென்றடைந்தது புதிய பஜாஜ் டோமினார் 250... அறிமுகம் எப்போது..?

புனேவில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டு வரும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் டோமினார் மாடலின் புதிய 250சிசி வெர்சன் பைக்கை இந்தியாவில் அடுத்த ஏப்ரல் மாத துவக்கத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கிடையில் இந்த பைக் தற்போது இந்தியா முழுவதும் உள்ள டீலர்ஷிப்களில் சென்றடைய துவங்கியுள்ளது.

ஷோரூம்களை சென்றடைந்தது புதிய பஜாஜ் டோமினார் 250... அறிமுகம் எப்போது..?

இதனால் டோமினார் 250 மாடலுக்கான முன்பதிவுகளை பஜாஜ் நிறுவனம் ஏற்க தொடங்கியிருப்பது இதன்மூலம் நமக்கு தெரிய வருகிறது. சந்தையில் பிரபலமான டோமினார் 400 மாடலின் சிறிய எரிபொருள் கொள்ளவு மோட்டார்சைக்கிளாக இந்த புதிய டோமினார் 250 பைக் மாடல் கருதப்படுகிறது.

ஷோரூம்களை சென்றடைந்தது புதிய பஜாஜ் டோமினார் 250... அறிமுகம் எப்போது..?

மேலும் இந்த பைக்கில் கேடிஎம் ட்யூக் 250 பைக்கின் என்ஜின் அமைப்பு தான் அப்படியே வழங்கப்பட்டுள்ளது. இந்த 250சிசி பைக்கில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களாக எல்இடி ஹெட்லேம்ப் யூனிட், ட்யூல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், சிறிய அளவில் பின்புற டயர், நிலையாக பொருத்தப்பட்டுள்ள ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை பார்க்கப்படுகின்றன.

ஷோரூம்களை சென்றடைந்தது புதிய பஜாஜ் டோமினார் 250... அறிமுகம் எப்போது..?

பஜாஜின் இந்த புதிய பைக்கில் வழங்கப்படவுள்ள 249சிசி லிக்யூடு-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் கேடிஎம் ட்யூக் 250 பைக்கில் 30 பிஎச்பி பவர் மற்றும் 24 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தி வருகிறது. ஆனால் பஜாஜ் நிறுவனம் டோமினார் 250 பைக் தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக இந்த என்ஜினை ட்யூன் செய்துள்ளது.

ஷோரூம்களை சென்றடைந்தது புதிய பஜாஜ் டோமினார் 250... அறிமுகம் எப்போது..?

அதேபோல் 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் அமைப்புடன் இந்த 250சிசி பைக் சந்தைப்படுத்தப்படவுள்ளது. சஸ்பென்ஷனிற்காக தலைக்கீழான ஃபோர்க்ஸ் முன்புறத்திலும், மோனோ-ஷாக் பின்புறத்திலும் வழங்கப்பட்டுள்ளன.

புதிய டோமினார் 250 பைக்கில் பாக்ஸ்-வடிவிலான ஸ்விங்-ஆர்ம் பொருத்தப்பட்டுள்ளது. இதுவே டோமினார் 400 மாடலை பார்த்தோமேயானால், அலுமினியத்தால் ஆன ஸ்விங் ஆர்ம்-ஐ பஜாஜ் நிறுவனம் வழங்கியிருந்தது.

ஷோரூம்களை சென்றடைந்தது புதிய பஜாஜ் டோமினார் 250... அறிமுகம் எப்போது..?

வழக்கமான 320மிஇ டிஸ்க் முன்புறத்திலும், 230மிமீ டிஸ்க் பின்புறத்திலும் இந்த பைக்கில் ப்ரேக்கிங் பணியை கவனிக்கவுள்ளன. டோமினார் 250 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலையை ரூ.1.45 லட்சத்தில் இருந்து ரூ.1.55 லட்சம் வரையில் நிர்ணயிக்க பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஷோரூம்களை சென்றடைந்தது புதிய பஜாஜ் டோமினார் 250... அறிமுகம் எப்போது..?

ஒருவேளை இதே விலையில் இந்த பைக் சந்தைப்படுத்தப்பட்டால், 250சிசி பிரிவில் அதிகப்படியான விலை மதிப்பை பெற்ற பைக்குகளில் டோமினார் 250 மாடலும் ஒன்றாக மாறும்.

இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு பஜாஜ் நிறுவனம் இந்த புதிய பைக்கின் டீசர் வீடியோ ஒன்றை முதன்முறையாக வெளியிட்டு இருந்தது. இருப்பினும் அந்த வீடியோ மூலமாக எந்த கூடுதல் தகவலையும் அறிய முடியவில்லை.

ஷோரூம்களை சென்றடைந்தது புதிய பஜாஜ் டோமினார் 250... அறிமுகம் எப்போது..?

டோமினார் 400 மாடலை போல் அல்லாமல் இந்த 250சிசி பைக் மிகவும் எடையை குறைவாக கொண்டுள்ளதால் இதன் விற்பனை அதன் முன்னோடி மாடலை விட நன்றாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் விலையும் டோமினார் 400 பைக்கை விட ரூ.30,000 வரையில் குறைவாக நிர்ணயிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Zigwheels

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
Bajaj Dominar 250 Models Arrive At Dealerships: Launch Expected Early April
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X