பிஎம்டபிள்யூ ஆர்18 க்ரூஸர் பைக்கிற்கு இந்தியாவில் ரகசிய முன்பதிவு!

பிஎம்டபிள்யூ ஆர்18 க்ரூஸர் பைக்கிற்கு இந்தியாவில் ரகசியமாக முன்பதிவு ஏற்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிஎம்டபிள்யூ ஆர்18 க்ரூஸர் பைக்கிற்கு இந்தியாவில் ரகசிய முன்பதிவு!

பிஎம்டபிள்யூ ஆர்18 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இந்த க்ரூஸர் வகை பைக் ஹார்லி டேவிட்சன், இந்தியன் உள்ளிட்ட விலை உயர்ந்த க்ரூஸர் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு கடும் போட்டியாக வர இருக்கிறது. இந்தியாவிலும் இந்த புதிய பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பெங்களூர், டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் முன்பதிவு ரகசியமாக நடக்கிறதாம்.

பிஎம்டபிள்யூ ஆர்18 க்ரூஸர் பைக்கிற்கு இந்தியாவில் ரகசிய முன்பதிவு!

பிஎம்டபிள்யூ ஆர்18 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இந்த க்ரூஸர் வகை பைக் ஹார்லி டேவிட்சன், இந்தியன் உள்ளிட்ட விலை உயர்ந்த க்ரூஸர் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு கடும் போட்டியாக வர இருக்கிறது.

பிஎம்டபிள்யூ ஆர்18 க்ரூஸர் பைக்கிற்கு இந்தியாவில் ரகசிய முன்பதிவு!

முதலாவதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த புதிய க்ரூஸர் பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. அமெரிக்காவில் 18,499 டாலர் விலையிலும் (இந்திய மதிப்பில் ரூ.14.13 லட்சம்) , ஐரோப்பாவில் 22,800 யூரோ விலையிலும் ( இந்திய மதிப்பில் ரூ.18.51 லட்சம்) விற்பனைக்கு கொண்டு வரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ ஆர்18 க்ரூஸர் பைக்கிற்கு இந்தியாவில் ரகசிய முன்பதிவு!

இந்த சூழலில், இந்தியாவிலும் இந்த புதிய பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், அதிகாரப்பூர்வமாக தகவல்கள் எதுவும் இல்லை.

பிஎம்டபிள்யூ ஆர்18 க்ரூஸர் பைக்கிற்கு இந்தியாவில் ரகசிய முன்பதிவு!

மேலும், பெங்களூர், டெல்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள பிஎம்டபிள்யூ மோட்டோராட் டீலர்களில் இந்த பைக்கிற்கு ரகசியமாக முன்பதிவு ஏற்கப்படுவதாகவும் கார் அண்ட் பைக் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ ஆர்18 க்ரூஸர் பைக்கிற்கு இந்தியாவில் ரகசிய முன்பதிவு!

பிஎம்டபிள்யூ ஆர்18 க்ரூஸர் வகை பைக் மாடலானது ஸ்டான்டர்டு மற்றும் ஃபர்ஸ்ட் எடிசன் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த மாடலானது பிஎம்டபிள்யூ ஆர்5 பைக்கின் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ ஆர்18 க்ரூஸர் பைக்கிற்கு இந்தியாவில் ரகசிய முன்பதிவு!

பிஎம்டபிள்யூ ஆர்18 பைக்கின் பெட்ரோல் டேங்க் கண்ணீர் துளி போன்ற வடிவமைப்புடன் இருக்கிறது. ஒற்றை இருக்கை அமைப்பு, வட்ட வடிவிலான ஹெட்லைட், பிரம்மாண்ட பின்புற மட்கார்டு, உயர்த்தப்பட்ட அமைப்புடன் கைப்பிடிகள் ஆகியவை இதனை முழுமையான க்ரூஸர் வகை மாடலாகவும், நீண்ட தூர பயணத்திற்கு ஏற்றதாகவும் காட்டுகிறது.

பிஎம்டபிள்யூ ஆர்18 க்ரூஸர் பைக்கிற்கு இந்தியாவில் ரகசிய முன்பதிவு!

வயர் ஸ்போக்ஸ் சக்கரங்கள், க்ரோம் பாகங்கள் உள்ளிட்ட பாரம்பரிய பாரம்பரிய வடிவமைப்பிலான தோற்றத்தை தருகிறது. எல்இடி ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றது.

பிஎம்டபிள்யூ ஆர்18 க்ரூஸர் பைக்கிற்கு இந்தியாவில் ரகசிய முன்பதிவு!

இந்த பைக்கில் 1,802 சிசி ஆயில்கூல்டு பாக்ஸர் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சசமாக 91 எச்பி பவரையும், 157 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. சங்கிலி மற்றும் பெல்ட் இல்லாமல் நேரடியாக ஷாஃப்ட் டிரைவ் மூலமாக எஞ்சின் சக்தி சக்கரத்திற்கு கடத்தப்படுகிறது. ரிவர்ஸ் கியர் ஆப்ஷனும் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 9, 2020, 15:37 [IST]
English summary
Rumor has it that BMW Motorrad dealers in India have unofficially begun accepting bookings for the BMW R18 motorcycle against a token amount of Rs 1 lakh. According to carandbike, prices for the motorcycle have been announced for the company's European and American markets as well.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+