ரூ. 1.99 லட்சம் மட்டுமே... ராயல் என்பீல்டு பைக்கிற்கு டஃப் கொடுக்க அறிமுகமானது பெனெல்லி இம்பீரியல்

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் தோற்றமுடைய பைக்குகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பிஎஸ்-6 தர இம்பீரியல் 400 பைக்கை பெனெல்லி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ரூ. 1.99 லட்சம் மட்டுமே... ராயல் என்பீல்டு பைக்கிற்கு டஃப் கொடுக்க அறிமுகமானது பெனெல்லி இம்பீரியல் 400...

இத்தாலி நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் பெனெல்லி நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த பைக்குகளில் ஒன்றான இம்பீரியல் 400 மாடலை பிஎஸ்-6 தரத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் அதன் பிஎஸ்-4 மாடலைக் காட்டிலும் ரூ. 20 ஆயிரம் விலையுயர்வைப் பெற்று களமிறங்கியிருக்கின்றது.

ரூ. 1.99 லட்சம் மட்டுமே... ராயல் என்பீல்டு பைக்கிற்கு டஃப் கொடுக்க அறிமுகமானது பெனெல்லி இம்பீரியல் 400...

எனவே, பிஎஸ்-6 பெனெல்லி இம்பீரியல் ரூ. 1.99 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். தற்போது இந்த பைக்கிற்கான புக்கிங் ஆன்லைன் மற்றும் டீலர்ஷிப் வாயிலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

ரூ. 1.99 லட்சம் மட்டுமே... ராயல் என்பீல்டு பைக்கிற்கு டஃப் கொடுக்க அறிமுகமானது பெனெல்லி இம்பீரியல் 400...

இதனைப் புக் செய்ய முன்தொகையாக ரூ. 6 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு ஆறாயிரம் ரூபாய் கொடுத்து பிஎஸ்-6 இம்பீரியல் 400 பைக்கை புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இம்மாதமே டெலிவரி வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ. 1.99 லட்சம் மட்டுமே... ராயல் என்பீல்டு பைக்கிற்கு டஃப் கொடுக்க அறிமுகமானது பெனெல்லி இம்பீரியல் 400...

இந்த பைக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்தான் முதல் முறையாக இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, அப்பைக்கிற்கு ஆரம்ப விலையாக ரூ. 1.69 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த விலைதான் தற்போது பல மடங்கு உயர்ந்து ரூ. 1.99 லட்சமாக மாறியிருக்கின்றது.

ரூ. 1.99 லட்சம் மட்டுமே... ராயல் என்பீல்டு பைக்கிற்கு டஃப் கொடுக்க அறிமுகமானது பெனெல்லி இம்பீரியல் 400...

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் ரக பைக்குகளுக்குப் போட்டியளிக்கும் வகையில் இந்தியாவில் களமிறக்கப்பட்டுள்ள இந்த பைக்கிற்கு இளைஞர்கள் மத்தியில் கணிசமான வரவேற்பு நிலவி வருகின்றது. இதற்கு இம்பீரியல் 400 பைக்கின் தோற்றம் மற்றும் அதி திறன் ஆகியவையே காரணமாக உள்ளது. அதேசமயம், குறைந்த விலைக் கொண்ட பைக்காக இருப்பதும் ஓர் காரணமாக உள்ளது.

ரூ. 1.99 லட்சம் மட்டுமே... ராயல் என்பீல்டு பைக்கிற்கு டஃப் கொடுக்க அறிமுகமானது பெனெல்லி இம்பீரியல் 400...

எனவேதான், இந்திய இளைஞர்கள் இந்த பைக்கிற்கு நல்ல டிமாண்டை வழங்கி வருகின்றனர். இந்த பைக்கில் 374 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 20 பிஎச்பி திறனை 2,000 ஆர்பிஎம்மிலும், 29 என்எம் டார்க்கை 3,500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும். இது, 5-ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும் எஞ்ஜின் ஆகும்.

ரூ. 1.99 லட்சம் மட்டுமே... ராயல் என்பீல்டு பைக்கிற்கு டஃப் கொடுக்க அறிமுகமானது பெனெல்லி இம்பீரியல் 400...

இந்த பைக்கில் சொகுசான பயண அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், ஷாக் அப்சார்பர் பின் பக்கத்திலும் இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன், பாதுகாப்பான பிரேக்கிங் வசதியை வழங்குவதற்காக 300 மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக் முன் பக்கத்திலும், 240 மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக் பின் பக்கத்திலும் பொருத்தப்பட்டிருக்கின்றது.

ரூ. 1.99 லட்சம் மட்டுமே... ராயல் என்பீல்டு பைக்கிற்கு டஃப் கொடுக்க அறிமுகமானது பெனெல்லி இம்பீரியல் 400...

இத்துடன் கூடுதல் பாதுகாப்பிற்காக பைக்கின் இரு வீல்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் அம்சம் இணைக்கப்பட்டிருக்கின்றது. இது மிக சவாலான நேரத்தில்கூட கூர்மையான பிரேக்கிங் வசதியை வழங்கும். எனவே, பயணத்தின்போது பாதுகாப்பு சற்று கூடுதலாகவே கிடைக்கும்.

ரூ. 1.99 லட்சம் மட்டுமே... ராயல் என்பீல்டு பைக்கிற்கு டஃப் கொடுக்க அறிமுகமானது பெனெல்லி இம்பீரியல் 400...

மேற்கண்ட அனைத்தும் பிஎஸ்-4 மாடலில் இருந்த அதே அம்சங்கள்தான். ஆகையால், பிஎஸ்-6 தரத்தை தவிர்த்து வேறெந்த மாறுதல்களும் இந்த பைக்கில் மேற்கொள்ளப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. எனவேதான், பெனெல்லி இம்பீரியல் 400 பிஎஸ்-4 மாடல் இருந்த அதே 205 கிலோ எடையில் புதிய பிஎஸ்-6 இம்பீரியல் 400 வெர்ஷனும் இருக்கின்றது.

ரூ. 1.99 லட்சம் மட்டுமே... ராயல் என்பீல்டு பைக்கிற்கு டஃப் கொடுக்க அறிமுகமானது பெனெல்லி இம்பீரியல் 400...

பெரியளவில் மாற்றம் மேற்கொள்ளப்படாத காரணத்தால் அதே ரெட்ரோ-கிளாசிக் தோற்றத்தில்தான் இந்த பைக் காட்சியளிக்கின்றது. டியர் டிராப் வடிவிலான ப்யூவல் டேங்க், ரெட்ரோ தீமிலான அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், ஸ்போக் வீல்கள் மற்றும் குரோம் ஹைலைட்டர்கள் உள்ளிட்டவை அப்படியே இடம்பெற்றிருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, July 9, 2020, 19:43 [IST]
English summary
Benelli Imperiale 400 BS6 Launched In India: Prices Start At Rs 1.99 Lakh. Read In Tamil.
மேலும்... #பெனெல்லி #benelli
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+