Just In
- 5 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 6 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 7 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 8 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பாதுகாப்பான தயாரிப்புகள் என மார்த்தட்டி கொள்ளும் டாடா- நவம்பர் மாத ஹேட்ச்பேக் விற்பனையில் பதிலளித்த மாருதி சுஸுகி
ஹேட்ச்பேக் கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகி நிறுவனம் அதன் ஹேட்ச்பேக் மாடல்கள் மூலம் மற்ற நிறுவனங்கள் அனைத்தையும் ஒரேடியாக முந்தி பிரம்மிக்க வைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

க்ராஸ்ஓவர் மற்றும் காம்பெக்ட் எஸ்யூவி கார் மாடல்களுக்கு கடந்த சில வருடங்களில் இந்திய சந்தையில் மிக பெரிய தேவை ஏற்பட்டு இருந்தாலும், ஹேட்ச்பேக் கார்களை விரும்புபவர்கள் தொடர்ந்து தங்களது ஆதரவை அளித்து வருகின்றனர்.

இதற்கான காரணம் எல்லாருக்கும் தெரிந்ததுதான், ஹேட்ச்பேக் கார்களில் பெரும்பான்மையானவை மிகவும் மலிவானவை, அவற்றை போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் இயக்கி செல்வதும் அவ்வளவு கடினமானதாக இருக்காது மற்றும் எரிபொருளையும் சிக்கனமாக பயன்படுத்தும்.

இதனால் தற்சமயம் இந்தியாவில் தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் குறைந்தது ஒரு ஹேட்ச்பேக் காரையாவது தனது லைன்-அப்பில் வைத்துள்ளன. நம் நாட்டில் ஹேட்ச்பேக் கார்கள் விற்பனையில் எப்போதுமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் கை தான் ஓங்கியிருக்கும்.

Rank | Model | Sales |
1 | Maruti Swift | 18,498 |
2 | Maruti Baleno | 17,872 |
3 | Maruti Wagonr | 16,256 |
4 | Maruti Alto | 15,321 |
5 | Hyundai Grand i10 | 10,936 |
6 | Hyudai i20 | 9,096 |
7 | Maruti S-Presso | 7,018 |
8 | Maruti Celerio | 6,533 |
9 | Tata Altroz | 6,260 |
10 | Tata Tiago | 5,890 |
இதைதான் தற்போது வெளியாகியுள்ள 2020 நவம்பர் மாத ஹேட்ச்பேக் கார்களின் விற்பனை நிலவரமும் வெளிக்காட்டுகிறது. இந்த லிஸ்ட்டில் பார்த்தால் முதல் நான்கு இடங்களை மாருதியின் தயாரிப்புகள் தான் ஆக்கிரமித்துள்ளன. முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்டிற்கு சந்தையில் எத்தகைய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது உங்களுக்கே நன்றாக தெரியும்.

கடந்த மாதத்தில் மட்டும் மொத்தம் 18,498 ஸ்விஃப்ட் கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது. மாருதியின் பலேனோவும் நல்லப்படியாக விற்பனையாகியுள்ளது. கடந்த மாதத்தில் 17,872 என்ற விற்பனை எண்ணிக்கையை மாருதிக்கு இந்த ஹேட்ச்பேக் கார் பெற்று தந்துள்ளது.

மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் மாருதி சுஸுகி வேகன்ஆர் மற்றும் ஆல்டோ கார்கள் உள்ளன. இவை இரண்டும் கடந்த நவம்பர் மாதத்தில் முறையே 16,256 மற்றும் 15,321 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றிற்கு அடுத்து இரு ஹூண்டாய் தயாரிப்புகள் இந்த வரிசையில் உள்ளன.

ஹேட்ச்பேக் கார்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கார்களின் விற்பனையிலும் இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் தான் போட்டியாக விளங்கி வருகிறது. ஐந்தாவது இடத்தை ஹூண்டாயின் க்ராண்ட் ஐ10 நியோஸ் பிடித்துள்ளது.

இந்த ஹேட்ச்பேக் மாடலின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 10,936 ஆகும். இதே ஐந்து ஹேட்ச்பேக் மாடல்கள்தான் 2020 அக்டோபர் மாதத்திலும் முதல் ஐந்து இடங்களை பிடித்திருந்தன. இவற்றிற்கு பிறகு இந்த லிஸ்ட்டில் கார் மாடல்கள் 10 ஆயிரத்திற்கும் குறைவான விற்பனை எண்ணிக்கையையே பெற்றுள்ளன.

இந்த லிஸ்ட்டில் மற்றொரு ஹூண்டாய் தயாரிப்பாக எலைட் ஐ20 9,096 மாதிரிகள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவற்ற்றிற்கு அடுத்து 7வது மற்றும் 8வது இடங்களில் மீண்டும் மாருதி சுஸுகியின் தயாரிப்பாக எஸ்-பிரேஸ்ஸோ, செலிரியோ மாடல்கள் உள்ளன.

இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி இரு இடங்களில் டாடாவின் அல்ட்ராஸ் மற்றும் டியாகோ உள்ளன. எஸ்-பிரெஸ்ஸோ உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனையில் பூஜ்ஜிய பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்றுள்ளது. இதனை வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் தனது டியாகோ உடன் ஒப்பிட்டு கிண்டல் செய்திருந்தது.

ஏனெனில் டாடா டியாகோ இந்த சோதனையில் ஐந்திற்கு நான்கு மதிப்பீடுகளை பெற்றுள்ளது. இதற்கு உடனே பதிலளித்த மாருதி சுஸுகி, என்னதான் பாதுகாப்பான காராக இருந்தாலும், அதிகளவில் வாடிக்கையாளர்களை எங்களது தயாரிப்புகள் தான் பெற்று வருகின்றன என தெரிவித்தது. இதை தான் தற்போது வெளியாகியுள்ள விற்பனை நிலவர அட்டவணையும் வெளிப்படுத்துகிறது.