250சிசி டோமினார் பைக்கை களமிறக்குகிறது பஜாஜ் ஆட்டோ!

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விரைவில் 250சிசி எஞ்சினுடன் புதிய டோமினார் பைக்கை அறிமுகப்படுத்த உள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

250சிசி டோமினார் பைக்கை களமிறக்குகிறது பஜாஜ் ஆட்டோ!

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த பைக் மாடலாக டோமினார் விற்பனையில் உள்ளது. அந்நிறுவனத்தின் விலை உயர்ந்த முத்தாய்ப்பான மாடலாக டோமினார் 400 பைக் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

250சிசி டோமினார் பைக்கை களமிறக்குகிறது பஜாஜ் ஆட்டோ!

கேடிஎம் ட்யூக் 390 பைக்கின் எஞ்சின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எஞ்சின்தான் இந்த டோமினார் பைக்கில் பயன்படுத்தப்படுகிறது.

250சிசி டோமினார் பைக்கை களமிறக்குகிறது பஜாஜ் ஆட்டோ!

இந்த பைக்கிற்கு வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக, க்ரூஸர் பைக் பிரியர்கள் இந்த பைக்கை விரும்பி வாங்கி பயன்படுத்துகின்றனர்.

250சிசி டோமினார் பைக்கை களமிறக்குகிறது பஜாஜ் ஆட்டோ!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு குறைவான பட்ஜெட்டில் டோமினார் தேர்வை வழங்கும் முயற்சியில் பஜாஜ் இறங்கி இருக்கிறது. தி இந்து தளத்திற்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் சூசகமாக தெரிவித்துள்ளார்.

250சிசி டோமினார் பைக்கை களமிறக்குகிறது பஜாஜ் ஆட்டோ!

அதன்படி, கேடிஎம் 250 ட்யூக் பைக்கில் இருக்கும் எஞ்சினுடன் புதிய டோமினார் பைக்கை அறிமுகப்படுத்த பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது.

250சிசி டோமினார் பைக்கை களமிறக்குகிறது பஜாஜ் ஆட்டோ!

இந்த புதிய 250 சிசி டோமினார் பைக்கின் எஞ்சின் லிக்யூடு கூல்டு எஞ்சின் கொண்டதாக இருக்கும். அதிகபட்சமாக 30 பிஎச்பி பவரையும், 24 என்எம் டார்க் திறனையும் வழங்கும் என தெரிகிறது.

250சிசி டோமினார் பைக்கை களமிறக்குகிறது பஜாஜ் ஆட்டோ!

பஜாஜ் டோமினார் 400 பைக்கில் இருப்பது போன்றே, 250 மாடலிலும் எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும்.

250சிசி டோமினார் பைக்கை களமிறக்குகிறது பஜாஜ் ஆட்டோ!

அதேபோன்று, இரண்டு புகைப்போக்கி கேனிஸ்டர்களுடன் இந்த பைக் வரும் என்று தெரிகிறது. ஆனால், சக்கரங்கள் மற்றும் டயர்களின் அளவுகளில் மாற்றங்கள் இருக்கும்.

250சிசி டோமினார் பைக்கை களமிறக்குகிறது பஜாஜ் ஆட்டோ!

ஏற்கனவே, பஜாஜ் டோமினார் 250 பைக் குறித்த ஸ்பை படங்களும், யூகச் செய்திகளும் வெளியாகி வந்தன. இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் தற்போதைய தகவல் வெளியாகி இருக்கிறது.

250சிசி டோமினார் பைக்கை களமிறக்குகிறது பஜாஜ் ஆட்டோ!

பஜாஜ் பல்சர் 220எஃப் மற்றும் டோமினார் 400 பைக்குகளுக்கு இடையிலான விலையில் நிலைநிறுத்தப்படும். புதிய பஜாஜ் டோமினார் 250 சிசி பைக்கின் விலை ரூ.1.60 லட்சத்தை ஒட்டி நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது. அடுத்த மாதமே விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Source: The Hindu

More from DriveSpark

Article Published On: Friday, January 24, 2020, 15:17 [IST]
English summary
According to report, Bajaj Auto is planning to launch new Dominar with 250cc engine in India soon.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+