டீலர்ஷிப் ஷோரூம்களில் பிஎஸ்6 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்... ஸ்பை படங்கள் வெளியானது...

சமீபத்தில் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் டீசர் படத்தை வெளியிட்டதை தொடர்ந்து பிஎஸ்6 எக்ஸ்பல்ஸ் 200 பைக்கை டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் பணியினை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் துவங்கியுள்ளது. இதுகுறித்து எம்ஆர்டி விலாக் என்ற யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை இந்த செய்தியில் பார்ப்போம்.

டீலர்ஷிப் ஷோரூம்களில் பிஎஸ்6 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்... ஸ்பை படங்கள் வெளியானது...

மிக விரைவில் ஹீரோவின் இந்த பிஎஸ்6 பைக் அறிமுகமாகவுள்ளதால் தற்போதில் இருந்து டீலர்ஷிப்களை சென்றடைய துவங்கியுள்ளது. தற்போதைய பிஎஸ்4 வெர்சனுடன் ஒப்பிடும்போது இந்த பிஎஸ்6 பைக்கில் மிகவும் நுட்பமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

டீலர்ஷிப் ஷோரூம்களில் பிஎஸ்6 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்... ஸ்பை படங்கள் வெளியானது...

இதனுடன் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டுள்ள இதன் என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகள் சிறிது குறைந்துள்ளன. அதாவது இதன் 199.6சிசி, ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன், ஏர்-கூல்டு என்ஜின் தற்சமயம் பிஎஸ்4 வெர்சனில் 18.4 பிஎச்பி பவரையும், 17.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

டீலர்ஷிப் ஷோரூம்களில் பிஎஸ்6 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்... ஸ்பை படங்கள் வெளியானது...

அதுவே பிஎஸ்6 தரத்தில் இந்த என்ஜின் சற்று குறைவாக 18.1 பிஎச்பி மற்றும் 14.1 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக பைக்கிற்கு வழங்கும். அதேபோல் புதிய கேட்-கானினால் எக்ஸாஸ்ட் நேரடியாக என்ஜின் அடிப்பகுதியில் இருந்து திருப்பி விடப்பட்டுள்ளது.

டீலர்ஷிப் ஷோரூம்களில் பிஎஸ்6 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்... ஸ்பை படங்கள் வெளியானது...

ஆனால் ஆச்சரியமளிக்கும் விதமாக பைக்கின் க்ரவுண்ட் கிளியரென்ஸில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும் பைக்கின் மொத்த கெர்ப் எடை 3 கிலோ உயர்ந்து 157 கிலோ ஆக அப்டேட்டாகியுள்ளது. இவை தவிர்த்து பைக்கில் வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை என்பது தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.

இதனால் வட்ட வடிவிலான எல்இடி ஹெட்லைட், சற்று உயரத்தில் கொக்கு வடிவிலான ஃபெண்டர் உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இருக்காது. ஒரே துண்டாக வழங்கப்படும் இருக்கை மிகவும் சவுகரியமானதாக இருக்கும். டெயில்லைட்கள் மற்றும் இண்டிகேட்டர்கள் பராம்பரியமான ஹலோஜன் யூனிட்டில் வழங்கப்படவுள்ளன.

டீலர்ஷிப் ஷோரூம்களில் பிஎஸ்6 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்... ஸ்பை படங்கள் வெளியானது...

இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழக்கம்போல் ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் முழு-டிஜிட்டல் எல்சிடி தரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனிற்கு முன்புறத்தில் 190மிமீ ட்ராவல் உடன் 37மிமீ ஃபோர்க்குகளும், பின்புறத்தில் 10 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

டீலர்ஷிப் ஷோரூம்களில் பிஎஸ்6 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்... ஸ்பை படங்கள் வெளியானது...

ப்ரேக்கிங் பணிக்கு 21 இன்ச்சில் உள்ள இதன் முன் சக்கரத்தில் 276மிமீ-லும், 17 இன்ச்சில் உள்ள பின்சக்கரத்தில் 220மிமீ-லும் டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்படவுள்ளன. இதனுடன் சிங்கிள்-சேனல் ஏபிஎஸும் பாதுகாப்பிற்கு உள்ளது. ஒரே ஒரு ட்ரிம்மில் சந்தைப்படுத்தபடவுள்ள பிஎஸ்6 எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் விலை ரூ.1.2 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, July 13, 2020, 22:24 [IST]
English summary
hero-xpluse-200-spotted
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+