Just In
- 5 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 6 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 7 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 8 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உலகளவில் எடுக்கப்பட்ட பட்டியல்... மாபெரும் நகரங்களை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்த பெங்களூரு.. எதில் தெரியுமா?
உலக நாடுகளின் பெரும் நகரங்களைப் பின்னுக்கு தள்ளி பெங்களூரு முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது. எதில் என்பதுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.

பற்பல வேதனைகளை நடப்பு 2020ம் ஆண்டு நமக்கு வழங்கியிருந்தாலும், இந்த ஆண்டில் நாம் கற்றுக் கொண்ட வாழ்க்கைப் பாடங்கள் பல. வேறெந்த வருடத்திலும் இல்லாத துன்பத்தையும், துயரத்தையும் இந்த ஆண்டில் ஒட்டுமொத்த உலகமே கொரோனா வைரஸ் பரவலினால் சந்தித்திருக்கின்றது.

இருப்பினும், இந்த வருடத்தை பலர் இனிதே கழிக்கத் தொடங்கியிருக்கின்றனர். இந்த வருடத்தின் இறுதி நாளும் நெறுங்கிவிட்டது. இந்த நிலையில், நடப்பாண்டில் அரங்கேறிய மாற்றங்கள் மற்றும் சுவாரஷ்யங்கள் பற்றிய தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

அந்தவகையில், ஜெர்மன் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் மின்சார ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனமான உனு (unu) பெங்களூருவைப் பற்றி வெளியிட்டிருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம், உலகம் முழுவதிலும் செயல்பட்டு வரும் ஷேரிங் வாகன சேவைப் பற்றிய ஓர் ஆய்வறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.

அதாவது, கடந்த 2019ம் ஆண்டைக் காட்டிலும் 2020 ஆண்டில் மொபட் ஷேரிங் துறை அபரீத வளர்ச்சியை அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் இந்தத் துறை அசாத்தியமான வளர்ச்சியை அடைந்திருப்பதாக உனு தெரிவித்திருக்கின்றது.

இதனால், மொபட் ஷேரிங் துறையின் தலைவன் என்ற அந்தஸ்தை இந்தியா பெற்றிருக்கின்றது. ஆம், இந்தியாவே இத்துறையில் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது. இதற்கு பெங்களூரு நகரமே முக்கிய காரணமாக இருக்கின்றது. இந்த நகரத்திலேயே இருசக்கர வாகன வாடகை சேவை பட்டைய கிளப்புகின்ற வகையில் கொடிக் கட்டிப் பறந்து வருகின்றது.

இதையடுத்து ஹைதராபாத் நகரத்தில் இந்த சேவை அதிகரித்துக் காணப்படுகின்றது. இருப்பினும், பெங்களூரு நகரத்தினாலயே இந்தியா ஸ்கூட்டர் ஷேரிங் சேவையில் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது. அதேசமயம், இந்தியாவிலேயே இந்த துறையில் அதிகம் எரிபொருள் எந்திரம் கொண்ட இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தப்படுவாதக உனு தெரிவித்திருக்கின்றது.

பிற நாடுகளில் இந்த சேவையில் பெரும்பாலும் மின்சார இருசக்கர வாகனங்களே பயன்படுத்துகின்றன. எனவேதான் இந்தியா எரிபொருள் ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துவதை உனு சுட்டிக் காட்டியுள்ளது. இது வெளியிட்டிருக்கும் தகவலின்படி, தற்போது உலகம் முழுவதிலும் ஒட்டுமொத்தமாக 1,04,000 ஸ்கூட்டர் ஷேரிங் வாகன சேவையில் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டில் இது வெறும் 66,000 எண்ணிக்கையில் மட்டுமே காணப்பட்டது. மேலும், ஷேரிங் வாகனங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்திருக்கின்றது. ஆம், 2019ம் ஆண்டில் 4.8 மில்லியன் நபர்களே இந்த சேவையைப் பயன்படுத்தி வந்தனர். இந்த ஆண்டில் சுமார் 8.7 மில்லியன் மக்கள் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர்.

இது கடந்த ஆண்டைக் காட்டிலும் அசாத்தியமான வளர்ச்சியாகும். சரி வாருங்கள் எந்தெந்த நாட்டில் எத்தனை யூனிட்டுகள் பகிர் வாகன திட்டத்தின்கீழ் பயன்பாட்டில் இருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.

டாப் 10 நாடுகளின் பட்டியல்:
1. இந்தியா - 25,000க்கும் மேற்பட்ட ஸ்கூட்டர்கள்
2. ஸ்பெயின் - 23,050
3. தைவான் - 15, 350
4. இத்தாலி - 8800
5. ஜெர்மனி - 7000
6. அமெரிக்கா - 6100
7. பிரான்ஸ் - 5750
8. நெதர்லாந்து - 5650
9. போலந்து - 2350
10. போர்ச்சுகல் - 1250

அதிக ஷேரிங் வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கும் நகரங்கள்:
1. பெங்களூரு (இந்தியா) - 22,000க்கும் அதிகம்
2. தைபே (தாய்வான்) - 10,650
3. பார்சிலோனா (ஸ்பெயின்) - 8900
4. மாட்ரிட் (ஸ்பெயின்) - 6200
5. மிலன் (இத்தாலி) - 4900
6. பாரிஸ் (பிரான்ஸ்) - 4250
7. ரோம் (இத்தாலி) - 3300
8. வேலன்ஸ் (ஸ்பெயின்) - 3350
9. நியூயார்க் (அமெரிக்கா) - 3000
10. ஹைதராபாத் (இந்தியா) - 3000