பஜாஜ் நிறுவனத்தின் மற்றொரு புதிய அறிமுகம்... பிஎஸ்6 பல்சர் என்எஸ்160 பைக் சந்தைக்கு வந்தது...

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய பிஎஸ்6 பல்சர் என்எஸ்160 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சந்தையில் பிரபலமான என்எஸ்200 மாடலின் சிறிய ரக மோட்டார்சைக்கிளாக சந்தையில் விளங்கும் இந்த 160சிசி பைக்கின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.1.04 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் நிறுவனத்தின் மற்றொரு புதிய அறிமுகம்... பிஎஸ்6 பல்சர் என்எஸ்160 பைக் சந்தைக்கு வந்தது...

புதிய என்எஸ்160 பைக்கில் 160.3சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு, ட்வின் ஸ்பார்க் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 9,000 ஆர்பிஎம்-ல் 17.2 பிஎச்பி பவரையும், 7,250 ஆர்பிஎம்-ல் 14.6 என்எம் டார்க் திறனை 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் பைக்கிற்கு வழங்கவல்லது.

பஜாஜ் நிறுவனத்தின் மற்றொரு புதிய அறிமுகம்... பிஎஸ்6 பல்சர் என்எஸ்160 பைக் சந்தைக்கு வந்தது...

இந்த என்ஜின் அமைப்பில் கூடுதலாக ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டிருப்பதால் பைக்கின் செயல்படுதிறன் மற்றும் எரிபொருள் திறன் அதிகரித்துள்ளது. ஏனெனில் இந்த என்ஜின் பிஎஸ்4 தரத்தில் 8,500 ஆர்பிஎம்-ல் 15.5 பிஎச்பி பவரை தான் வெளிப்படுத்தி வருகிறது.

பஜாஜ் நிறுவனத்தின் மற்றொரு புதிய அறிமுகம்... பிஎஸ்6 பல்சர் என்எஸ்160 பைக் சந்தைக்கு வந்தது...

மற்றப்படி தோற்ற அளவில் பார்த்தால் இந்த பிஎஸ்6 பைக் தற்போதைய பிஎஸ்4 மாடலை தான் ஒத்து காணப்படுகிறது. இதன் காரணமாக அதே செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், மஸ்குலர் எரிபொருள் டேங்க், பிளவுப்பட்ட இருக்கை அமைப்பு மற்றும் பின்புற க்ராப் ரெயில், என்ஜின் கௌல், அலாய் சக்கரங்கள், முரட்டுத்தனமான தோற்றத்தில் ஹாலோஜன் ஹெட்லேம்ப், கிளிப்-ஆன் ஹேண்டில்பார்கள் உள்ளிட்ட பாகங்களை அப்படியே பெற்றுள்ளது.

பஜாஜ் நிறுவனத்தின் மற்றொரு புதிய அறிமுகம்... பிஎஸ்6 பல்சர் என்எஸ்160 பைக் சந்தைக்கு வந்தது...

இதேபோல் ஃபோசில் க்ரே, வைல்ட் ரெட் மற்றும் சாஃபியர் ப்ளூ என்ற மூன்று நிறத்தேர்வுகளை தான் தொடர்ந்துள்ளது.

ப்ரேக்கிங் பணியை தற்போதைய என்எஸ்160 பிஎஸ்4 பைக்கில் உள்ள அதே 260 மிமீ டிஸ்க் முன்புறத்திலும், 230மிமீ டிஸ்க் பின்புறத்திலும் கவனிக்க உள்ளன.

பஜாஜ் நிறுவனத்தின் மற்றொரு புதிய அறிமுகம்... பிஎஸ்6 பல்சர் என்எஸ்160 பைக் சந்தைக்கு வந்தது...

இவற்றுடன் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனிற்கு முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸும், பின்புறத்திலும் ஷாக் அப்சார்ப்ஷனும் உள்ளன.

பஜாஜ் நிறுவனத்தின் மற்றொரு புதிய அறிமுகம்... பிஎஸ்6 பல்சர் என்எஸ்160 பைக் சந்தைக்கு வந்தது...

இதில் பின்புற ஷாக் அப்சார்ப்ஸை நைட்ராக்ஸ் மோனோஷாக் கவனித்து கொள்கிறது. ஏற்கனவே கூறியதுபோல், எக்ஸ்ஷோரூமில் புதிய பஜாஜ் பல்சர் என்எஸ்160 பிஎஸ்6 பைக்கின் விலை ரூ.1,04,652 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் நிறுவனத்தின் மற்றொரு புதிய அறிமுகம்... பிஎஸ்6 பல்சர் என்எஸ்160 பைக் சந்தைக்கு வந்தது...

இது தற்போதைய தலைமுறை பைக்கை விட ரூ.10,457 அதிகமாகும். இந்த 160சிசி பைக்கிற்கு போட்டியாக ரூ.1,00,950 விலையில் பிஎஸ்6 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 2, 2020, 16:21 [IST]
English summary
BS6 Bajaj Pulsar NS160 launched, priced at INR 1.04 lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+