புதிய எக்ஸாஸ்ட் உடன் டீலர்களிடம் சென்றடைந்த புதிய பஜாஜ் பல்சர் என்எஸ்200 பிஎஸ்6...
பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட சிடி மற்றும் பிளாடினா பைக் மாடல்களை தொடர்ந்து பஜாஜ் நிறுவனம் மிக விரைவில் சந்தையில் பிரபலமான பல்சர் என்எஸ்200 பைக்கை பிஎஸ்6 தரத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த புதிய பிஎஸ்6 பைக் சில டீலர்ஷிப்களிடம் சென்றடைந்துள்ளது.

மேலும் இந்த புதிய என்எஸ்200 பைக்கின் விலை ரூ.1.24 லட்சத்தில் நிர்ணயிக்கப்படலாம் என கூறப்பட்டு வருகிறது. இது தற்போதைய மாடலின் விலையை விட ரூ.11,000 அதிகமாகும். ஷோரூம்களுக்கு இந்த புதிய என்எஸ்200 பைக் சென்றடைய துவக்கியுள்ளதால் இந்த பைக்கிற்கான முன்பதிவுகள் சில குறிப்பிட்ட டீலர்ஷிப்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த முன்பதிவிற்கான தொகை ரூ.1,000லிருந்து ரூ.5,000 வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்6 அப்டேட்டாக புதிய காஸ்மெட்டிக் மாற்றங்களை ஏற்றுள்ள இந்த 2020 பல்சர் மாடலில் தற்போதைய மாடலின் வெள்ளை-க்ரே பெயிண்ட் அமைப்பு தான் வழங்கப்பட்டுள்ளது.

இது தற்போது டீலர்ஷிப்களுக்கு சென்றுள்ள 2020 என்எஸ்200 மாடலின் புகைப்படங்களை பார்க்கும்போது தெரியவருகிறது. இந்த பெயிண்ட் அமைப்பு மட்டுமின்றி தற்போதைய பிஎஸ்4 மாடல் மஞ்சள், சிவப்பு மற்றும் கருப்பு உள்ளிட்ட நிற தேர்வுகளையும் கொண்டுள்ளது.

வழங்கப்பட்டுள்ள தொழிற்நுட்பங்களின்படி பார்த்தால், இந்த புதிய என்எஸ் பிஎஸ்6 பைக் அதே செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை தான் பெற்றுள்ளது. சிறந்த எரிபொருள் திறனிற்காக இந்த பைக்கின் எக்ஸாஸ்ட் சிஸ்டம் கேட்டலிடிக் கன்வெர்ட்டரால் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

மற்றப்படி இந்த புதிய பல்சர் என்எஸ்200 பைக் பிஎஸ்6 தரத்தில் வெளிப்படுத்தவுள்ள ஆற்றல் குறித்த எந்த தவவலையும் பஜாஜ் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. பிஎஸ்6 தரத்தில் இந்த பைக் ஏற்கனவே கொலம்பியா நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அந்த நாட்டு சந்தையில் என்எஸ்200 மாடலின் பிஎஸ்6 என்ஜின் 24.5 பிஎச்பி பவரையும், 18.6 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக வெளிப்படுத்துகிறது. இந்த ஆற்றல் அளவு இந்திய வெர்சன் பைக்கில் 23.5 பிஎச்பி/18.3 என்எம் டார்க் திறன் என குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் கொலம்பியா வெர்சன் பைக்கை விட இந்திய வெர்சன் என்எஸ்200 பிஎஸ்6 பைக்கில் மிகவும் அப்டேட்டான எக்ஸாஸ்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அப்டேட் தவிர வேறெந்த மாற்றமும் இந்த பிஎஸ்6 பைக்கில் கொண்டுவரப்படவில்லை.

இதனால் தற்சமயம் விற்பனை செய்யப்பட்டு வரும் என்எஸ்200 மாடலில் உள்ள டெலிஸ்கோப் ஃபோர்க்ஸை கொண்ட அதே ட்வின்-ஸ்பார் சுற்றளவு கொண்ட ஃப்ரேம் மற்றும் எரிவாயுவால் செயல்படுகின்ற மோனோஷாக் அமைப்பு தான் இந்த பிஎஸ்6 மாடலுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ப்ரேக்கிங் பணியையும் இரு சக்கரங்களிலும் ட்வின்-டிஸ்க் ப்ரேக்குகள் மற்றும் நிலையாக பொருத்தப்பட்டுள்ள சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் தான் கவனிக்கவுள்ளன.

இந்த பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது அடுத்த மார்ச் மாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த புதிய பஜாஜ் பல்சர் என்எஸ்200 பிஎஸ்6 பைக் இந்திய சந்தையில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி மற்றும் விரைவில் மார்க்கெட்டிற்கு வரவுள்ள யமஹா எஃப்இசட்25 பிஎஸ்6 பைக்குகளுடன் போட்டியிடவுள்ளது.
Source: Zigwheels


Click it and Unblock the Notifications








