இந்தியர்களை அசரடிக்க 3 புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தும் பிஎம்டபிள்யூ...

இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள 3 புதிய மோட்டார்சைக்கிள்கள் பற்றிய விபரங்களை பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது சமூக வலைத்தளங்களின் மூலமாக பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த வகையில் இந்நிறுவனத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள வீடியோவின் மூலம் வெளிவந்துள்ள புதிய மோட்டார்சைக்கிள்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

இந்தியர்களை அசரடிக்க 3 புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தும் பிஎம்டபிள்யூ...

இந்த வீடியோவில் 2020 பிஎம்டபிள்யூ எஸ்1000 எக்ஸ்ஆர் மற்றும் எஃப் 900 எக்ஸ்ஆர் பைக்குகள் காட்டப்பட்டுள்ளன. எஃப் 900 ஆர் மாடலை பற்றி இந்நிறுவனம் இந்த வீடியோவில் எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும், இந்த பைக் 2020ஆம் ஆண்டிற்காக இந்நிறுவனத்தில் இருந்து அறிமுகமாகவுள்ளது.

இந்தியர்களை அசரடிக்க 3 புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தும் பிஎம்டபிள்யூ...

இந்த மூன்று பைக் மாடல்களும் ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐக்மா கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றில் எஃப் 900 ட்வின்ஸ் பைக்குகள் முதலாவதாக தற்சமயம் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த பின்பு அறிமுகமாகவுள்ளன. அதன்பின் சில மாதங்கள் கழித்து 2020 எஸ்1000 ஆர் பைக் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்தியர்களை அசரடிக்க 3 புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தும் பிஎம்டபிள்யூ...

இதனால் லாக்டவுன் முடிந்தவுடன் இந்த பைக் மாடல்களுக்கான முன்பதிவு நாடு முழுவதும் உள்ள டீலர்ஷிப்களில் ஆரம்பமாகவுள்ளன. இதில் சில டீலர்ஷிப்களில் டெஸ்ட் ட்ரைவ்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. எஃப் 900 ட்வின்ஸ் பைக்குகளில் இன்-லைன் ட்வின்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அமைப்பை தான் இந்நிறுவனம் அதன் எஃப் 850 ஜிஎஸ் பைக்கிலும் வழங்கி வருகிறது.

இந்தியர்களை அசரடிக்க 3 புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தும் பிஎம்டபிள்யூ...

இருப்பினும் இந்த ட்வின்ஸ் பைக்குகளின் இந்த என்ஜின் 853சிசி-ல் இருந்து 895சிசி-ஆக மாற்றப்பட்டுள்ளது. இந்த அளவு அதிகரிப்பால் இந்த என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றலின் அளவும் 95 பிஎச்பி-ல் இருந்து 105 பிஎச்பி ஆக உயர்ந்துள்ளது. 105 பிஎச்பி பவரை இந்த என்ஜின் 8,750 ஆர்பிஎம்-ல் வெளிப்படுத்தும். டார்க் திறனில் எந்த மாற்றமும் இல்லை.

இந்தியர்களை அசரடிக்க 3 புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தும் பிஎம்டபிள்யூ...

இதனால் இந்த இன்-லைன் ட்வின்-சிலிண்டர் என்ஜின் 6,500 ஆர்பிஎம்-ல் அதே 92 என்எம் டார்க் திறனை தான் இந்த 900சிசி பைக்குகளுக்கும் வழங்கவுள்ளது. ஒரே சேசிஸில் இந்த இரு புதிய பைக்குகள் தயாரிக்கப்பட்டு வந்தாலும், எஃப் 900 எக்ஸ்ஆர் பைக்கின் பெட்ரோல் டேங்க் 15.5 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகவும், எஃப் 900 ஆர் பைக் சற்று குறைவாக 13 லிட்டர் எரிபொருள் டேங்க் உடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களை அசரடிக்க 3 புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தும் பிஎம்டபிள்யூ...

அதேபோல் எக்ஸ்ஆர் பைக்கில் சஸ்பென்ஷன் அமைப்பு சிறப்பானதாக முன்புறத்தில் 170மிமீ-லும், பின்புறத்தில் 172மிமீ-லும் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவே எஃப் 900 ஆர் பைக்கில் முன் மற்றும் பின்புறத்தில் முறையே 135மிமீ மற்றும் 142மிமீ -ல் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியர்களை அசரடிக்க 3 புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தும் பிஎம்டபிள்யூ...

எஸ்1000 எக்ஸ்ஆர் பைக்கில் புதிய எஸ்1000 ஆர்ஆர் பைக்கின் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும் எஸ்1000 எக்ஸ்ஆர் பைக்கில் அதன் முன்னோடி மாடல்களை காட்டிலும் தரமான தொழிற்நுட்ப பாகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி 10 கிலோ குறைவான எடையில் உள்ள இந்த புதிய 1000சிசி பைக்கில் வழங்கப்பட்டுள்ள தொழிற்நுட்பங்கள் அனைத்தும் இதன் முந்தைய தலைமுறை பைக்கிற்கும் வழங்கப்பட்டு இருந்தது.

இந்தியர்களை அசரடிக்க 3 புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தும் பிஎம்டபிள்யூ...

ஆனால் அந்த பைக்கில் கூடுதல் தேர்வாக இருந்த இந்த தொழிற்நுட்ப வசதிகள் இந்த புதிய பைக்கில் நிலையாக பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கின் இன்-லைன் 4-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 11,000 ஆர்பிஎம்-ல் 165 பிஎச்பி பவரையும், 9,250 ஆர்பிஎம்-ல் 114 என்எம் டார்க் திறனையும் பைக்கிற்கும் வழங்கும்.

இந்தியர்களை அசரடிக்க 3 புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தும் பிஎம்டபிள்யூ...

இதன் என்ஜின் உடன் இணைக்கப்பட்டுள்ள கியர்பாக்ஸ் தற்போது நீண்டதாக 4வது, 5வது மற்றும் 6வது கியர்களை வழங்கும் விதத்தில் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் வசதிகளாக எஸ்1000 எக்ஸ்ஆர் பைக்கில் ஆண்டி-ஹோப்பிங் க்ளட்ச், என்ஜின் ட்ராக் டார்க் கண்ட்ரோல் (எம்எஸ்ஆர்) மற்றும் எலக்ட்ரிக் மூலமாக கண்ட்ரோல் செய்யக்கூடிய சஸ்பென்ஷன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இந்தியர்களை அசரடிக்க 3 புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தும் பிஎம்டபிள்யூ...

மற்றப்படி இந்த ஆற்றல்மிக்க மோட்டார்சைக்கிள்களுக்கு இந்திய எக்ஸ்ஷோரூமில் நிர்ணயிக்கப்படவுள்ள விலைகள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்தியா ஊரடங்கை தளர்த்தும் நிலையில் உள்ளதால் இந்த புதிய பிஎம்டபிள்யூ பைக்குகளின் விலைகளை விரைவில் எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 22, 2020, 19:28 [IST]
English summary
2020 BMW F 900 R, F 900 XR, S 1000 XR to launch in India soon
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+