விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது புதிய பெனெல்லி 302எஸ் பைக்!

பெனெல்லி நிறுவனத்தின் 302எஸ் பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது புதிய பெனெல்லி 302எஸ் பைக்!

இந்தியாவின் ஆரம்ப ரக பிரிமீயம் பைக் மார்க்கெட்டில் இத்தாலியை சேர்ந்த பெனெல்லி நிறுவனம் மிக முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறது. அந்நிறுவனத்தின் டிஎன்டி 300 பைக் இந்திய இளம் சமுதாயத்தினரின் முக்கிய தேர்வுகளில் ஒன்றாகவும் இருந்து வருகிறது.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது புதிய பெனெல்லி 302எஸ் பைக்!

இந்த நிலையில், டிஎன்டி 300 பைக்கிற்கு மாற்றாக புதிய 302எஸ் பைக்கை பெனெல்லி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. அண்மையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புதிய பெனெல்லி 302எஸ் பைக் விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கிறது.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது புதிய பெனெல்லி 302எஸ் பைக்!

இந்த நிலையில், புதிய 302எஸ் பைக் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்று பெனெல்லி நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவர் வினவியிருந்தார். இதற்கு விரைவில் என்று பதில் அளித்துள்ளது பெனெல்லி நிறுவனம்.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது புதிய பெனெல்லி 302எஸ் பைக்!

அதாவது,அடுத்த சில மாதங்களில் புதிய 302எஸ் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய 302எஸ் பைக் தோற்றத்தில் பல்வேறு விதத்திலும் மெருகு கூட்டப்பட்டுள்ளது. முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள் இடம்பெற்றுள்ளன.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது புதிய பெனெல்லி 302எஸ் பைக்!

புதிய 302எஸ் பைக்கில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றிருக்கிறது. அளவில் சிறிய ரேடியேட்டர் அமைப்பும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது புதிய பெனெல்லி 302எஸ் பைக்!

தற்போது விற்பனையில் இருக்கும் டிஎன்டி 300 பைக்கின் தோற்றத்தை ஒத்திருந்தாலும், சில இடங்களில் மாறுதல்களுடன் வேறுபடுத்தப்பட்டு இருக்கிறது. புதிய பெனெல்லி 302எஸ் பைக்கில் புதிய பெட்ரோல் டேங்க் அமைப்பு, எஞ்சின் கவுல் அமைப்பு, ஸ்பிளிட் இருக்கைகள் உள்ளன.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது புதிய பெனெல்லி 302எஸ் பைக்!

முன்புறத்தில் 41 மிமீ இன்வர்டெட் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் வலதுபக்கமாக மிக சாய்வான கோணத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது புதிய பெனெல்லி 302எஸ் பைக்!

இந்த பைக்கில் முன்சக்கரத்தில் 4 பிஸ்டன் காலிபர்கள் கொண்ட 260 மிமீ டியூவல் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 2 காலிபர்களுடன் கூடிய 240 மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் உள்ளன. 17 அங்குல அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளன. முன்சக்கரத்தில் 120/70 செக்ஷன் பைரெல்லி டயரும், பின்புறத்தில் 160/60 செக்ஷன் பைரெல்லி டயரும் பொருத்தப்பட்டுள்ளன.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது புதிய பெனெல்லி 302எஸ் பைக்!

புதிய பெனெல்லி 302எஸ் பைக்கில் இரண்டு சிலிண்டர்கள் கொண்ட 300 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 37.5 எச்பி பவரையும், 25.62 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதன் எஞ்சின் அதிகபட்சமாக 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது புதிய பெனெல்லி 302எஸ் பைக்!

புதிய பெனெல்லி 302எஸ் பைக்கில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் இடம்பெற்றிருக்கும். அத்துடன் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் வருவதால், டிஎன்டி 300 பைக்கைவிட விலை ரூ.15,000 வரை கூடுதலாக நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 2, 2020, 10:22 [IST]
English summary
New Benelli 302S streetfighter is expected to be launched in india very soon.
மேலும்... #பெனெல்லி #benelli
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+