இந்தியாவில் விற்பனையில் ஒரே ஒரு பெனெல்லி பைக்கிற்கும் சலுகைகள் அறிவிப்பு!!

பெனெல்லி இந்தியா நிறுவனம் விற்பனையில் உள்ள அதன் இம்பெரியல் 400 மோட்டார்சைக்கிளுக்கு தீபாவளிக்கான சலுகைகளை அறிவித்துள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் விற்பனையில் ஒரே ஒரு பெனெல்லி பைக்கிற்கும் சலுகைகள் அறிவிப்பு!!

பிஎஸ்6 உமிழ்விற்கு இணக்கமானதாக தற்சமயம் இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஒரே பெனெல்லி மோட்டார்சைக்கிள் இம்பெரியல் 400 ஆகும். இந்த ரெட்ரோ-கிளாசிக் மோட்டார்சைக்கிளுக்கு ரூ.12,000 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் விற்பனையில் ஒரே ஒரு பெனெல்லி பைக்கிற்கும் சலுகைகள் அறிவிப்பு!!

பிராண்டின் ‘தீபாவளி ஸ்பார்கிள்' என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த சலுகைகளினால் இம்பெரியல் 400 பைக்கிற்கு அதிக வாடிக்கையாளர்கள் கிடைக்கும் என நம்புவதாக பெனெல்லி நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையில் ஒரே ஒரு பெனெல்லி பைக்கிற்கும் சலுகைகள் அறிவிப்பு!!

குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படவுள்ள இந்த சலுகை இம்பெரியல் 400 பைக்கின் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தேர்வுகளுக்கு கிடைக்கும். இந்த பண்டிகை கால சலுகைகள் மட்டுமின்றி இந்த ரெட்ரோ மோட்டார்சைக்கிளுக்கு அட்டகாசமான நிதி திட்டங்களையும் பெனெல்லி நிறுவனம் ஆரம்பத்தில் இருந்தே வழங்கி வருகிறது.

இந்தியாவில் விற்பனையில் ஒரே ஒரு பெனெல்லி பைக்கிற்கும் சலுகைகள் அறிவிப்பு!!

இதன்படி மொத்த எக்ஸ்ஷோரூம் விலையில் 85 சதவீதம் வரையிலான தொகையை அதிகப்பட்சமாக மாதத்தவணையாக மாற்றி கொள்ளலாம். ரூ.4,999 என்பது இந்த பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ள குறைந்த மாதத்தவணை தொகையாகும். பைக்கிற்கான முன்பதிவுகள் இந்தியா முழுவதும் உள்ள டீலர்ஷிப் மையங்களிலும், பிராண்டின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திலும் ரூ.6,000 என்ற முன்தொகையுடன் நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் விற்பனையில் ஒரே ஒரு பெனெல்லி பைக்கிற்கும் சலுகைகள் அறிவிப்பு!!

பெனெல்லி இம்பெரியல் 400 பைக்கின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.99 லட்சமாக உள்ளது. நிதி தேர்வுகளை போல், 3-வருட முடிவிலா கிமீ உத்தரவாதம் மற்றும் 2-வருட நிறுவனத்தின் சேவை உள்ளிட்டவற்றையும் இந்த பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.

இந்தியாவில் விற்பனையில் ஒரே ஒரு பெனெல்லி பைக்கிற்கும் சலுகைகள் அறிவிப்பு!!

சிவப்பு, சில்வர் மற்றும் கருப்பு என்ற 3 வண்ண தேர்வுகளில் கிடைக்கும் இந்த பெனெல்லி பைக்கில் 374சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகின்றது. அதிகப்பட்சமாக 6000 ஆர்பிஎம்-ல் 20 பிஎச்பி மற்றும் 3500 ஆர்பிஎம்-ல் 29 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

இந்தியாவில் விற்பனையில் ஒரே ஒரு பெனெல்லி பைக்கிற்கும் சலுகைகள் அறிவிப்பு!!

இந்திய சந்தையில் விற்பனையில் ஒரே ஒரு பிஎஸ்6 மோட்டார்சைக்கிளுக்கும் பெனெல்லி நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு சலுகைகளை அறிவித்துள்ளது. உண்மையில் ரூ.12,000 வரையிலான பணத்தை மிச்சப்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்த சலுகை நிச்சயம் பிராண்டின் விற்பனையை இந்தியாவில் உயர்த்தும்.

Most Read Articles

மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Benelli Imperiale 400 ‘Diwali Sparkle Offer’ Announced In India: Receives Benefits Up To Rs 12,000
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X