பிஎம்டபிள்யூ ஆர் 18 க்ரூஸர் பைக் பற்றிய தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியீடு...

பல மாத காத்திருப்புக்கு பிறகு பிஎம்டபிள்யூ நிறுவனம் புதிய ஆர் 18 க்ரூஸர் பைக்கை பற்றிய தகவல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதனை விரிவாக இந்த செய்தியில் காண்போம்.

பிஎம்டபிள்யூ ஆர் 18 க்ரூஸர் பைக் பற்றிய தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியீடு...

பிஎம்டபிள்யூவின் குறைவான எடை கொண்ட மோட்டார்சைக்கிளாக சந்தைப்படுத்தப்படவுள்ள இந்த க்ரூஸர் பைக்கில் 1,802சிசி ஏர்/ஆயில்-கூல்டு இரட்டை-சிலிண்டர் பாக்ஸர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதுதான் இதுவரை பிஎம்டபிள்யூ நிறுவனம் உருவாக்கியுள்ள பெரிய கழற்றி மாற்று வகையிலான என்ஜின் ஆகும்.

பிஎம்டபிள்யூ ஆர் 18 க்ரூஸர் பைக் பற்றிய தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியீடு...

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 4,750 ஆர்பிஎம்-ல் 91 பிஎச்பி பவரையும், 3,000 ஆர்பிஎம்-ல் 157 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது. இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு வழங்கப்பட்டுள்ள 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் திறந்த ஷாஃப்ட் ட்ரைவ் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ ஆர் 18 க்ரூஸர் பைக் பற்றிய தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியீடு...

மேலும் இந்த பைக் அதிகப்பட்சமாக 178 kmph வேகத்தில் இயங்கக்கூடியதாகவும் பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது. பார்த்தவுடன் கவரும் விதத்திலான டிசைன் அமைப்புகளை கொண்ட இந்த க்ரூஸர் பைக்கில் லைன்கள் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூ ஆர் 18 க்ரூஸர் பைக் பற்றிய தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியீடு...

புதிய ஆர் 18 பைக்கின் முன்புறத்தில் எல்இடி தரத்திலான டிஆர்எல் விளக்குகள் வட்ட வடிவிலான ஹெட்லேம்பில் பொருத்தப்பட்டுள்ளன. இதனுடன் ஹேண்டில்பாரில் சைட் டர்ன் சிக்னல்கள், சிங்கிள்-பேட் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் மீனின் வால் வடிவிலான எக்ஸாஸ்ட் உள்ளிட்டவற்றை பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்த புதிய க்ரூஸர் பைக் பெற்றுள்ளது.

பிஎம்டபிள்யூ ஆர் 18 க்ரூஸர் பைக் பற்றிய தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியீடு...

ஆர் 18 மற்றும் ஆர் 18 முதல் எடிசன் என்ற இந்த பைக்கின் இரு வேரியண்ட்களும் கருப்பு ஸ்ட்ரோம் மெட்டாலிக் நிறத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன. இந்த இரு பைக்குகளையும் இரட்டை பின்ஸ்டிரிப்பிங் மற்றும் கூடுதலான க்ரோம் பாகங்கள் தான் வேறுப்படுத்தி காட்டுகின்றன.

பிஎம்டபிள்யூ ஆர் 18 க்ரூஸர் பைக் பற்றிய தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியீடு...

இவற்றுடன் புதிய ஆர் 18 பைக்கிற்கு மழை, ரோல் மற்றும் ராக் என்ற மூன்று விதமான ரைடிங் மோட்களை பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்கியுள்ளது. இவை மட்டுமில்லாமல் ஆட்டோமேட்டிக் ஸ்டேபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் ட்ராக் டார்க் கண்ட்ரோல் போன்ற வசதிகளும் இந்த பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ ஆர் 18 க்ரூஸர் பைக் பற்றிய தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியீடு...

17,495 டாலர்களில் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த க்ரூஸர் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை இந்தியாவில் ரூ.13.36 லட்சமாக நிர்ணயிக்கப்படவுள்ளது. ஆர் 18 முதல் எடிசன் இதனை விட ரூ.1.64 லட்சம் அதிகமாக விற்பனை செய்யப்படவுள்ளது.

பிஎம்டபிள்யூ ஆர் 18 க்ரூஸர் பைக் பற்றிய தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியீடு...

அடாப்டிவ் ஹெட்லைட், ஹில்-ஸ்டார்ட் கண்ட்ரோல், ரிவர்ஸ் அசிஸ்ட் உள்ளிட்ட இந்த க்ரூஸர் பைக்கிற்கான ப்ரீமியம் பேக்கேஜ்ஜும் விற்பனை செய்யப்படவுள்ளன. இதன் விலை ரூ.1.10 லட்சமாக நிர்ண்யிக்கப்படவுள்ளது. இதுமட்டுமில்லாமல் ஆன்டி-தீஃப்ட் அலாரம், ஹீட்டட் க்ரிப்கள் மற்றும் லாக் செய்யும் வகையிலான பெட்ரோல் டேங்க் மூடி போன்றவை அடங்கிய பேக்கேஜும் ரூ.17,000-ல் விற்பனை செய்யப்படவுள்ளது.

பிஎம்டபிள்யூ ஆர் 18 க்ரூஸர் பைக் பற்றிய தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியீடு...

ஹார்லி-டேவிட்சன் மற்றும் இந்தியன் மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட ப்ரீமியம் பைக் நிறுவனங்களின் சில மோட்டார்சைக்கிள்கள் உடன் போட்டியிடவுள்ள பிஎம்டபிள்யூ ஆர் 18 க்ரூஸர் பைக் இந்தியாவில் எத்தனை யூனிட்கள் கிடைக்கும் என்பது குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, April 4, 2020, 19:41 [IST]
English summary
BMW R 18 priced from INR 13.36 lakh in the USA
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+