பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கின் பிஎஸ்6 மாடல் அறிமுகம்!

இந்தியாவின் 100 சிசி பட்ஜெட் பைக் மார்க்கெட்டில் பஜாஜ் பிளாட்டினா மிகச் சிறந்த தேர்வாகஇருந்து வருகிறது. மிக குறைவான பட்ஜெட்டில் கிடைப்பதுடன், அதிக மைலேஜ் வழங்குவதால் ஊரகப் பகுதிகளில் பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கிற்கு பெரிய அளவிலான வரவேற்பு இருந்து வருகிறது.

பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கின் பிஎஸ்6 மாடல் அறிமுகம்!

இந்த நிலையில், புதிய பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு தக்கவாறு மேம்படுத்தப்பட்ட எஞ்சினுடன் பஜாஜ் பிளாட்டினா 100 பைக் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக் இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கின் பிஎஸ்6 மாடல் அறிமுகம்!

பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கின் 102சிசி எஞ்சின் எலெக்ட்ரானிக் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 7.9 பிஎஸ் பவரையும், 8.34 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கின் பிஎஸ்6 மாடல் அறிமுகம்!

இந்த பைக்கில் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் மணிக்கு 90 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கிறது.

பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கின் பிஎஸ்6 மாடல் அறிமுகம்!

பட்ஜெட் பைக் மாடலாக இருந்தாலும் பல சிறப்பம்சங்களுடன் மதிப்பான தேர்வாக இருக்கிறது. இந்த பைக்கில் எல்இடி பகல்நேர விளக்கு, சிறிய வைசருடன் கூடிய ஹெட்லைட் ஹவுசிங், அலாய் வீல்கள், க்ரோம் ஷீல்டு கொண்ட சைலென்சர், வசதியான இருக்கை ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கின் பிஎஸ்6 மாடல் அறிமுகம்!

இந்த பைக்கில் முன்புறத்தில் 135 மிமீ டிராவல் கொண்ட டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் எஸ்என்எஸ் ரியர் சஸ்பென்ஷன் அமைப்பும் உள்ளன. அதேபோன்று,ம முன்சக்கரத்தில் 130 மிமீ டிரம் பிரேக்கும், பின்சக்கரத்தில் 110 மிமீ டிரம் பிரேக்கும் உள்ளன. சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கின் பிஎஸ்6 மாடல் அறிமுகம்!

புதிய பஜாஜ் பிளாட்டினா 100 பிஎஸ்6 மாடலானது புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கருடன் சிவப்பு மற்றும் கருப்பு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கின் பிஎஸ்6 மாடல் அறிமுகம்!

பஜாஜ் பிளாட்டினா 100 பிஎஸ்6 மாடலானது கிக் ஸ்டார்ட்டர்( KS) மற்றும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட்டர் (ES) என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. பிளாட்டினா 100 பிஎஸ்6 கேஎஸ் வேரியண்ட்டிற்கு ரூ.47,763 எக்ஸ்ஷோரூம் விலையும், எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வேரியண்ட்டிற்கு ரூ.55,546 எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, May 15, 2020, 18:30 [IST]
English summary
Bajaj Auto has launched new Platina 100 with BS6 compliant engine in India prices starting at Rs.47,763 (Ex-showroom).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+