இந்திய சாலையில் காட்சிதந்த பிஎம்டபிள்யூவின் புதிய 1800சிசி பைக்... விரைவில் அறிமுகமாகுகிறது...

வருகிற பண்டிக்கை காலத்தில் இந்தியாவில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்தின் ஆர்18 பைக் இந்திய சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து பைக்வாலே செய்தி தளம் வெளியிட்டு செய்தியினை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சாலையில் காட்சிதந்த பிஎம்டபிள்யூவின் புதிய 1800சிசி பைக்... விரைவில் அறிமுகமாகுகிறது...

இந்த ஆண்டு துவக்கத்தில் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் அதன் ஆர்18 ஹெரிடே க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிளை அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திற்கு கொண்டு வந்திருந்தது. இதனால் இந்த க்ரூஸர் பைக் மிக விரைவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுவிடும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்தனர்.

இந்திய சாலையில் காட்சிதந்த பிஎம்டபிள்யூவின் புதிய 1800சிசி பைக்... விரைவில் அறிமுகமாகுகிறது...

ஆனால் அதன்பின் கொரோனாவின் தாக்கத்தால் தற்போதுவரை இதன் அறிமுகம் நடைபெறவில்லை. இந்த நிலையில் தான் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளதால் தற்போது இந்தியாவில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது பிஎம்டபிள்யூ ஆர்18 பைக் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்திய சாலையில் காட்சிதந்த பிஎம்டபிள்யூவின் புதிய 1800சிசி பைக்... விரைவில் அறிமுகமாகுகிறது...

இந்த ஆகஸ்ட் மாதத்தில் குர்கானில் நெருங்கிய தனிநபர் குழுக்களுக்கு காட்சிப்படுத்தப்படவுள்ள இந்த ஆர்18 பைக் மாடல் அதன்பின் அறிமுகத்திற்கு முன்னதாக சண்டிகரில் தனிப்பட்ட மாதிரிக்காட்சிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இந்திய சாலையில் காட்சிதந்த பிஎம்டபிள்யூவின் புதிய 1800சிசி பைக்... விரைவில் அறிமுகமாகுகிறது...

பிஎம்டபிள்யூவின் ஆர்5 மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால் ஆர்18 பைக்கும் வழக்கமான ரெட்ரோ-டிசைனில் தான் தோற்றமளிக்கிறது. இந்த க்ரூஸர் பைக்கை தயாரிப்பு நிறுவனம் ஸ்டாண்டர்ட் & ஃபர்ஸ்ட் எடிசன் என்ற இரு விதமான வேரியண்ட்களில் இந்தியாவில் சந்தைப்படுத்தலாம்.

இந்திய சாலையில் காட்சிதந்த பிஎம்டபிள்யூவின் புதிய 1800சிசி பைக்... விரைவில் அறிமுகமாகுகிறது...

இதில் டாப்-ஸ்பெக் ‘ஃபர்ஸ்ட் எடிசன்' ஆனது பின்-ஸ்ட்ரிப்பிங், வரலாற்றுமிக்க டேங்க் டிசைன், லெதர் பெல்ட் மற்றும் கையுறைகள் என பழமையான பிஎம்டபிள்யூவின் க்ரூஸர் பைக்குகளுக்கு உண்டான அத்தனை சிறப்பம்சங்களையும் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டில் இருந்து கூடுதலாக கொண்டிருக்கும்.

இந்திய சாலையில் காட்சிதந்த பிஎம்டபிள்யூவின் புதிய 1800சிசி பைக்... விரைவில் அறிமுகமாகுகிறது...

பிஎம்டபிள்யூ ஆர்18 பைக்கின் முக்கிய பாகங்கள் என்று பார்த்தோமேயானால், எல்இடி ஹெட்லேம்பள், எல்இடி டெயில்லேம்ப்கள், எல்இடி இண்டிகேட்டர்கள், மூன்று ரைடிங் மோட்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், மோட்டார் ஸ்லிப் ஒழுங்குமுறை மற்றும் பெரிய அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை உள்ளன.

இந்திய சாலையில் காட்சிதந்த பிஎம்டபிள்யூவின் புதிய 1800சிசி பைக்... விரைவில் அறிமுகமாகுகிறது...

இதன் 1,802சிசி ஏர்-கூல்டு, 2-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 4,750 ஆர்பிஎம்-ல் 90 பிஎச்பி பவரையும், 3,000 ஆர்பிஎம்-ல் 158 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. சஸ்பென்ஷன் அமைப்பாக முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மைய ஷாக் ஸ்ட்ரட்டும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்திய சாலையில் காட்சிதந்த பிஎம்டபிள்யூவின் புதிய 1800சிசி பைக்... விரைவில் அறிமுகமாகுகிறது...

ப்ரேக்கிங் பணியை கவனிக்க 300மிமீ-ல் முன்புறத்தில் ட்வின்-டிஸ்க்கும், பின்புறத்தில் சிங்கிள்-டிஸ்க்கும் வழங்கப்பட்டுள்ளது. 19-இன்ச் மற்றும் 16 இன்ச் என்ற அளவுள்ள இதன் முன்/பின் சக்கரங்களில் முறையே 120/70 மற்றும் 180/65 என்ற அளவுகளில் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்திய சாலையில் காட்சிதந்த பிஎம்டபிள்யூவின் புதிய 1800சிசி பைக்... விரைவில் அறிமுகமாகுகிறது...

ஜெர்மனை சேர்ந்த பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் ப்ராண்ட்டின் லேட்டஸ்ட் இந்திய அறிமுக பைக் மாடலாக விளங்கவுள்ள இந்த ஆர்18 பைக்கிற்கான முன்பதிவுகள் சில வாரங்களுக்கு முன்பே துவங்கப்பட்டுவிட்டன. இதனால் இதன் அறிமுகத்தை தீபாவளியின் நெருக்கத்தில் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

English summary
BMW R18 spotted in India; to be launched next month
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X