ஒட்டுமொத்தமாக 25 அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்குகளை வாங்கிய பெங்களூரு காவல்துறை... எதற்காக தெரியுமா?

பெங்களூரு காவல்துறை ஒட்டுமொத்தமாக 25 அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்குகளை களமிறக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான காரணத்தைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஒட்டுமொத்தமாக 25 அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்குகளை வாங்கிய பெங்களூரு காவல்துறை... எதற்காக தெரியுமா?

டிவிஎஸ் நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த பைக்குகளில் ஒன்றான அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கின் 25 யூனிட்டுகளை பெங்களூரு காவல்துறையின் பயன்பாட்டிற்காக வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான சாவி வழங்கும் நிகழ்வு இன்று (12 நவம்பர்) நடைபெற்றது.

ஒட்டுமொத்தமாக 25 அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்குகளை வாங்கிய பெங்களூரு காவல்துறை... எதற்காக தெரியுமா?

இந்த நிகழ்வில், கர்நாடகா மாநிலத்தின் காவல்துறை அமைச்சர், பெங்களூரு நகர கமிஷனர் கமல் பந்த் உள்ளிட்ட ஏராளமான முக்கிய அதிகாரிகல் பங்கேற்றனர். இவர்களின் முன்னிலையிலேயே அப்பாச்சி ஆர்டிஆர்160 மோட்டார்சைக்கிள்களின் சாவி உரிய காவலர்களுக்கு வழங்கப்பட்டது.

ஒட்டுமொத்தமாக 25 அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்குகளை வாங்கிய பெங்களூரு காவல்துறை... எதற்காக தெரியுமா?

இந்த பைக்குகள் நகரத்தின் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில், ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றது. இதுமட்டுமின்றி பல்வேறு பாதுகாப்பு பணிகளில் போலீஸார்களுக்கு உதவியாக இந்த பைக்குகள் இருக்க உள்ளன. இதனால், போலீஸார்களுக்கான சில தனித்துவமான அமைப்புகள் இப்பைக்கில் வழங்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 25 அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்குகளை வாங்கிய பெங்களூரு காவல்துறை... எதற்காக தெரியுமா?

சைரன் மற்றும் ஃபிளாஷர் மின் விளக்குகள் பைக்கில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து, காவலர்களின் இருசக்கர வாகனம் என்பதை பிரதிபலிக்கக்கூடிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒட்டுமொத்தமாக 25 அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்குகளை வாங்கிய பெங்களூரு காவல்துறை... எதற்காக தெரியுமா?

டிவிஎஸ் நிறுவனம், அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கில் 159.7 சிசி திறனை வெளியேற்றும் சிங்கிள்-சிலிண்டர், ஏர் கூல்டு எஞ்ஜினைப் பயன்படுத்தியுள்ளது. இது, 15.1 பிஎஸ் பவரை 8,400 ஆர்பிஎம்மிலும், 13.9 என்எம் டார்க்கை 7,000 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும். இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸில் இணைக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 25 அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்குகளை வாங்கிய பெங்களூரு காவல்துறை... எதற்காக தெரியுமா?

ஆகஸ்டு மாதத்தின் ஆரம்பத்தில் இந்த பைக்கின் விலையை டிவிஎஸ் நிறுவனம் உயர்த்தியது குறிப்பிடத்தகுந்தது. இதனால், அப்பாச்சி ஆர்டிஆர் 160, ஆர்டிஆர் 180, ஆர்டிஆர் 160 4வி மற்றும் ஆர்டிஆர் 200 4வி ஆகிய பைக்குகளின் விலை உயர்ந்தது. ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டது.

ஒட்டுமொத்தமாக 25 அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்குகளை வாங்கிய பெங்களூரு காவல்துறை... எதற்காக தெரியுமா?

இந்த பைக்கில் எல்இடி தரத்திலான டிஆர்எல்கள் மற்றும் டெயில் லேம்ப், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ரேசிங் கிராஃபிக்ஸ், பெரிய டேங்க் எக்ஸ்டென்ஷன்ஸ், ஒரே நீட்டான இருக்கை, எஞ்ஜின் கௌல், பிளவுப்பட்ட பில்லன் க்ராப் ரெயில், சிங்கிள்-சேனல் சூப்பர்-மோட்டோ ஏபிஎஸ் ப்ரேக் சிஸ்டம் மற்றும் அலாய் சக்கரங்களை இந்த பைக் பெற்றிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bangalore Police Gets 25 Units Of TVS Apache RTR 160 Bikes. Read In Tamil.
Story first published: Thursday, November 12, 2020, 21:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X