இப்ப சந்தோஷம்தானே... பஜாஜ் - ட்ரையம்ஃப் கூட்டணியின் முதல் பைக் திட்டமிட்டபடி வருகிறது!
கொரோனா சூழலால், பஜாஜ் - ட்ரையம்ஃப் கூட்டணி உருவாக்கி வரும் முதல் பைக் வருகையில் தாமதம் ஏற்படுமா என்ற சந்தேகத்திற்கு விடை கிடைத்துள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

நாட்டின் பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முனைப்பில் உள்ளது. சர்வதசே அளவில் பல்வேறு நாடுகளில் தனது வர்த்தகத்தை மேலும் விரிவுப்படுத்துவதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறது.

இதற்கு தக்கவாறு புதிய பைக் மாடல்கள் தேவைப்படுகின்றன. இதற்கு தக்கவாறு பல புதிய மாடல்களை உருவாக்கி வருகிறது. மேலும், தனது பிராண்டின் அந்தஸ்தை உயர்த்தும் வகையில் நடுத்தர வகை பிரிமீயம் பைக் தயாரிப்பிலும் இறங்க முடிவு செய்தது.

இதற்காக, இங்கிலாந்தை சேர்ந்த ட்ரையம்ஃப் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து நடுத்தர வகை பிரிமீயம் பைக் மாடல்களை உருவாக்கி வருகின்றது. இந்த கூட்டணியின் முதல் பைக் மாடல் இந்தியர்கள் மட்டுமின்றி, உலக அளவில் பைக் ரசிகர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது கொரோனா பிரச்னையால் புதிய மாடல்களுக்கான முதலீடுகளையும், திட்டங்களையும் பல நிறுவனங்கள் ஒத்தி போட்டு வருகின்றன. அந்த வகையில், பஜாஜ் - ட்ரையம்ஃப் கூட்டணியின் முதல் பைக் வருகையில் தாமதம் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது..

ஆனால், திட்டமிட்டபடி உரிய நேரத்தில் பஜாஜ் - ட்ரையம்ஃப் கூட்டணியின் முதல் பைக் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது உறுதியாகி இருக்கிறது. ட்ரையம்ஃப் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவுத் தலைவர் ஷோயிப் ஃபாரூக் இதனை உறுதிப்படுத்தி உள்ளார்.

இதன்படி, வரும் 2022ம் ஆண்டு பஜாஜ் - ட்ரையம்ஃப் கூட்டணியின் முதல் பைக் மாடல் சந்தைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த பைக்குகள் 200 சிசி முதல் 750சிசி இடைப்பட்ட திறன் கொண்டதாக இருக்கும்.

இந்த கூட்டணியில் உருவாகும் பைக்குகள் இரு பிராண்டுகளிலும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் வாய்ப்புள்ளது. பஜாஜ் ஆட்டோ பைக் ஆலையில் இந்த பைக்குகள் உற்பத்தி செய்யப்படும் என தெரிகிறது.

இந்த கூட்டணியில் உருவாகும் பைக்குகளின் விலை குறைவான மாடல் ரூ.2 லட்சத்தையொட்டிய பட்ஜெட்டில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேடிஎம் 390, பிஎம்டபிள்யூ 310, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








