மக்களை சுத்தி சுத்தியடிக்கும் விலையுயர்வு... ஒரேடியாக 11 மாடல்களின் விலையை உயர்த்திய பஜாஜ்...

பஜாஜ் நிறுவனம் அதன் பிரபல இருசக்கர வாகனங்களின் விலையை உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களை சுத்தி சுத்தியடிக்கும் விலையுயர்வு... ஒரேடியாக 11 மாடல்களின் விலையை உயர்த்திய பஜாஜ்...

கொரோனா வைரஸ் அதன் அதி தீவிர பரவும் தன்மையால் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வைரசால் ஏற்படும் நோய் தொற்றைக் காட்டிலும் நிதி நெருக்காடி போன்ற இன்னல்களில் சிக்கியே பெரும்பாலான மக்கள் திணறி வருகின்றனர். குறிப்பிட்டு கூற வேண்டுமானால், வைரஸ் பரவல் காரணமாக பலர் வேலையை இழைந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

மக்களை சுத்தி சுத்தியடிக்கும் விலையுயர்வு... ஒரேடியாக 11 மாடல்களின் விலையை உயர்த்திய பஜாஜ்...

இதனால் உருவாகியிருக்கும் வறுமை அவர்களை மிகுந்த இன்னல்களுக்கு ஆளாக்கி வருகின்றது. வைரசால் ஏற்பட்டு வரும் சுமைகள் போதாதென்று, அரசு சார்பில் விலையுயர்வு போன்ற கூடுதல் வஞ்சிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மக்களை சுத்தி சுத்தியடிக்கும் விலையுயர்வு... ஒரேடியாக 11 மாடல்களின் விலையை உயர்த்திய பஜாஜ்...

குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையுயர்வு, பல அத்தியாவசிய பொருட்களின் கடுமையான விலையுயர்விற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், மக்களை கூடுதலாக வஞ்சிக்கும் விதமாக வாகன உற்பத்தி நிறுவனங்களும், தங்களின் பங்காக புதிய வாகனங்களின் விலையைக் கணிசமாக உயர்த்தி வருகின்றன.

மக்களை சுத்தி சுத்தியடிக்கும் விலையுயர்வு... ஒரேடியாக 11 மாடல்களின் விலையை உயர்த்திய பஜாஜ்...

அந்தவகையில், பிரபல இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ், அதன் 11 மாடல்களின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. முன்னதாக கடந்த மே மாதம்தான் பஜாஜ் அதன் பல்வேறு முக்கிய மாடல்களின் விலையை உயர்த்தியிருந்தது. அப்போது, ரூ. 500 முதல் ரூ. 4,500 வரை விலை உயர்த்தப்பட்டது.

மக்களை சுத்தி சுத்தியடிக்கும் விலையுயர்வு... ஒரேடியாக 11 மாடல்களின் விலையை உயர்த்திய பஜாஜ்...

இந்த நிலையில் தற்போது மீண்டும் விலையுயர்வு பற்றி அந்நிறுவனம் அறிவித்துள்ளது. முந்தைய விலையுயர்வு செய்யப்பட்டு இரண்டு மாதங்களே ஆன நிலையில் தற்போது மீண்டும் பஜாஜ் நிறுவனம் விலையை உயர்த்தியிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களை சுத்தி சுத்தியடிக்கும் விலையுயர்வு... ஒரேடியாக 11 மாடல்களின் விலையை உயர்த்திய பஜாஜ்...

இந்த புதிய விலையுயர்வால் பஜாஜ் தயாரிப்புகள் முன்பைக் காட்டிலும் ரூ. 1,000 முதல் ரூ. 2,400 வரை உயர்ந்துள்ளது. பஜாஜ் சிடி 100 தொடங்கி பல்சர் ஆர்எஸ் 200 வரையிலான மோட்டார்சைக்கிள்களின் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதில் அதிகபட்ச விலையுயர்வைப் பெற்ற மாடலாக பிளாட்டினா 110 எச் கியர் உள்ளது.

மக்களை சுத்தி சுத்தியடிக்கும் விலையுயர்வு... ஒரேடியாக 11 மாடல்களின் விலையை உயர்த்திய பஜாஜ்...

இந்த பைக்கின் விலை முந்தைய விலை ரூ. 60,550 ஆகும். இதன் தற்போதைய புதிய விலை ரூ. 62,899 ஆகும். ஆனால், பஜாஜ் நிறுவனம் டோமினார் வரிசையில் இருக்கும் இரு தேர்வுகளின் விலையையுமே உயர்த்தவில்லை. எனவே, டோமினார் 250 ரூ. 1.6 லட்சத்திற்கும், டோமினார் 400 ரூ. 1.94 லட்சத்திற்குமே விற்பனைக்குக் கிடைக்கின்றது.

மக்களை சுத்தி சுத்தியடிக்கும் விலையுயர்வு... ஒரேடியாக 11 மாடல்களின் விலையை உயர்த்திய பஜாஜ்...

விலை உயர்வு பற்றிய தகவல் பின்வருமாறு...

சிடி 100, ரூ. 43,174 முதல் ரூ. 50,854 என்ற விலைக்கே இந்த பைக் முன்பாக கிடைத்து வந்தது. ஆனால், புதிய விலையுயர்வால் இந்த பைக் தற்போது ரூ. 44,378 முதல் ரூ. 52,058 என்ற விலையுயர்விற்கு முன்னேறியுள்ளது.

சிடி 110, முன்னதாக ரூ. 48,704 முதல் ரூ. 51,680 வரையிலான விலையில் கிடைத்து வந்த இந்த பைக், புதிய விலையால் ரூ. 49,907 முதல் ரூ. 52,179 வரை உயர்ந்துள்ளது.

மக்களை சுத்தி சுத்தியடிக்கும் விலையுயர்வு... ஒரேடியாக 11 மாடல்களின் விலையை உயர்த்திய பஜாஜ்...

பிளாட்டினா 100, புதிய விலையுயர்வால் ரூ. 50,848 முதல் ரூ. 61,082 என்ற விலைக் கொண்ட பைக்காக இது மாறியுள்ளது. முன்னதாக இந்த பைக் ரூ. 49,645 முதல் ரூ. 59,757 வரையிலான விலையில் மட்டுமே கிடைத்து வந்தது.

இதன் மற்றுமொரு வெர்ஷன்தான் பிளாட்டினா 110 எச் கியர். இதன் புதிய விலைப் பற்றிய தகவலை ஏற்கனவே மேலே பார்த்துவிட்டோம். ஆகையால், இதற்கடுத்தபடியாக அவெஞ்ஜர் ஸ்ட்ரீட் 160 பைக்கைப் பார்க்கலாம்.

மக்களை சுத்தி சுத்தியடிக்கும் விலையுயர்வு... ஒரேடியாக 11 மாடல்களின் விலையை உயர்த்திய பஜாஜ்...

இந்த பைக் முன்னதாக ரூ. 94, 893 என்ற விலைக்கு கிடைத்து வந்தது. ஆனால், இப்போது புதிய விலையுயர்வால் ரூ. 95,891 என்றவிலையுயர்ந்த பைக்காக இது மாறியுள்ளது.

இதேபோன்று, இதன் கரூஸர் வெர்ஷனான 220 மாடலின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரம் ரூபாய் விலையுயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால், முன்னதாக ரூ. 1.19 லட்சத்திற்கு கிடைத்து வந்த இந்த பைக் தற்போது 1.20 லட்சம் ரூபாயாக மாறியுள்ளது.

மக்களை சுத்தி சுத்தியடிக்கும் விலையுயர்வு... ஒரேடியாக 11 மாடல்களின் விலையை உயர்த்திய பஜாஜ்...

பல்சர் வரிசையில் பல்வேறு தேர்வுகள் கிடைத்து வருகின்றன. அவற்றில் செய்யப்பட்டிருக்கும் விலையுயர்வை குட்டி பட்டியலாக கீழே காணலாம்...

பல்சர் 125: பழைய விலை ரூ. 70,995 - ரூ. 75,494 - புதிய விலை ரூ. 70,995 - ரூ. 79,091

பல்சர் 150: பழைய விலை ரூ. 96,960 - புதிய விலை ரூ. 97,958

பல்சர் 150 நியான்: பழைய விலை ரூ. 90,003 - புதிய விலை ரூ. 91,002

மக்களை சுத்தி சுத்தியடிக்கும் விலையுயர்வு... ஒரேடியாக 11 மாடல்களின் விலையை உயர்த்திய பஜாஜ்...

பல்சர் 150 ட்யூவல் டிஸ்க்: பழைய விலை ரூ. 1 லட்சம் - புதிய விலை ரூ. 1.01 லட்சம்

பல்சர் 180 எஃப்: பழைய விலை ரூ. 1.10 லட்சம் - புதிய விலைரூ. 1.11 லட்சம்

பல்சர் 220: பழைய விலை ரூ. 1.19 லட்சம் - புதிய விலை ரூ. 1.21 லட்சம்

பல்சர் என்எஸ்: பழைய விலை ரூ. 1.05 லட்சம் - புதிய விலை ரூ. 1.07 லட்சம்

பல்சர் என்எஸ் 200: பழைய விலை ரூ. 1.28 லட்சம் - புதிய விலை ரூ. 1.29

பல்சர் ஆர்எஸ் 200: பழைய விலை ரூ. 1.48 லட்சம் - புதிய விலை ரூ. 1.49 லட்சம்

More from DriveSpark

Article Published On: Tuesday, July 14, 2020, 17:37 [IST]
English summary
Bajaj Announces Second Price Hike For Select Models After BS6 Update: Here Is The New Price List. Read In Tamil.
மேலும்... #bajaj auto
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+