விற்பனையில் திடீர் உச்சம்! கொரோனா வந்துபோன ராசி... பஜாஜ் நிறுவனத்திற்கு நல்ல யோகம் அடிச்சிருக்கு...

பஜாஜ் நிறுவனத்தின் குறிப்பிட்ட ஓர் மாடல் நல்ல விற்பனை வளர்ச்சியைப் பெற தொடங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

விற்பனையில் திடீர் உச்சம்... கொரோனா வந்துட்டு போன ராசி... பஜாஜ் நிறுவனத்திற்கு நல்ல யோகம் அடிச்சிருக்கு!

பஜாஜ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த இருசக்கர வாகன மாடல்களில் டோமினார் மாடலும் ஒன்று. இந்த இருசக்கர வாகனம் இரு விதமான தேர்வுகளில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதாவது, டோமினார் 400 மற்றும் டோமினார் 250 ஆகிய இரு விதமான தேர்வுகளில் அது கிடைக்கிறது. இதில், 400 மாடல் கடந்த 2016ம் ஆண்டில் இருந்தே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

விற்பனையில் திடீர் உச்சம்... கொரோனா வந்துட்டு போன ராசி... பஜாஜ் நிறுவனத்திற்கு நல்ல யோகம் அடிச்சிருக்கு!

ஆனால், 250 மாடல் நடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்துதான் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இவையிரண்டுமே பஜாஜ் நிறுவனத்தின் சிறந்த விற்பனையாகும் பைக்குகளாக உருவெடுத்துள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த காலங்களில் இல்லாத அளவிலான விற்பனை எண்ணிக்கையை இவைப் பெற்றிருக்கின்றன.

விற்பனையில் திடீர் உச்சம்... கொரோனா வந்துட்டு போன ராசி... பஜாஜ் நிறுவனத்திற்கு நல்ல யோகம் அடிச்சிருக்கு!

குறிப்பாக, நடப்பாண்டு ஜனவரி மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலான விற்பனை விகிதத்தைக் காட்டிலும் அக்டோபர் மாத விற்பனை மிக அதிகளவில் உயர்ந்துள்ளது. இதுகுறித்த தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். 2020 ஜனவரியில் இந்த டோமினார் பைக்குகளின் விற்பனைச் சொல்லும்படி பெரியளவில் இல்லை.

விற்பனையில் திடீர் உச்சம்... கொரோனா வந்துட்டு போன ராசி... பஜாஜ் நிறுவனத்திற்கு நல்ல யோகம் அடிச்சிருக்கு!

குறிப்பாக, டோமினார் 250 பைக் ஒரு யூனிட்கூட அந்த மாதம் விற்பனையாகவில்லை. டோமினார் 400 மாடல் 130 யூனிட்கள் வரை விற்பனையாகியிருந்தன. அடுத்த மாதத்தில் இரு யூனிட் விற்பனையை டோமினார் 250ம், 297 யூனிட் விற்பனையை டோமினார் 400 மாடலும் பெற்றிருந்தன. இந்த நிலை தலைகீழாக மாறி மார்ச் மாதத்தில் 861 யூனிட் விற்பனையை 250 டோமினார் பெற்றது. ஆனால், கணிசமான வீழ்ச்சியைப் பெற்று 280 யூனிட்டுகளுக்கான விற்பனையை 400 மாடல் பெற்றது.

விற்பனையில் திடீர் உச்சம்... கொரோனா வந்துட்டு போன ராசி... பஜாஜ் நிறுவனத்திற்கு நல்ல யோகம் அடிச்சிருக்கு!

இந்த சந்தோஷமான சூழ்நிலையை அனுபவிப்பதற்குள் கொரோனா வைரசால் ஏற்பட்ட லாக்டவுன் சீர்குலைத்தது. ஏப்ரல் மாதத்தில் சிங்கிள் யூனிட்கூட இரு டோமினார் பிரிவுகளும் பெறவில்லை. இந்த நிலையில் பஜாஜ் டோமினார் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து விட பட தொடங்கியுள்ளது. அதாவது ஜூன் மாதத்தில் இந்த பைக் விற்பனையில் ஏறு முகத்தையேச் சந்தித்து வருகின்றது.

விற்பனையில் திடீர் உச்சம்... கொரோனா வந்துட்டு போன ராசி... பஜாஜ் நிறுவனத்திற்கு நல்ல யோகம் அடிச்சிருக்கு!

அவ்வாறு, நடப்பாண்டிலேயே அதிகபட்ச விற்பனையை கடந்த அக்டோபர் மாத விற்பனைப் பெற்றிருக்கின்றது. இந்த மாதத்தில் 1,750 யூனிட்டுகளை டோமினார் 250யும், 1,818 யூனிட்டுகளை டோமினார் 400 மாடலும் பெற்றிருக்கின்றது. ஒட்டுமொத்தமாக 3,568 யூனிட்டுகளுடன் இது புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

விற்பனையில் திடீர் உச்சம்... கொரோனா வந்துட்டு போன ராசி... பஜாஜ் நிறுவனத்திற்கு நல்ல யோகம் அடிச்சிருக்கு!

இது அதி வேக விற்பனை வளர்ச்சியாகும். பஜாஜ் டோமினார் 400 மாடல் இந்தியாவில் ரூ. 1.98 லட்சம் என்ற விலையிலும், 250 டோமினார் 1.66 லட்சம் ரூபாய் என்ற விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. செலவு செய்யும் விலைக்கேற்ற பைக்குகள் இவை என்பதனாலயே இந்தளவு விற்பனை வளர்ச்சியை இந்த பைக் பெற்றிருக்கின்றது.

விற்பனையில் திடீர் உச்சம்... கொரோனா வந்துட்டு போன ராசி... பஜாஜ் நிறுவனத்திற்கு நல்ல யோகம் அடிச்சிருக்கு!

இதன் விற்பனை நிலவரத்தைப் பட்டியலாகக் கீழே காணலாம்.

2020 டோமினார் 250 டோமினார் 400 விற்பனை எண்ணிக்கை
ஜனவரி 0 130 130
பிப்ரவரி 2 297 299
மார்ச் 861 280 1,141
ஏப்ரல் 0 0 0
மே 50 33 83
ஜூன் 1,018 717 1,735
ஜூலை 1,222 746 1,968
ஆகஸ்டு 1,317 775 2,092
செப்டம்பர் 1,010 885 1,895
அக்டோபர் 1,750 1,818 3,568
மொத்த விற்பனை 7,230 5,681 12,911
விற்பனையில் திடீர் உச்சம்... கொரோனா வந்துட்டு போன ராசி... பஜாஜ் நிறுவனத்திற்கு நல்ல யோகம் அடிச்சிருக்கு!

இந்த திடீர் விற்பனை வளர்ச்சிக்கு கொரோனா வைரசையும் ஒரு காரணமாக கூறலாம். ஆமாங்க கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பெரும்பாலான மக்கள் தனி வாகனங்களில் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். இதன் விளைவாக புதிய வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையே பஜாஜ் நிறுவனத்தின் டோமினார் பைக்கிற்கு கைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது. இத்துடன், முடிந்த தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலமும் இதற்கு ஓர் காரணமாக அமைந்திருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #bajaj auto
English summary
Bajaj Dominar Gets Highest Sales Oct 2020 – New Record. Read In Tamil.
Story first published: Saturday, November 21, 2020, 15:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X