அட்ராசக்க! சிபில் மதிப்பு குறைவாக இருந்தாலும் மின்சார ஸ்கூட்டரை சுலபமாக வாங்கலாம்! அதிரடி அறிவிப்பு!

பிரபல மின்சார ஸ்கூட்டர் நிறுவனமான பேட்ஆர்இ, ஸெஸ்ட் மணி நிறுவனத்துடன் இணைந்து சிறப்பு கடன் திட்டங்களை அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

அட்ராசக்க! சிபில் மதிப்பு குறைவாக இருந்தாலும் மின்சார ஸ்கூட்டரை சுலபமாக வாங்கலாம்... அமர்க்களமான அறிவிப்பு!

இந்தியாவில் மின் வாகனங்களின் அறிமுகம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதற்கு கடந்த காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புது முக மின்சார வாகனங்களின் பட்டியலே சான்று. புதுமுக மின்சார வாகனங்கள் ஒவ்வொன்றும் தன் பக்கம் மக்களை கவர்ந்திழுக்கின்ற வகையிலான அம்சங்களைக் கொண்டதாக இருக்கின்றன. ஆனால், அதிகபட்ச விலைதான் மக்களுக்கு முட்டுக் கட்டையாக அமைந்திருக்கின்றது.

அட்ராசக்க! சிபில் மதிப்பு குறைவாக இருந்தாலும் மின்சார ஸ்கூட்டரை சுலபமாக வாங்கலாம்... அமர்க்களமான அறிவிப்பு!

இருப்பினும், மக்களை மின் வாகனங்களின் பக்கம் ஈர்க்கும் விதமாக மத்திய அரசு சார்பில் மானியம் போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, சில மாநில அரசுகள் சார்பில் வரியில் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகின்றன. மின்சார வாகனங்கள் சுற்றுப்புறத்திற்கு நண்பனாக செயல்படும் என்கின்ற காரணத்தினாலயே மின் வாகன விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அட்ராசக்க! சிபில் மதிப்பு குறைவாக இருந்தாலும் மின்சார ஸ்கூட்டரை சுலபமாக வாங்கலாம்... அமர்க்களமான அறிவிப்பு!

இந்நிலையில், பிரபல பேட்ஆர்இ நிறுவனமும் அதன் பங்காக (தன்னுடைய) மின்சார ஸ்கூட்டர்களின் பக்கம் மக்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் ஓர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்காக பிரபல நிதி நிறுவனமான ஸெஸ்ட்-மணி நிறுவனத்துடன் அது கூட்டணி அமைத்திருக்கின்றது.

அட்ராசக்க! சிபில் மதிப்பு குறைவாக இருந்தாலும் மின்சார ஸ்கூட்டரை சுலபமாக வாங்கலாம்... அமர்க்களமான அறிவிப்பு!

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம் பேட்ஆர்இ. இது மின்சார வாகன உற்பத்தியை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது. மலிவு விலை மின்சார வாகனங்களைக் களமிறக்குவதில் பெயர்போன நிறுவனமாக இது இருக்கின்றது.

அட்ராசக்க! சிபில் மதிப்பு குறைவாக இருந்தாலும் மின்சார ஸ்கூட்டரை சுலபமாக வாங்கலாம்... அமர்க்களமான அறிவிப்பு!

இந்த நிலையிலேயே செல்போன் செயலியை மையமாகக் கொண்டு இயங்கும் ஸெஸ்ட் மணி எனும் தனியார் நிதி நிறுவனத்துடன் இணைந்து பேட்ஆர்இ நிறுவனம் சிறப்பு கடன் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இதனால் பேட்ஆர்இ மின்சார ஸ்கூட்டரை வாங்குவது தற்போது மிகவும் சுலபமான ஒன்றாக மாறியுள்ளது.

அட்ராசக்க! சிபில் மதிப்பு குறைவாக இருந்தாலும் மின்சார ஸ்கூட்டரை சுலபமாக வாங்கலாம்... அமர்க்களமான அறிவிப்பு!

ஆம், பேட்ஆர்இ மின்சார ஸ்கூட்டரை புதிதாக வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், ஸெஸ்ட் மணி (Zestmoney) எனும் ஆப்பினை டவுண்லோடு செய்து, அதில் கேட்கப்படும் சில தகவல்களை உள்ளிட்டாலே போதும். சில துளி மணி நேரங்களிலேயே நிதிக்கான ஒப்புதல் கிடைத்துவிடும். மாத சம்பளம் அல்லது வருமானத்தின் அடிப்படையில் கடன் ஒப்புதல் அளிக்கப்படுகின்றது.

அட்ராசக்க! சிபில் மதிப்பு குறைவாக இருந்தாலும் மின்சார ஸ்கூட்டரை சுலபமாக வாங்கலாம்... அமர்க்களமான அறிவிப்பு!

அதேசமயம், சிபில் மதிப்பு குறைவாக இருப்பவர்களும் இதன் மூலம் பயனடைய முடியும் என கூறப்படுகின்றது. கொரோனா காலத்தில் தற்போது பெரும்பாலானோர் சிபில் மதிப்பை இழந்தவர்களாகவே இருக்கின்றனர். ஆகையால், அவர்களையும் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை பேட்ஆர்இ மற்றும் ஸெஸ்ட்மணி இணைந்து வெளியிட்டுள்ளது.

அட்ராசக்க! சிபில் மதிப்பு குறைவாக இருந்தாலும் மின்சார ஸ்கூட்டரை சுலபமாக வாங்கலாம்... அமர்க்களமான அறிவிப்பு!

3, 6 அல்லது 12 மாதங்கள் அடிப்படையில் இஎம்ஐ திட்டம் வழங்கப்படுகின்றது. மேலும், பூஜ்ஜியம் முன் தொகை அடிப்படையிலும் மின்சார ஸ்கூட்டர்களை வழங்க பேட்ஆர்இ திட்டமிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலான மக்கள் தனி வாகனங்களில் பயணிப்பதையே விரும்புகின்றனர். அத்தகையோரை மலிவு விலை மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் சிறப்பு கடன் திட்டம் மூலம் கவரவே இந்த அதிரடி நடவடிக்கையில் பேட்ஆர்இ இறங்கியுள்ளது.

அட்ராசக்க! சிபில் மதிப்பு குறைவாக இருந்தாலும் மின்சார ஸ்கூட்டரை சுலபமாக வாங்கலாம்... அமர்க்களமான அறிவிப்பு!

பேட்ஆர்இ நிறுவனம் தற்போது பேட்ஆர்இ ஐஓடி, பேட்ஆர்இ ஒன், பேட்ஆர்இ எல்ஓ மற்றும் பேட்ஆர்இ ஜிபிஎஸ் ஆKிய மாடல்களை விற்பனைச் செய்து வருகின்றது. இவை இந்தியாவின் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே தற்போது விற்பனைக்குக் கிடைக்கின்றன. இந்த ஸ்கூட்டர் தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர் போன்ற முக்கிய நகரங்களில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது.

அட்ராசக்க! சிபில் மதிப்பு குறைவாக இருந்தாலும் மின்சார ஸ்கூட்டரை சுலபமாக வாங்கலாம்... அமர்க்களமான அறிவிப்பு!

சிறப்பு கடன் திட்டம் குறித்து ஸெஸ்ட் மணயின் தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிறுவனருமான லிசி சாப்மேன் கூறியதாவது, "மின்சார ஸ்கூட்டர்களுக்கான தேவை அதிகமாகிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் பேட்ஆர்இ உடன் கூட்டாளராக இணைந்திருப்பதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. மக்கள் தங்களது கனவை நிறைவேற்றிக் கொள்ள சிறந்த நிதியுதவியை தேடிவருகின்றனர். இதற்கு ஸெஸ்ட் மணி குறைந்த நேரத்தில் உடனடி தீர்வை வழங்கும்" என்றார்.

அட்ராசக்க! சிபில் மதிப்பு குறைவாக இருந்தாலும் மின்சார ஸ்கூட்டரை சுலபமாக வாங்கலாம்... அமர்க்களமான அறிவிப்பு!

பேட்ஆர்இ மற்றும் ஸெஸ்ட் மணி இணைவு மக்கள் மத்தியில் எந்த மாதிரியான வரவேற்பைப் பெறும் என்பதை அறிந்துக்கொள்ள இன்னும் சில நாட்கள் ஆகும். இருப்பினும், சிபில் மதிப்பு இல்லாதவர்களும் எளிதில் கடனைப் பெற முடியும் என அந்த நிறுவனங்கள் அறிவித்திருப்பது மக்களை அதிகளவில் ஈர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
BattRE Electric Mobility Partnered With ZestMoney. Read In Tamil.
Story first published: Wednesday, July 29, 2020, 7:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X