புதிய 250 சிசி பஜாஜ் டோமினார் பைக் உறுதியானது... விரைவில் சந்தைக்கு வருகிறது!

250 சிசி எஞ்சினுடன் புதிய பஜாஜ் டோமினார் பைக் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள், அறிமுக விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய 250 சிசி பஜாஜ் டோமினார் பைக் உறுதியானது... விரைவில் சந்தைக்கு வருகிறது!

பல்சர் வரிசை பைக்குகள் மூலமாக வாடிக்கையாளர்களை கட்டி போட்டு வைத்திருக்கிறது பஜாஜ் ஆட்டோ நிறுவனம். மேலும், அந்நிறுவனத்தின் அதிக விலையுடைய சக்தி வாய்ந்த பைக் மாடலாக, பஜாஜ் டோமினார் 400 பைக் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய 250 சிசி பஜாஜ் டோமினார் பைக் உறுதியானது... விரைவில் சந்தைக்கு வருகிறது!

இந்த பைக் நீண்ட தூர பயணங்களுக்கு சிறந்த தேர்வாக வாடிக்கையாளர்களால் விரும்பி தேர்வு செய்யப்படுகிறது. இந்த நிலையில், டோமினார் சந்தையை வலுப்படுத்தும் விதமாக, அதே ஸ்டைலில் குறைவான பட்ஜெட் கொண்ட மாடலை பஜாஜ் ஆட்டோ உருவாக்கி இருக்கிறது.

புதிய 250 சிசி பஜாஜ் டோமினார் பைக் உறுதியானது... விரைவில் சந்தைக்கு வருகிறது!

இந்த புதிய பைக் மாடலில் 250 சிசி எஞ்சினுடன் வர இருக்கிறது. அதாவது, கேடிஎம் ட்யூக் 250 பைக்கில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின்தான் இந்த புதிய மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

புதிய 250 சிசி பஜாஜ் டோமினார் பைக் உறுதியானது... விரைவில் சந்தைக்கு வருகிறது!

கேடிஎம் ட்யூக் 250 பைக்கில் இருக்கும் இந்த 249 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 30 பிஎச்பி பவரையும், 24 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஆனால், இதனைவிட சற்றே குறைவான திறன் கொண்டதாக மாற்றம் செய்யப்பட்டு பஜாஜ் டோமினார் 250 பைக் மாடலில் பயன்படுத்தப்படும்.

புதிய 250 சிசி பஜாஜ் டோமினார் பைக் உறுதியானது... விரைவில் சந்தைக்கு வருகிறது!

பஜாஜ் டோமினார் 400 பைக்கில் இடம்பெற்றிருக்கும் எல்இடி ஹெட்லைட்டுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை டோமினார் 250 பைக்கிலும் இடம்பெற்றிருக்கும். ஆனால், டயர் அளவு சிறியதாக கொடுக்கப்பட்டு இருக்கும்.

புதிய 250 சிசி பஜாஜ் டோமினார் பைக் உறுதியானது... விரைவில் சந்தைக்கு வருகிறது!

விலையை மிக சவாலான நிர்ணயிக்கும் விதத்தில், சில பிரிமீயம் உதிரிபாகங்கள் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும். அதன்படி, பஜாஜ் டோமினார் 400 பைக்கில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் பயன்படுத்தப்படும் நிலையில், டோமினார் 250 பைக்கில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் இடம்பெறும். அதேபோன்று, சிறிய விட்டம் அளவுடைய டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்படும்.

புதிய 250 சிசி பஜாஜ் டோமினார் பைக் உறுதியானது... விரைவில் சந்தைக்கு வருகிறது!

கடந்த 2016ம் ஆண்டு பஜாஜ் டோமினார் 400 பைக் அறிமுகம் செய்யப்பட்டபோது ரூ.1.36 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்தது. ஆனால், தற்போது விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு ரூ.1.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

புதிய 250 சிசி பஜாஜ் டோமினார் பைக் உறுதியானது... விரைவில் சந்தைக்கு வருகிறது!

அதேநேரத்தில், புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் ரூ.1.40 லட்சம் என்ற மிக சவாலான விலையில் கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது. இதனால், டோமினார் பைக் வாங்க விரும்புவோருக்கு மிக சரியான விலையில் இந்த பைக் கிடைக்கும்.

புதிய 250 சிசி பஜாஜ் டோமினார் பைக் உறுதியானது... விரைவில் சந்தைக்கு வருகிறது!

அடுத்த மாதம் இறுதியில் அல்லது ஏப்ரல் துவக்கத்தில் இந்த புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தனித்துவமான தேர்வாக அமையும். நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ப பல்வேறு கூடுதல் ஆக்சஸெரீகளுடன் இந்த பைக்கை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும் என்பதால், இப்போதே இந்த பைக் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 29, 2020, 11:46 [IST]
English summary
Bajaj Auto has confirmed that the company will launch the new Dominar 250 in India sometime in March.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+