ஹீரோ ஸ்பிளென்டர் ப்ளஸ் எஃப்ஐ பிஎஸ்6 பைக்கின் தோற்றம் வெளியானது..!

இந்திய சந்தையில் மிக சிறப்பாக விற்பனையாகும் மோட்டார்சைக்கிள்களில் ஒன்றாக உள்ள ஸ்பிளென்டர் ப்ளஸ் மாடலை பிஎஸ்6 தரத்தில் அடுத்த மார்ச் மாதத்தில் விற்பனைக்கு கொண்டுவர ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

ஹீரோ ஸ்பிளென்டர் ப்ளஸ் எஃப்ஐ பிஎஸ்6 பைக்கின் தோற்றம் வெளியானது..!

பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான மோட்டார்சைக்கிளை முதன்முதலாக இந்தியாவில் அறிமுகம் செய்த நிறுவனம் என்ற பெயரை பெற்றுள்ள ஹீரோ மோட்டோகார்ப், கடந்த ஆண்டில் ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் பிஎஸ்6 பைக்கை அறிமுகப்படுத்தியிருந்தது.

ஹீரோ ஸ்பிளென்டர் ப்ளஸ் எஃப்ஐ பிஎஸ்6 பைக்கின் தோற்றம் வெளியானது..!

இந்த நிலையில் தற்போது சந்தையில் உள்ள மற்றொரு பிரபலமான மாடலான ஸ்பிளென்டர் ப்ளஸ் பைக்கை பிஎஸ்6-க்கு அப்டேட் செய்து வெளியிடவுள்ளது. 97.2சிசி ஏர்-கூல்டு, 4-ஸ்ட்ரோக், சிங்கிள்-சிலிண்டர் என்ஜின், கார்புரேட்டட் சிஸ்டத்துடன் இந்த புதிய பிஎஸ்6 பைக்கில் வழங்கப்பட்டுள்ளது.

ஹீரோ ஸ்பிளென்டர் ப்ளஸ் எஃப்ஐ பிஎஸ்6 பைக்கின் தோற்றம் வெளியானது..!

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8.36 பிஎச்பி பவரையும் 8.05 என்எம் டார்க் திறனையும் பைக்கிற்கு வழங்கும் ஆற்றல் கொண்டது. புதிய மாசு உமிழ்வு விதி விரைவில் இந்தியா முழுவதும் அமலாகவுள்ளதால் ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் தொழிற்நுட்பம் இந்த புதிய ஸ்பிளென்டர் பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது.

ஹீரோ ஸ்பிளென்டர் ப்ளஸ் எஃப்ஐ பிஎஸ்6 பைக்கின் தோற்றம் வெளியானது..!

பிஎஸ்6 அப்டேட் மட்டுமின்றி, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய ஸ்பிளென்டர் ப்ளஸ் பிஎஸ்6 பைக்கின் கிராஃபிக்ஸ் மற்றும் உடற் அமைப்பிலும் வாடிக்கையாளர்களை கவர இருப்பது தற்போது கசிந்துள்ள இதன் புகைப்படங்களின் மூலம் தெரிய வருகிறது.

ஹீரோ ஸ்பிளென்டர் ப்ளஸ் எஃப்ஐ பிஎஸ்6 பைக்கின் தோற்றம் வெளியானது..!

காற்று மாசுவை குறைவாக ஏற்படுத்தும் விதமாக கூடுதலாக கேட்டலிடிக் கன்வெர்டரை புதிய பிஎஸ்6 ஸ்பிளென்டர் பைக் பெற்றுள்ளது. இதேபோல் பின்புற இண்டிகேட்டர் விளக்கின் டிசைனும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போதைய மாடலில் உள்ள இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை தான் இந்த பிஎஸ்6 பைக்கும் பெற்றுள்ளது. மேலும் தற்போது கசிந்துள்ள புகைப்படங்கள் பிஎஸ்6 ஸ்பிளென்டர் பைக் சிவப்பு-கருப்பு மற்றும் ஸ்கை ப்ளூ-க்ரே என்ற இரு புதிய ட்யூல்-டோன் பெயிண்ட் அமைப்பை பெற்றிருப்பதையும் வெளிக்காட்டுகின்றன.

ஹீரோ ஸ்பிளென்டர் ப்ளஸ் எஃப்ஐ பிஎஸ்6 பைக்கின் தோற்றம் வெளியானது..!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஸ்பிளென்டர் ப்ளஸ் பிஎஸ்4 வெர்சன் பைக்கை ரூ.50,860 என்ற விலையில் எக்ஸ்ஷோரூமில் விற்பனை செய்து வருகிறது. பிஎஸ்6 அப்டேட்டால் இதன் விலையில் உயர்வு இருக்கும்.

ஹீரோ ஸ்பிளென்டர் ப்ளஸ் எஃப்ஐ பிஎஸ்6 பைக்கின் தோற்றம் வெளியானது..!

நமக்கு தெரிந்துள்ள தகவலின்படி, பிஎஸ்6-க்கு மாற்றப்பட்ட ஸ்பிளென்டர் ப்ளஸ் பைக் ரூ.58,000- 60,000 வரையில் சந்தையில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோ ஸ்பிளென்டர் ப்ளஸ் எஃப்ஐ பிஎஸ்6 பைக்கின் தோற்றம் வெளியானது..!

மற்றப்படி இந்த பைக்கின் அறிமுகம், விலை பற்றிய எந்த தகவலும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. எப்படியிருந்தாலும் அடுத்த மாதத்தில் இந்த பிஎஸ்6 ஸ்பிளென்டர் பைக்கை சந்தையில் எதிர்பார்க்கலாம்.

Image Courtesy: rider VEER JI/YouTube

Most Read Articles

English summary
Upcoming BS6 Hero Splendor Plus FI Pics Leaked, Launch Soon
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X